நான் பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேங்க. இந்த ஊரப்பத்தி உலகத்தப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கணும் அதுனால தினமும் நியூஸ் பாக்கணும்னு எங்க மாமா சொல்வாருங்க. அதுனால நானும் நியூஸ் பாப்பேங்க. எனக்கு சில விஷயங்கள் புரிய மாட்டேங்குதுங்க. அதுனால படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் எடுத்துச்சொன்னா புரிஞ்சுப்பேன்ங்க.

விஷயம் என்னன்னா கொஞ்ச வருஷத்துக்கு முந்தி ஈராக்குல பேரழிவு ஆயுதங்கள் இருக்குதுன்னு அமெரிக்கா சொல்லுச்சுங்க. சொல்லிட்டு தன் கூட சில நாட்டு படைகளையும் கூட்டிட்டு ஈராக்குக்குள்ள போனாங்க. அந்த நாட்டு அதிபர பதுங்கு குழிக்குள்ள இருந்து இழுத்து வந்தாங்க. புதிய அதிபர அறிவிச்சாங்க. பழைய அதிபருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாங்க. அதுக்கு அப்புறமும் படைகள் அங்கே ஏன் இருந்துச்சு. அப்புறம் இப்ப படைகள் அனைத்தையும் வாபஸ் வாங்கப் போவதாக நேத்து அமெரிக்க அதிபர் அறிவிக்கிறார். இப்ப ஏன் வெளியேறுது? இந்த பேரழிவு ஆயுதங்கள தேடுறதுக்குத்தான் நாங்க அடுத்த நாட்டுக்குள்ள போறோம்னு சொன்னாங்க. அங்க எந்த ஆயுதங்களும் கெடைக்கல போலிருக்கு. கெடச்சிருந்தாத்தான் அதுக்கு பின்னால ராணுவத்துக்காரங்க நின்னு போட்டோவோட நியூசுல காட்டியிருப்பாங்களே. இல்லன்னா கண்டுபிடிச்சோம்னாவது சொல்லியிருப்பாங்களே. அப்போ அங்கே எந்த ஆயுதங்களும் இல்லாதபோது ஏன் அங்க போனாங்க. முதல்ல இன்னொரு நாட்டுக்குள்ள போயி ஆயுதத்த தேடுறதுக்கு இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு.நம்ம நாட்டுக்கு பக்கத்து நாடு (இலங்கை) ஒரு இனத்தை அழிச்சாங்களே. அவங்க வச்சிருந்த ஆயுதங்களெல்லாம் எந்த வகை ஆயுதங்கள். ஒரு குண்டு போட்டா அங்க இருக்கற ஆக்சிஷன் எல்லாத்தையும் உறிஞ்சி மக்களை மூச்சுத்திணறி சாகடிக்குமாம். மக்கள் லட்சக்கணக்கில் செத்தாங்களே அப்போ யாரும் என்னான்னு கேக்கலையே. அது அவங்க உள்நாட்டு விவகாரம்னு சொன்னாங்களே. ஐநா சபை ஆளுங்களால இப்போகூட இலங்கைக்கு போக முடியலங்கறாங்களே. ஈராக், ஆப்கானிஸ்தான் மாதிரி நாட்டுக்குள்ள அவங்க பாட்டுக்கு போறாங்களே அது எப்படி?

இதே ஈராக் பேரழிவு ஆயுதங்கள் இருக்கறதா வதந்தி பரப்பி எங்கள் நாட்டை சூறையாடிட்டாங்கன்னு சொல்லிட்டு கூட இந்தியா, சைனா போன்ற நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு அமெரிக்கா மீது படையெடுத்தால், அல்லது போபால் புகழ் ஆண்டர்ஸன்னும் இந்தியாவுல வெடிகுண்டு வைக்கறதுக்கு ப்ளான் போட்டுக்குடுத்த ஹெட்லியோ இட்லியோ அமெரிக்காவுல பதுங்கியிருக்காங்கன்னு சொல்லிட்டு இந்தியா துணைக்கு சில நாடுகளை அழைத்து கூட்டுப்படையுடன் அமெரிக்காவுக்குள்ள நுழைஞ்சு, அதிபருக்கு தண்டனை கொடுத்துடறாங்க. அவங்க சொல் பேச்சு கேக்குற அதிபர ஆட்சியில உட்கார வைக்கிறாங்க. அப்புறம் அங்க பொருளாதாரம் படுத்துருச்சு நாங்க சரி பண்ணுறோம்னு சொல்லி அங்கேயே சில வருஷங்கள் இருக்காங்க. அப்பறம் ஒருநாள் நாங்க வெளியேறுறோம்னு வெளிறேறிருறாங்கன்னு வச்சுக்கங்க இப்போது எல்லாத்தையும் மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் அப்போதும் பார்த்துக்கொண்டிருக்குமா?

