எங்க ஊர் திண்டுக்கல்னாலும் எங்க சொந்தக்காரங்க நிறைய இருந்தது திருநெல்வேலிப்பக்கம். அதுனால அவங்க வர்றப்ப போறப்ப அந்த ஊர் பேச்சு சிறுவயதில் இருந்தே கேட்டு பழக்கமாயிடுச்சு. பெறகு, மதினி போல நிறைய வார்த்தைகள் புதுசாக இருக்கும்.
அப்புறம் கல்யாணமாகி கோயம்புத்தூருக்கு விருந்துக்கு போன போது அந்த ஊர் பேச்சு வித்தியாசமாக இருந்தது. அங்கும் நிறைய சொற்கள் நம் ஊரில் இருந்து வேறுபடும்.
அப்பறம் வேலூருல போயி தனிக்குடித்தனம் வச்சுட்டு எல்லாரும் வந்துட்டாங்க. அப்போ 19 வயசுங்க. வீட்டுல கதை புத்தகம் படிச்சிக்கிட்டு இருந்த எனக்கு கல்யாணத்தப்பண்ணி அதுவும் தனிக்குடித்தனம்வேற. சமையல் ஒரு பக்கம் பயமுறுத்துது. அந்த ஊருல பேசுற பேச்சு வேற பயமுறுத்துது. மெட்ராஸ் பாஷை மாதிரி பேசுவாங்க.
அப்புறம் ஒரு வழியா ரெண்டையும் கத்துக்கிட்டாச்சு. ஊருக்குப் போனப்போ என்னோட பேச்சு வேலூரு பேச்சு மாதிரி மாறிடிச்சுனு ஒரே திட்டு. அந்த ஊரு பேச்ச பேசுனா இந்த ஊருப்பக்கமே வராதன்னு சொல்லிட்டாங்க. அப்பறம் ஊருப்பக்கம் போறதுக்கு பயந்துக்கிட்டே போயி ஒரு மாதிரியா அதிகமா வாயத் தொறக்காம சமாளிச்சேன்னு வைங்க.
இந்த ஊரு பேச்சுல எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை இருக்கு. சிலர் கலைஞன் என்ற வார்த்தைய கலைஞ்ஜன்-னு உச்சரிப்பாங்க. எனக்கு காதுல ஈயத்தக் காய்ச்சி ஊத்துன மாதிரி இருக்கும்.
நான் அறிவொளி இயக்கம் வகுப்பு எடுக்கறப்போ வரும் இளவழகன் இதே மாதிரி என் எதிரில் உச்சரித்துவிட்டார். அவ்வளவுதான் எனக்கு வந்ததே கோபம். அவரோட சண்டைதான்.
"நீங்க உச்சரிக்கறது தப்புங்க."
"இல்லங்க அப்படித்தான் சொல்லனும்"
"சரி ஞாயிறு இத எப்படி உச்சரிப்பீங்க"
"ஞாயிறு"
"இத மட்டும் ஏன் சரியா சொல்றீங்க. ஞ்ஜாயிறுனு சொல்ல வேண்டியதுதான"
"ஞாயிறு அப்படித்தான் சொல்லனும் கலைஞ்ஜன கலைஞ்ஜன்னுதான் சொல்லனும்"
இத்தனைக்கு அவரு எப்பவுமே அதிகமா தூய தமிழ்லதான் பேசுவாரு.
நான் அவர தப்பா குறை சொல்றேன்னு அவரு நினைக்கிறாரு. அவரு பேசுறதுதான் சரின்னு நினைக்கிறாரு.
"இங்க பாருங்க எனக்கு நன்னன்தான் கல்யாணமே பண்ணி வச்சாரு. நான் பேசுறதுதான் சரி."
"இல்லங்க நீங்க பேசுறது தப்பு"
"சரி நானு இத பத்தி விசாரிக்கிறேன்"
அதுக்கப்புறம் அவரும் அத மறந்துட்டாரு. நானும் மறந்திட்டேன்.
என்னதான் சொல்லுங்க இந்த "ழ" கரம் மட்டும் கொஞ்சம் எங்கள படுத்துனாலும் எங்க ஊருப் பேச்சுதாங்க கரெக்ட்டு.
39 comments:
வாலைப்பலம் தான் கரீக்ட்டு
:)))
நல்லாத்தான் சண்டை போட்டிருக்கீங்க...
என்னதான் சொல்லுங்க இந்த "ழ" கரம் மட்டும் கொஞ்சம் எங்கள படுத்துனாலும் எங்க ஊருப் பேச்சுதாங்க கரெக்ட்டு.
......கிளம்பிட்டாங்கையா ...... கிளம்பிட்டாங்க......
என்னதான் சொல்லுங்க இந்த "ழ" கரம் மட்டும் கொஞ்சம் எங்கள படுத்துனாலும் எங்க ஊருப் பேச்சுதாங்க கரெக்ட்டு.
...... கிளம்பிட்டாங்கையா ...... கிளம்பிட்டாங்க......
நீங்க சென்னைத்தமிழ் கேட்டதில்லைன்னு நினைக்கிறேன் .....
என்னதான் சொல்லுங்க இந்த "ழ" கரம் மட்டும் கொஞ்சம் எங்கள படுத்துனாலும் எங்க ஊருப் சென்னை தமிழ் கரீக்ட்டு
நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!
