வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த ப்ளாக் எனக்கு அறிமுகமானது. வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது. பார்க்காமல் பேசிக்கொள்வது, பாராட்டிக்கொள்வது, திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக்கொள்வது உண்மையிலேயே இது வேறொரு உலகம்தான். இந்த உலகம் எனக்கு மிகவும் பிடித்தமான உலகமாக மாறிப்போனது. எத்தனை எத்தனை உறவுகள். நட்புகள்.
ப்ளாக் தொடங்குவற்கு முன் என்னால் எழுத முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. என்னையும் எழுத வைத்திருக்கிறது கூகுள். என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்களை எழுத வைத்திருக்கிறது. எத்தனை விதமான அனுபவங்கள் எத்தனை விதமான சிந்தனைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான எழுத்துக்கள். பத்திரிகைன்னு எடுத்துக்கொண்டால் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும். அதிலும் தரம் என்று ஒன்று வைத்திருப்பார்கள். இங்கே அதெல்லாம் இல்லை. நமக்கு நாமே ராஜா. அதற்காக ப்ளாக் உலகம் ஒன்றும் பத்திரிகை உலகத்திற்கு குறைந்தது என்று நான் நினைக்கவில்லை.
சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல் சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும். அவரவர் படிப்பு, அறிவு, வளர்ந்த விதம், சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரியே எழுத்துக்கள் அமையும். அதனால் எல்லா எழுத்துக்களும் அவர்களது உணர்வுகளே என்ற வகையில் நான் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.
நாம் எழுதுவதை இன்னொருவர் பாராட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எழுதுவதையும் பாராட்டுகிறார்களே என்று எனக்குத் தோன்றும். நிச்சயம் எல்லோருக்கும் பின்னூட்டம் அதே மகிழ்ச்சியை அளிக்கும் என்று நினைக்கிறேன். நானும் நிறைய பேருக்கு பின்னூட்டமிட நினைப்பேன். என்னுடை வேலைகளுக்கு நடுவே குறைந்த அளவே பின்னூட்டமிட முடிகிறது என்பது எனக்கு மிகப்பெரிய குறையே. ஒருவருக்கு ஒருவர் வாக்களித்துக்கொள்வது, நாம் ஒருவருக்கு வாக்களித்தால்தான் நாமும் நமக்கான வாக்கை எதிர்பார்க்க முடியும். இது ஒன்றும் ஒன்வே இல்லையே.
இப்படியே சந்தோஷமா போயிட்டிருந்த ப்ளாக் உலகத்துல ஒரு சின்ன தேக்கம். சிலபல காரணங்களுக்காக மூன்று மாதங்களுக்கு என்னால் இந்தப்பக்கம் வர முடியாது. மக்களே என்னை மறந்துறாதீங்க. எப்பவாவது நேரம் கிடைத்தால் இந்தப்பக்கம் வருவேன். (யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?)
ஆரஞ்சு கலர் பட்டுப்புடவையை பார்த்தால்
அதை வாங்கிக்கொடுத்த அக்காவின் ஞாபகம்
மயிலிறகைப் பார்த்தால்
சிறுவயது பள்ளித்தோழனோடு
புத்தகத்தில் குட்டிபோட வைத்து
மயிலிறகு வளர்த்த ஞாபகம்
சுவரில் தொங்கும் இயற்கைக் காட்சி படத்தைப்பார்த்தால்
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போது கொடுத்த
தோழி ஞாபகம்
யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?
டிஸ்கி: இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.
This entry was posted on 12/04/2010 and is filed under
அனுபவங்கள்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
35 comments:
எனக்கு பெரிய கருப்பு மூக்கு கண்ணாடி பார்த்தா வரும்)))))))
ஒவ்வொரு பதிவருக்கும் உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள் . தங்களின் அனுபவம் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி கணேஷ்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி பனித்துளி சங்கர்!
(யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?/////
சரியா என் மனதில் இருப்பதை சொல்லிட்டிங்களே
சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல் சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும்.////
என்னை போல உள்ளவர்கள் ஒரு எழுத்தே இல்லை
//சௌந்தர் said...
(யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?/////
சரியா என் மனதில் இருப்பதை சொல்லிட்டிங்களே//
அதுதான் எனக்கு தெரியுமே.
//சௌந்தர் said...
சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல் சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும்.////
என்னை போல உள்ளவர்கள் ஒரு எழுத்தே இல்லை//
நாமெல்லாம் ஒரே இனம்ப்பா.
ஏன் ஏன்....
மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துகள்! :-)
நன்றி சந்தனமுல்லை!
மகிழ்ச்சியான விடுமுறைதான்.
//யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?//
கரக்டா கண்டு பிடிச்சிடீங்களே..இனி எங்களுக்கு தீபாவளிதான்
//யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?//
உண்மையை சொல்லவா? பொய் சொல்லவா?
//இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.///
சேச்சே இது ஒரு ஜப்பானிய மொழி வசனம்னு எனக்கு தெரியாதா என்ன?
நன்றி ரமேஷ்!
ரொம்ப சந்தோஷப்படாதீங்க. டைம் கெடச்சா வருவேன்.
மீண்டு(ம்) வாங்க ....
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?//
உண்மையை சொல்லவா? பொய் சொல்லவா?//
பொய்யே சொல்லிருங்கப்பா
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.///
சேச்சே இது ஒரு ஜப்பானிய மொழி வசனம்னு எனக்கு தெரியாதா என்ன?//
ஜப்பான் மொழி எப்ப கத்துக்கிட்டீங்க?
நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
கண்டிப்பா. புது உற்சாகத்தோட வருவேன்.
யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?
//
நிச்சயமாக சகோதரி... நான் ஒவ்வொரு பதிவிடும் போதும் பழைய பதிவுகளை திருப்பி பார்க்கும் போதும் உங்களுடைய ஞாபகம் வரும்...
விரைவில் வாருங்கள்.. மறவாமல் நாங்களிருக்கிறோம்...
வாங்க ஜெயந்தி...எப்டி மறப்போம்...உங்களை மீண்டும் புல் ஃபோர்ஸ்டுடன் வாங்க!
பதிவர்களின் மனதின் உணர்வுகளை அழகாக பதிவு செய்திருக்கீங்க..
சீக்கிரம் தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..
வேலைகளை முடித்து கொண்டு வாருங்கள். உங்களை நாங்கள் மறப்பதற்கில்லை. நீங்கள் எங்களை மறந்துவிடாதிர்கள்.
இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.
.......தன்னடக்கத்தின் பிறப்பிடம், நீங்க. உங்கள் கருத்துக்கள் மற்றும் எழுத்து நடை, எனக்கு ரொம்ப பிடிக்கும். :-)
எனக்கு முதியோர் கல்வின்னு யாராவது சொன்னா, இல்ல கேட்டா உடனே வருவது உங்க நினைவுதான் :-))
நல்ல அனுபவம்தான் ஒரு முதிர்ச்சியை கொடுக்கிறது. உங்க எழுத்தில் நல்ல முதிர்ச்சி.. அய்யோ.. மூணுமாதத்துக்கு எழுதமாட்டீங்களா.. :((
///யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?///
பாடினியார் என்று படித்தாலோ அல்லது
புலவர் பாட்டி பாடினியார் என்றால் உங்க ஞாபகந்தான் வரும். :))
விடுமுறையை அழகா எஞ்சாய் செஞ்சுட்டு வாங்க..
உங்கள் அனுபவித்துப் பேசுகிறது. வாழ்த்துக்கள்.
ஹேப்பி ஹாலிடேஸ்!
//
இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.
//
இனிமே இத பாத்தா வரும்.............
வலையுலகம் பற்றி சிறப்பாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். நல்லபடியாக விடுமுறையை முடித்து திரும்பி வர வாழ்த்துகள்.
//
டிஸ்கி: இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல//
********
இது கவிதை இல்லைன்னு நான் சொல்லல... ஆனா, கொஞ்சம் கவித்துவமா இருந்திருந்தால், கவிதைன்னு சொல்லி இருக்கலாமோன்னு சொல்ல வந்தேன்...
நான் ரொம்ப மன உளைச்சல்ல இருந்த காலத்துல ப்ளாக்தான் உற்ற தோழனாக இருந்தது. ப்ளாக் எழுத ஆரம்பித்த போது இந்தளவுக்கு எழுதுவேன் என்று நானும் கனவிலும் நினைக்கவில்லை. கூகிளின் சேவை கோடி புண்ணியம். நீங்கள் குறிப்பிட்டது போலவே இது கொடுத்திருக்கும் உறவுகள் அற்புதம்.
என்ன திடீர்னு 'கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு' ன்னு?!
//இங்கே அதெல்லாம் இல்லை. நமக்கு நாமே ராஜா. //
அப்பிடி கெத்தா சொல்லணும்....
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_08.html
வாழ்த்துக்கள் தோழர். சீக்கிரம் எழுத வாங்க.
************************************************
வாங்க தொடர்ந்து எழுத வாங்க!!
------------------------------------------------
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
************************************************
யாராவது கர்ணகொடூரமா பாடும்போது(நான்-னு சொல்லிக்கிற மனசு வரல), வேறயாராவது நீ இப்போ "பாடினி-யா" அப்படின்னு கேட்டா கண்டிப்பா உங்க நினைவு வரும். :-))))