எனக்கு உள்நாட்டு சட்டங்களும் நியாயங்களுமே சரியாத் தெரியாது. உலக சட்டம் என்னான்னு படிச்சவஙக அறிஞ்சவுங்க தெரிஞ்சவுங்க சொன்னீங்கன்னா கேட்டுக்குவேன்.
This entry was posted on 9/02/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

22 comments:

On September 2, 2010 at 1:41 PM , dheva said...

ஜெயந்தி....@ நீங்க கேள்வி கேட்டிருக்குற கோணத்தில ரீசன்டா நான் திங்க் பண்ணிகிட்டு இருந்தேன்....

அமெரிக்கா தனது ஏகாதிபத்தியத்தை வைத்து செய்திருக்கும் அட்டூழியம் ஏராளம். இந்த வரிசையில் இந்தியாவும் வந்திருப்பது ஒரு வருத்தமான உண்மை.

ஒண்ணு மட்டும் சொல்ல முடியும் என்னால....

" எளியோரை வலியோர் ஏத்தினால் வலியோரை தெய்வம் ஏத்தும்"

ஆரோக்கியமான ஆதங்கமான பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழி!

 
On September 2, 2010 at 1:48 PM , ஹுஸைனம்மா said...

//ஈராக், ஆப்கானிஸ்தான் மாதிரி நாட்டுக்குள்ள அவங்க பாட்டுக்கு போறாங்களே அது எப்படி?//

அங்கல்லாம் இருக்க எண்ணெய் வளம், கனிம வளத்தை சுரண்டவும், மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா எடுத்த எதேச்சதிகார நடவடிக்கைகள் அவை.

இதேபோல, இலங்கையிலும் ஏதாவது எண்ணெய், சுரங்கம் என்று இருந்தால் போயிருப்பார்கள். அத்தோடு இந்திய துணைக்கண்ட நாடுகளும் அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஜால்ரா அடிப்பவையாக இருந்ததால் இங்கே நுழைய அவசியம் ஏற்படவில்லை போல. :-)))

 
On September 2, 2010 at 1:55 PM , மதுரை பாண்டி said...

ஹுஸைனம்மா சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்...

 
On September 2, 2010 at 2:20 PM , ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//" எளியோரை வலியோர் ஏத்தினால் வலியோரை தெய்வம் ஏத்தும்" //

ஆமோதிக்கிறேன்

சகோதரி ஹுஸைனம்மா சொன்னதை 100% உண்மை.என்ன தான் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவை ஆட்டிப்படைத்தாலும், இராணுவத்திற்காக ஆஃப்கானிஸ்தாமிலும், ஈராக்கிலும் வீனாக சிலவு செய்த பணத்தை மிட்சப்படுத்தியிருந்தால் ஓரளவு பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வரலாம் என்ற அளவுக்கு அங்கு சிலவு செய்யப்படுகிறது.

அமெரிக்கா உலக நாடுகளுக்கு கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது. தாலிபான் கொடுத்த அடி போதாது என்றி நினைக்கிறார்கள் போலிருக்கிறது இன்னும் இவர்கள் அஃப்கானிஸ்தானில் இருந்து வெளியாவாதது.

அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி

 
On September 2, 2010 at 2:35 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

no comments

 
On September 2, 2010 at 3:10 PM , சௌந்தர் said...

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது....

 
On September 2, 2010 at 4:47 PM , கலாநேசன் said...

நியாயமான சந்தேகங்கள்.

 
On September 2, 2010 at 5:13 PM , தமிழ் உதயம் said...

அமெரிக்காங்கிற நாடு இம்மாதிரி வேலைய செய்யலன்னா பேரிக்காங்கிற நாடு இம்மாதிரி வேலைகளை செய்யும். இங்கிலாந்துக்கு ஏனைய நாட்டை பிடிக்க அன்றொரு காரணம். இன்று அமெரிக்காக்கு ஒரு காரணம். இது தொடர்கதை.

 
On September 2, 2010 at 5:19 PM , DrPKandaswamyPhD said...

ஜெயந்தி,
இந்த மாதிரி சந்தேகங்களெல்லாம் உடம்பிற்கும் மனதிற்கும் நல்லது அல்ல. வெளியூர் சமாசாரம்

இருக்கட்டும். உள்ளூரிலேயே இந்த மாதிரியான சமாசாரங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவைகள் எல்லாம் தீமை விளைவிப்பவை.

