மூளையா? மனசா?
2/08/2010 | Author: ஜெயந்தி
எனக்கும் என் மகளுக்கும் நடந்த சிறு உரையாடல்,

நான் :  ஒரு விஷயத்துல மூளை ஒண்ணு நினைக்கும். மனசு ஒண்ணு நினைக்கும். மூளை அறிவுப்பூர்வமாக சிந்திக்கும். மனசு உணர்ச்சிப்பூர்வமாக சிந்திக்கும். அந்த விஷயத்தை செயல்படுத்தும்போது அந்த நேரத்தில் எது ஜெயிக்கிறதோ (மனசுஅல்லது மூளை) அது நினைத்தது நிறைவேற்றப்படுகிறது. மூளை ஜெயித்தால் பின் விளைவுகள் குறைவாக இருக்கும். மனசு ஜெயிச்சால் பின் விளைவுகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.

மகள் : அது அப்படியில்ல குண்டு (என் செல்லப்பெயர்). இரண்டையுமே மூளைதான் நினைக்கும். மனசுக்கு நினைக்கவெல்லாம் தெரியாது.

நான் : அப்படி மூளைதான் இரண்டையுமே நினைக்குனா ஏன் ரெண்டு விதமா யோசிக்குது. ஒண்ணே ஒண்ணை மட்டும் யோசிக்க வேண்டியதுதானே?

மகள் :  மூளை உனக்கு ரெண்டு ஆப்சன் தருது. அந்த ரெண்டுல இருந்து ஒண்ணை நீ செலக்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.

சொல்லிவிட்டு மகள் சென்றுவிட்டாள்.

எனக்கு அதன் பிறகும் யோசனைகள் வந்துகொண்டேயிருந்தன. முதலாவது மூளைதான் ரெண்டையும் சிந்திக்குன்னா, ஏன் ரெண்டு விதமாக சிந்திக்கணும். ஒரே ஒரு சிந்தனையைக்கொடுத்து நம்மை நிம்மதியாய் வைக்க வேண்டியதுதானே? இரண்டாவது சில நேரங்களில் மூளை ஆப்சென்ட் ஆகிவிடும். பிரச்சனையை எப்டி தீர்க்கிறதுன்னு ஒன்னுமே தோணாது. அப்புறம் நிதானமாக யோசித்தால் நல்ல தீர்வு கிடைக்கும். அப்படி ஆப்சென்ட் ஆவது எதனால். (ஒருவேளை எனக்கு மட்டும் அப்படி ஆப்சென்ட் ஆகிவிடுகிறதோ?) சில நேரங்கள்ல இந்த முடிவ மட்டும்தான் எடுக்கணும்னு மூளை தீர்மானமாச் சொல்லிடும்.

ஒரு வேளை மூளை உள்ளவர்களுக்கு இதெல்லாம் புரியும்போல.
This entry was posted on 2/08/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On February 8, 2010 at 8:25 PM , தமிழ் உதயம் said...

உங்க பொண்ணுக்கு எத்தனை வயது. ரெம்ப தெளிவா, அழகா, திடமா பதிலை கொடுத்து போயிடுச்சு.

 
On February 8, 2010 at 8:57 PM , அண்ணாமலையான் said...

புதுசா சந்தேகத்த கிளப்பிட்டீங்கள்ல ? இனி பாருங்க...

 
On February 9, 2010 at 10:20 AM , malar said...

’’’இரண்டாவது சில நேரங்களில் மூளை ஆப்சென்ட் ஆகிவிடும். பிரச்சனையை எப்டி தீர்க்கிறதுன்னு ஒன்னுமே தோணாது.’’’’

இது மாதிரி என்க்கும் நடந்து இருக்கு.

 
On February 9, 2010 at 11:22 AM , Anonymous said...

i don't thing so and so. Mind (brain) and internal thinking (might comes from heart or unknown place but not from brain). it's my view of opinion. Nice blog...

 
On February 9, 2010 at 5:04 PM , நிகழ்காலத்தில்... said...

நல்ல சிந்தனை சகோ.

வாழ்த்துகள்

மூளை என்ற இடத்தில் அறிவு எனப்போட்டுக் கொள்ளுங்கள்:))

மனம் எப்போதுமே குழந்தைமாதிரி..எப்படி வேண்டுமானாலும் யோசிக்கும்..

