செல்வேந்திரன் வீட்டுக்கு யட்சியும், ஆதி வீட்டுக்கு விரலியும் வந்திருப்பதாக அறிந்தேன். நம்ம வீட்டுக்கு யாருமே வரலயேன்னு மனசு முழுக்க சோகம். மொச்சக்கொட்டயும் நெத்திலிக் கருவாடும் போட்டு குழம்பு வைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பேச்சுக் குரல் கேட்டது. யாரது? அம்மா ஹால்ல டிவி பார்த்துக்கிட்டிருந்தாங்க. சுத்தி முத்தி பார்த்தேன்.
"நான் இங்கயிருக்கேன். இங்க பாரு"
சமையல் மேடையில டம்ளர் அருகே இருந்துதான் குரல் வந்தது. தெரிந்துவிட்டது. எங்க வீட்டுக்கும் யாரோ வந்துட்டாங்க.
"நீ வந்தது ரொம்ப சந்தோஷம்" என்றேன்.
"இந்த வழியா போயிக்கிட்டிருந்தேன். நீ வச்ச கருவாட்டுக் கொழம்பு வாசம் என்ன இங்க கூட்டிட்டு வந்திருச்சு" என்றாள்.
"உன் பேரென்ன"
"இசக்கி"
" கொஞ்சம் இரு இந்தா வாரேன்"
ஹாலில் டிவியில் இத்தனை கல்யாணம் ஆகியும் இன்னும் கன்னி கழியாத கஸ்தூரியைப் பார்த்து கண் கலங்கிக் கொண்டிருந்த அம்மாவிடம் ஓடினேன்.
"அம்மா இந்த யட்சி வந்து மண் பானைக்குள்ள இருக்கும்னு சொல்றாங்க. விரலி வந்து சீசாவுக்குள்ள இருக்கும்னு சொல்றாங்க. இந்த இசக்கி எங்க இருக்கும்" என்றேன்.
இவ்வளவு நேரம் ஸீரோ வாட் பல்ப் போல இருந்த என் முகம் இப்போது 1000 வாட்ஸ் பல்பு போல மின்னுவதை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே அம்மா கேட்டாள்
"இப்போ திடீர்னு எதுக்கு அத கேட்குற"
"இல்லம்மா இந்த ப்ளாக் படிக்கிறேன்ல அதுலதான் போட்டுருந்துச்சு. இசக்கிக்கு ஒன்னுமே போடல அதுதான் ஒனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டேன்"
"எனக்கும் சரியாத் தெரியல. பீங்கானா இருக்கலாம்னு நெனக்கிறேன்" என்றாள்.
சமையலறைக்கு ஓடினேன். பீங்கான் டீ கப்பை எடுத்தேன். அதற்குள் இசக்கியை வைத்தேன். அப்போது இசக்கி சொன்னாள்
"கொஞ்ச கேப்பக் கழியும் கிண்டிறு. கருவாட்டுக் கொழம்புக்கு நல்லா இருக்கும்"
"சரி நீ இங்க இரு நான் சமையல முடிச்சிட்டு வர்றேன்"
என்று சொன்னவாறே கப்பை சர்க்கரை டப்பாவின் பின்னே டீ கப்பை மறைத்தேன்.
கேப்பைக் கழி கிண்டும்போது வந்த அம்மா கேட்டாள்,
"இப்ப ஏன் கழி கிண்டுற?"
"இல்ல கருவாட்டுக் கொழம்புக்கு நல்லா இருக்கும்னு. சாப்புடனும் போலஇருந்துச்சு"
அம்மா சந்தேகத்துடன் பார்த்தவாறே குளிக்கச் சென்றாள்.
நான் அவசரமாக ஒரு தட்டில் சோறும் கருவாட்டுக் குழம்பும், ஒரு தட்டில் கேப்பக் கழியும் கருவாட்டுக் குழம்பும் ஊற்றி இசக்கியிடம் தந்தேன். அவள் அதை ருசித்துச் சாப்பிட்டாள்.
"உன்னோட கை பக்குவம் நல்லா இருக்கு. சாப்பாடு ரொம்ப ருசியா இருந்துச்சு" என்றாள்.
இந்த சந்தர்ப்பத்த நாங்க தவற விடுவோமா?
"ஆமா ஆமா என்னோட சமையல சாப்புடுற எல்லாருமே அப்டித்தான் சொல்லுவாங்க" என்றேன்
வயிறு நிறைந்த திருப்தியுடன் இசக்கி கேட்டாள்,
"ஏதாவது கேளு தர்றேன்"
"என்ன கேட்டாளும் தருவியா?"