மகாத்மா காந்தியின் "மூன்று குரங்கு" பொம்மைகளைப் பார்த்திருக்கறீர்களா? அந்த பொம்மைகள் வீட்டில் இல்லாவிட்டால் இப்போது கொலு சீசன். கடைகளில் கிடைக்கும். வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் கண்ணில் நன்றாகப் படக்கூடிய இடத்தில் வைத்து, தினமும் காலையில் அதைப்பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளவும்.

உடம்பிற்கு மிகவும் நல்லது. எல்லோரும் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் உலகம் என்னாவது என்று நீங்கள் கேட்பது காதில் விழவில்லை. என் வீட்டில் குரங்கு பொம்மை ஏற்கனவே இருக்கிறது.

வாழ்க வளமுடன்.

 
On September 2, 2010 at 6:06 PM , அருண் பிரசாத் said...

அமெரிக்கா காரன் எது செஞ்சாலும் சரியானது தான். எதிர்த்துலாம் கேள்வி கேட்க கூடாது - இதுதான் உலக சட்டம் நெம்பர் 1

 
On September 2, 2010 at 9:24 PM , அம்பிகா said...

நல்ல கேள்விகள். ஆனால் பதில் தான் இல்லை.

 
On September 2, 2010 at 9:24 PM , ஜெய்லானி said...

ஹுஸைனம்மாவின் பதில்தான் என் பதிலும்

 
On September 3, 2010 at 3:22 AM , முகுந்த் அம்மா said...

நல்ல கேள்விகள்

அமெரிக்காவின் பொருளாதாரம் மிலிட்டரி ஆயுதங்கள் விற்பதில் உள்ளது. எப்பொதெல்லாம் அமெரிக்கா போர் செய்கிறதோ அப்போதெல்லாம் அங்கு உள்ள கம்பனிகள் நன்கு கொலிக்கும்.

இரண்டாம் உலக யுத்தம், வியட்னாம் யுத்தம், 1991 இல் நடந்த குவைத் யுத்தம், பிறகு ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் யுத்தம், இராக்கில் நடக்கும்/நடந்த யுத்தம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

Eisenhower தன்னுடைய பிறிவுபசார விழாவில் உரையாற்றும் போது இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி எச்சரித்தார். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

 
On September 3, 2010 at 4:03 AM , நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமையான பதிவுங்க........அழகா என்க்குக் கூட புரியரா மாதிர எழுதியிருக்கீங்க பாருங்க அதுக்கே உங்களுக்கு என்னோட ஓட்டுங்க.........சூப்பருங்க.....இப்படி நிறைய எழுதுங்க.......

 
On September 3, 2010 at 4:11 AM , Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஜெயந்தி மேடம், கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.. பதில் சொல்லத் தெரிந்தும் ஊமைகள் போலத்தான் நாம்.. ஹுசைனம்மா சொல்வதுதான் சரி..

வலியார் கை உயருகையில் மெலியார் கை தானாகவே தாழ்வது ஏனோ?..

 
On September 3, 2010 at 6:44 AM , ராஜவம்சம் said...

கேள்வி கேட்கிறேன்னு சொல்லிட்டு பதில் சொல்றவங்கள வம்புல மாட்டிவிட்டுடுவிங்கபோல கட்டப்பஞ்சாய்யத்து செய்றவனுக்கே கட்டப்பஞ்சாயத்தா?

 
On September 3, 2010 at 7:31 AM , வழிப்போக்கன் - யோகேஷ் said...

கேள்வி கேக்கரது சுலபம்.... ஆனா பதில் சொல்லுறது எவ்ளோ கஸ்டம் தெரியுமா :))...

 
On September 3, 2010 at 10:24 AM , அக்கினிக்குஞ்சு said...

ஹுஸைனம்மாவின் பதில்தான் என் பதிலும்

 
On September 4, 2010 at 8:21 AM , Anitas said...

இதுக்கு ஒரு முடிவெ இல்லயா

 
On September 4, 2010 at 4:00 PM , மதுரை சரவணன் said...

there is no answer for this issue. thanks for sharing.

 
On September 13, 2010 at 3:29 PM , ஜானகிராமன் said...

ஜார்ஜ் ஆர்வெல்லோட "அனிமல் பார்ம்" புத்தகத்தில் இதுக்கு விடையிருக்கு ஜெயந்தி. "இந்த மிருகப் பண்ணையில் எல்லா மிருகங்களும் சமஉரிமை படைத்தவை. ஆனால், சில மிருகங்கள் மற்ற மிருகங்களை விட கொஞ்சம் அதிக சமஉரிமை கொண்டவை" அந்த சில மிருகத்தில ஒன்னு அமெரிக்கா.

 
On September 17, 2010 at 3:55 PM , ஹேமா said...

சில கேள்விகளும் சில பதில்களும் அடங்கி எழும் பெருமூச்சோடு மட்டுமே ஜெயந்தி.