அதையும் உள்ளிருந்தே சுட்டிக்காட்டும் அறிவு..

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்

வாழ்த்துகள்

 
On February 9, 2010 at 10:22 PM , ஹிப்ஸ்... said...

ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு. குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது, நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது, ஊசிக்காதில் நூலைச் செருகுவது, கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது, உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,

"தலைவர் அவர்களே! தாய்மார்களே!" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,

"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை!

ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.

 
On February 10, 2010 at 6:26 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்! ஏங்க வயசக்கேட்டு குடும்பத்துல கொழப்பத்த ஏற்படுத்தப்பாக்குறீங்களே?

நன்றி அண்ணாமலையான்! என்ன பண்ணப்போறீங்க?

நன்றி மலர்! நல்ல வேளை, எனக்கு துணைக்கு ஒரு ஆள் இருக்கு.

 
On February 10, 2010 at 6:28 PM , ஜெயந்தி said...

நன்றி கணேஷ் ராம்!

நன்றி நிகழ்காலத்தில்!

நன்றி ஹிப்ஸ்!

மூவரின் கருத்துரைகளுக்கும் நன்றி!

 
On February 11, 2010 at 10:19 PM , தமிழ் உதயம் said...

! ஏங்க வயசக்கேட்டு குடும்பத்துல கொழப்பத்த ஏற்படுத்தப்பாக்குறீங்களே?/////////
தவறா எடுத்துக்காதீங்க. சின்ன குழந்தையா ன்னு தெரிஞ்சுக்க கேட்டேன். சின்ன குழந்தையா இருந்தா அதன் சிந்தனைக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.

 
On February 12, 2010 at 3:28 AM , கமலேஷ் said...

இந்த குழப்பம் உங்களுக்கு மட்டும் இல்ல அனைவருக்குமே உண்டு...மனசு சொல்றத விட அறிவு சொல்றது பல நேரங்களில் சரியாகவே இருக்கும் என்று தோன்றுகிறது....ஏன்னா மனசுக்கு உங்கள மட்டும் தான் தெரியும் ஆனால் அறிவுக்கு இந்த உலகத்தையே தெரியும்.....உங்க மகள் சொன்னதும் மிக சரிதான்.....அறிவு வேறு மனசு வேறு என்று எதுவும் கிடையாது...மனசுங்கிறது நீங்க எதிர்பார்கிறது அவ்வளவே...உங்களின் பதிவுமிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

 
On February 13, 2010 at 5:22 PM , R.Gopi said...

இப்போ தான் முதன் முதலாக உங்களின் வலைக்கு வருகிறேன் ஜெயந்தி...

//அது அப்படியில்ல குண்டு (என் செல்லப்பெயர்)//

இப்போவே டெர்ரரா?? யப்பா....

//மூளை உனக்கு ரெண்டு ஆப்சன் தருது. அந்த ரெண்டுல இருந்து ஒண்ணை நீ செலக்ட் பண்ணிக்க வேண்டியதுதான்//

ஹா..ஹா...ஹா...சூப்பர்... இந்த காலத்து பசங்கள ஒண்ணும் பண்ண முடியாது...

பிரமாதம்.... நல்லா இருக்கு... வாழ்த்துக்கள் ஜெயந்தி...

நேரமிருப்பின் இங்கேயும் வருகை தாருங்களேன்..

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-1) http://edakumadaku.blogspot.com/2010/02/1.html சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-2) http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html

 
On February 22, 2010 at 9:29 PM , ஜெயந்தி said...

நன்றி தமிழ் உதயம்!
பிள்ளைகள் வளர்ந்த பிள்ளைகள். அவர்களைப் பற்றி விவரங்கள் போடக்கூடாது என்று முதலிலேயே உடன்படிக்கை இருக்கிறது. அதைத்தான் சொன்னேன்.

 
On February 22, 2010 at 9:30 PM , ஜெயந்தி said...

நன்றி கமலேஷ்!
நீங்கள் சொல்வது சரிதான்.

 
On February 22, 2010 at 9:31 PM , ஜெயந்தி said...

நன்றி கோபி!
அவசியம் வருகிறேன்.