வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு விஞ்ஞானி.பரம்பரை நோய்களையும் தீர்க்கக்கூடிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர். இவரைப் பற்றி ஆனந்த விகடனில் போட்டிருந்த செய்தி 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் அநாதைகளான  முஸ்லிம் சிறுவர்களில் சிலரை நண்பர்களின் உதவியுடன் படிக்க வைத்துக்கொண்டிருப்பதாக படித்தபோது அவர் மீதான மரியாதை கூடியது. அவர் நோபல் பரிசை அறிவித்தவுடன் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், 'என்னைப்போலவே இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனக்கு தந்தது ஆச்சரியமாக இருக்கிறது' என்று அவர் தன்னடக்கத்துடன் சொன்னதைக் கேட்டபோது மரியாதை ஏற்பட்டது.

இப்போது சென்னை வந்திருந்தபோது அரசாங்கம் அழைத்தால் இங்குள்ள மாணவர்களுக்கு நான் பாடம் எடுக்கத்தயார் என்று கூறுவதை டிவியில் பார்த்தேன்.

இங்குள்ளவர்கள் அவரைப்பற்றி என்னென்ன திட்டினார்கள்? அவர் இந்தியரா? அவர் தமிழரா? அவர் மனிதரா? நமக்கு திட்டுவதற்கு யாராவது கிடைத்தால் போதும் நாமெல்லாம் அடுத்தவரைத் திட்டுவதற்காகவே பிறந்ததுபோல் திட்டித்தீர்ப்போம்.

நோபல் பரிசு அறிவித்தவுடன் மெயில் நிறைய வந்ததால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை அவர் கூறியவுடன் நமக்கெல்லாம் கோபம் வந்துவிட்டது. உண்மையை ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கானவர்களில் ஆயிரக்கணக்கில் கூட வேணாம், நூற்றுக்கணக்கானவர்கள் மெயில் பண்ணியிருந்தாலும் போதும். என்ன நடந்திருக்கும்? ஒரு மனிதன் அந்த மெயில்களால் தனக்கு நேர்ந்த கஷ்டத்தைக்கூட சொல்லக்கூடாது. அவரைப் பொறுத்தவரை ஸ்டெயிட் பார்வேர்ட் ஆன ஆள். மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிடுபவர். நோபல் பரிசுக்காக ஆராய்ச்சிப் படிப்புக்கு வராதீங்க! சயின்சில் ஆர்வம் இருந்தால் வாங்க என்று இளைஞர்களை அவர் அழைத்துள்ளார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
This entry was posted on 12/28/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On December 28, 2009 at 6:34 PM , அறிவன்#11802717200764379909 said...

நல்ல பகிர்வு...

நாம் எதையும் நம்முடைய நோக்கிலேயே பார்க்கிறோம் என்பதில்தான் சமூக உறவுகளின் பல உறவுச் சிக்கல்கள் எழுகின்றன...

 
On December 28, 2009 at 6:55 PM , அண்ணாமலையான் said...

அவர் எங்க ஊர் காரர் என்பதை விட நல்ல மனிதர் என்பதில் சந்தோஷமடைகிறேன்...

 
On December 28, 2009 at 9:03 PM , hayyram said...

gud

regards
ram

www.hayyram.blogspot.com

 
On December 30, 2009 at 12:09 PM , Sangkavi said...

அழகான பகிர்வு

பொறுத்தமான குறள்...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....

 
On December 31, 2009 at 9:46 PM , ஜெயந்தி said...

நன்றி அறிவன்! பிரச்சனைகளுக்குக் காரணமே பெரும்பாலும் அதுதான்.

நன்றி அண்ணாமலையான்! ஆமாம். உங்க ஊர்க்காராயிற்றே?

thank you hayyram!

நன்றி சங்கவி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 
On January 1, 2010 at 4:34 PM , நேசமித்ரன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ. ஜெயந்தி

 
On January 2, 2010 at 12:58 PM , ஜெயந்தி said...

நன்றி நேசமித்ரன்!
சகோதரி என்ற வார்த்தை அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. காரணம் எனக்கு சகோதரர்களே கிடையாது. உங்கள் அன்பிற்கு நன்றி!