"தங்கம் வேணுமா? வைரம் வேணுமா? அரண்மனை மாதிரி வீடு வேணுமா? தயங்காம கேளு. எனக்கு யட்சி, விரலிய எல்லாம் விட சக்தி அதிகம்" என்றாள். நான் உற்சாகத்துடன் கேட்கத் துவங்கினேன்.
"இங்க வந்து இந்த மேல் சாதிக்காரங்க கீழ் சாதிக்காரங்கள ரொம்ப கொடுமப்படுத்துறாங்க. அதுனால சாதியே இருக்கக்கூடாது. அப்பறம் இந்த அரசியல்வாதிங்க அவங்க சொந்த லாபத்துக்காக மதச் சண்டைய மூட்டிவிட்டு ஏராளமான பேர சாகடிக்கிறாங்க அதுனால மதமும் இருக்கக் கூடாது. அப்பறம் என்னோட இனம்தான் ஆளனும், வாழனும் அடுத்த இனம் சாகனும்னு நெனக்கிறாங்க. அதுனால இனமும் இருக்கக் கூடாது. அப்பறம் கொஞ்ச பேரு காச வச்சிக்கிட்டு எப்டி செலவு பண்றதுன்னு தெரியாம இருக்குறாங்க. நெறய பேரு சாப்புட சாப்பாடு இல்லாம, இருக்க வீடுகூட இல்லாம பிளாட்பாரத்துல இருக்காங்க. அதுனால எல்லாருக்கும் சமமான அளவுல வசதி இருக்கனும். அப்பறம் கோடுகள் இல்லாத உலகம் வேண்டும்... அய்யய்யோ... இசக்கி... இசக்கி... என்னாச்சு?"
இசக்கி டீ கப்புக்குள்ளேயே மயங்கி சரிந்து கொண்டிருந்தாள்.
13 comments:
//அய்யய்யோ... இசக்கி... இசக்கி... என்னாச்சு?
இசக்கி டீ கப்புக்குள்ளேயே மயங்கி சரிந்து கொண்டிருந்தாள்//
:))
ரசித்தேன்...நல்லா இருக்கு..பதிவும் படமும்! :-)
;;))
m nalla erukku..
jeyanthima..
etho oru karuthu chollavarenga...
neenga sariyana thesai knoki poikituerkeenga
nandri
valga valamudan
v.v.s
complan surya
யட்சி,விரலி,அப்புறம் இசக்கி. ஆனா ஒன்னுங்க நீங்க இசக்கிகிட்ட கேட்டதெல்லாம் படிச்சபின்னாடி நானே மயக்கம் போட்டுட்டனுங்க.
மெல்லிய த்ரில்லுடன் துவங்கியிருந்தது. அப்படியே பிக் அப் பண்ணுவீர்கள் என்று பார்த்தால் காமெடி பண்ணிட்டீங்களே.!
அப்புறம் என்ன அநியாயம் இது? இசக்கி இவ்வளவு ஸாஃப்டாவா இருப்பா? என்ன படம் போட்டிருக்கீங்க.. பார்த்ததும் வயித்தக் கலக்க வேண்டாமா?
நன்றி ஷங்கர்!
நன்றி சந்தன முல்லை!
நன்றி ஜீவன்!
நன்றி காம்ளான் சூர்யா!
முதல் வருகைக்கு நன்றி தாமோதர் சந்துரு!
நன்றி ஆதிமூல கிருஷ்ணன்!
என்னோட ஆசையெல்லாம் உங்களுக்கு காமெடியாவா தெரியுது? இசக்கிக்கு பயங்கரமான உருவந்தான் தேடுனேன். கெடைக்கல அதுனாலதான் இதப் போட்டேன்.
யட்சியும் விரலியும் எங்க வீட்டுக்கும் வந்தாங்க என் பதிவுல பாருங்க...!
இது எல்லாம் சும்மா.. எத்தன சவரன் கேட்டீங்க.. பாவம் இசக்கியே மயங்கி விழுந்துடுச்சு :)
சூப்பருங்க , எங்க ரொம்ப நாலா ஆள காணும்
நன்றி பிரசன்னா!
ஏங்க தேன எடுக்குறவன் பொறங்கைய நக்காம இருப்பானா? அதெல்லாம் கண்டுக்கக்கூடாது.
நன்றி மங்குனி அமைச்சரே!
வேலை அதிகமா இருக்கறதால கொஞ்ச நாளைக்கு பிளாக் எழுதறதில்லன்னு இருந்தேன். ஆனா இந்த யட்சியும் விரலியும் என்னை எழுத வச்சிட்டாங்க.
இன்று தான் முதல்முறை உங்கள் தளம் வந்தேன்.
அருமையான எழுத்துக்கள்.
யட்சியும் விரலியும் அற்புதம்.
முதல் வருகைக்கு நன்றி சே.குமார்!
அடிக்கடி வாங்க.