அந்தோணி முத்து
8/25/2010 | Author: ஜெயந்தி
சில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை. நேற்று இன்ட்லியை திறந்தவுடன் மேலேயே டோண்டு அவர்களின் பதிவு இருந்தது. பதிவர் அந்தோணி முத்து மறைவு என்ற தகவலுடன்.

இந்த ப்ளாக் துவங்கியவுடன் இதில் தமிழில் டைப் பண்ணுவதற்கு அம்மா என்றால் எஎம்எம்எ என்று ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் என்று என் பையன் சொன்னான். எனக்கு இந்தக் கதையே வேணாம் தமிழிலேயே எழுத்துக்களை டைப் பண்ண வேண்டும் அதற்கு ஏதாவது செய்துகொடு என்று கேட்டேன். அவன் அழகி ஃபாண்டை டவுண் லோடு செய்து தந்தான். இப்போதும் அதைத்தான் உபயோகிக்கிறேன். மெயில் அனுப்ப வேண்டுமானால்கூட (எனக்கு ஆங்கிலம் படிப்பது, எழுதுவது எல்லாம் அலர்ஜி) அழகியிலேயே டைப் பண்ணி அனுப்புகிறேன்.

யாரோ தமிழ் ப்ளாக்கை கண்டுபிடித்துக் கொடுத்தார்கள். யாரோ அழகி ஃபாண்டை கண்டுபிடித்துக்கொடுத்தார்கள் என்று உபயோகித்துக்கொண்டிருந்தேன். இப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். பாலாஜி என்ற பதிவர் அவருக்கு உறுதுணையாக இருந்திருப்பதை அறிகிறேன்.அந்தோணி முத்துவைப் பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை. அவர் மாற்றுத் திறனாளி என்று அறிகிறேன். அவரது ப்ளாக்கிற்குச் சென்று படித்தேன். அவரது அண்ணனைப்பற்றி எழுதியுள்ளார். அவரது பிரிந்துபோன காதலியைப் பற்றிய பதிவைப் படிக்க முடியவில்லை அத்தனை சோகம். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளைத் தாங்கி அவரது வலைப்பூ உள்ளது.

அவருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
This entry was posted on 8/25/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On August 25, 2010 at 10:41 AM , Chitra said...

இப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார்.

... அற்புதம்!

......அவரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

 
On August 25, 2010 at 10:41 AM , Chitra said...

அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளைத் தாங்கி அவரது வலைப்பூ உள்ளது.


.....தனக்கென முத்திரை பதித்து விட்டு சென்று இருக்கிறார்!

 
On August 25, 2010 at 11:20 AM , ஹுஸைனம்மா said...

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு; தன்னம்பிக்கைக்கு ஒரு அடையாளமாக இருப்பவர்.

 
On August 25, 2010 at 11:39 AM , அம்பிகா said...

இப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் \\அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார்.

... அற்புதம்!

......அவரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.\\

 
On August 25, 2010 at 11:41 AM , கே.ஆர்.பி.செந்தில் said...

எனது அஞ்சலிகளும் ..

 
On August 25, 2010 at 12:36 PM , ஜெய்லானி said...

அவரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்

 
On August 25, 2010 at 1:09 PM , அமைதிச்சாரல் said...

நானும் அழகிதான் உபயோகப்படுத்தறேன். அந்தோணிமுத்துவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்...

 
On August 25, 2010 at 1:25 PM , செ.சரவணக்குமார் said...

எனது அஞ்சலிகளும். அவரது தளத்திற்குச் சென்றேன். பாஸிட்டிவ் அந்தோணிமுத்து என்று நண்பர்கள் அழைப்பதாக முகப்பில் குறிப்பிட்டிருக்கிறார். சில இடுகைகளையும் வாசித்தேன். சொந்த ஊரு போனாரு கண்ணீரை வரவழைத்தது.

நானும் ஆரம்பத்தில் 'அழகி' பயன்படுத்தியுள்ளேன். ஒரு நல்ல மனிதரைப்பற்றி காலதாமதமாக அறிந்துகொண்டது வருத்தமே.

 
On August 26, 2010 at 4:19 AM , Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கண்ணீர் அஞ்சலிகள்.. எனது ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கல்களும்.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்..

 
On August 27, 2010 at 3:27 PM , சி. கருணாகரசு said...

திரு அந்தோணி அவர்களுக்கு என் அஞ்சலி.

 
On August 30, 2010 at 11:57 AM , ஜெயந்தி said...

அனைவருக்கும் நன்றி!

 
On September 2, 2010 at 11:42 AM , P.RAGHUVARMAN said...

உங்கள் படைப்புகள் அருமை ...
கணினி டிப்ஸ் மற்றும் பிளாக்கர் டிப்ஸ்
http://www.raghuvarman.co.cc/