வலிக்குது அழுதுருவேன்.
நன்றி சந்தனமுல்லை!
நன்றி சித்ரா!
பின்ன எங்க பெருமைய காமிக்க வேண்டாமா?
:) எந்த் ஊருக்கு போய் இருக்கமோ அந்த ஊரு பாஷை அப்படியே நாவில் ஒட்டிக்கும்.. அதுக்காக நானும் திட்டு வாங்கி இருக்கேன். .
நன்றி சவுந்தர்!
வாயப்பயம் தான் கரீக்ட்டு
நன்றி முத்துலெட்சுமி!
நாமெல்லா உடனே ஜோதியில ஐக்கியமாகிடுவோம்ல.
நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
வேலூருல சென்னை தமிழ் மாதிரிதான் பேசுவாங்க.
திண்டுக்கல்லா..? அட நம்ம ஊரு..?
நல்லாயிருங்க..!
இன்னும் காரைக்குடி பக்கம் போயிருந்தீகன்னா அங்கிட்டு பேசுறதையும் கொஞ்சம் பழகிட்டு வந்திருக்கலாம்..!
அப்படியே மெட்ராஸ்ல வந்து சைதாப்பேட்டைல ரெண்டு வருஷம் குடியிருங்க.. போதும்..
மொத்தத் தமிழும் உங்களுக்கு மறந்து போயிரும்..!
நன்றி உண்மைத்தமிழன்!
நீங்களும் திண்டுக்கல்லா?
ஜெயந்தி @@வாயப்பயம் தான் கரீக்ட்டு//
ஆமாம் சோறு துன்னியா தான் கேட்போம் ஹா ஹா ஹா
அதாங்க மனசில பட்டத பட்டுன்னு கேட்டுடனும்...
உங்க தைரியம் பிடிச்சிருக்குங்க.
நன்றி சி.கருணாகரசு!
soundar said...
ஜெயந்தி @@வாயப்பயம் தான் கரீக்ட்டு//
ஆமாம் சோறு துன்னியா தான் கேட்போம் ஹா ஹா ஹா
இன்னாமே போயிகினே இரும்மே சூப்பருல்ல.
யாருன்னா மெட்ராஸ்காரங்க பார்த்தா சண்டைக்கு வரப்போறாங்க.
ஜெயந்தி நான் வத்தலகுண்டு தான்
//soundar said...
ஜெயந்தி நான் வத்தலகுண்டு தான்//
ஆஹா! சரி சரி.
ஆமாங்க நீங்க சொன்ன கரெக்டாதாங்க இருக்கும்(escape)
முதல் வருகைக்கு நன்றி வேலு.ஜி!
அந்த பயம் இருக்கட்டும்.
எல்லாம் சரிதாங்க இந்த ’வால பலத்தை’ பத்தி என்ன நினைக்கிறீங்க . அத பத்தி ஒன்னுமே சொல்லலயே ..!!ஹி..ஹி..
நன்றி ஜெய்லானி!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
என்னமே அடுத்து கூவ யாருமே வரலை வாயப்பயம் டெய்லி தான் துன்னுகினு இருக்கேன்
வாங்க சௌந்தர். இந்த ஜெய்லானிகிட்ட இருந்து காப்பாத்துங்க.
சுடு தண்ணி புகழ் ஜெய்லானி எப்படி கீற
வணக்கம் டீச்சர்... ம்ம்ம்ம்... அப்டியே சண்டைய கண்டினியூ பண்ணுங்க.. வாழ்த்துக்கள்...
[[[ஜெயந்தி said...
நன்றி உண்மைத்தமிழன்!
நீங்களும் திண்டுக்கல்லா?]]]
ஆமாம்.. ஆமாம்..
பொறந்ததே காட்டாஸ்பத்திரிலதான்..!
வீடு ஒய்.எம்.ஆர்.பட்டி..!
நன்றி பாலாசி!
ஐய்யய்யோ எனக்கு சண்டையினாலே பயம்.
// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[ஜெயந்தி said...
நன்றி உண்மைத்தமிழன்!
நீங்களும் திண்டுக்கல்லா?]]]
ஆமாம்.. ஆமாம்..
பொறந்ததே காட்டாஸ்பத்திரிலதான்..!
வீடு ஒய்.எம்.ஆர்.பட்டி..!//
நாங்க கொஞ்ச நாள் இடைய மேட்டுராஜாபட்டியில இருந்தோம். அப்புறம் இ.பி.காலனியில் இருந்தோம்.
சண்டை போட்டாவது நல்லதமிழ் சொல்லிக்கொடுக்கறீங்க.. நீங்க ஒரு சகளகளாவள்ளிதான் :-)))))
நன்றி அமைதிச்சாரல்!
நீங்களுமா?
அதான் அவுங்க பயக்க வயக்கமா இருக்கும்!
முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி வால்பையன்!
நல்ல பயக்க வயக்கம்.
nalla sandai
அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க ஊர் தமிழ் பெரிசு தான்.
\\உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அப்படியே மெட்ராஸ்ல வந்து சைதாப்பேட்டைல ரெண்டு வருஷம் குடியிருங்க.. போதும்..
மொத்தத் தமிழும் உங்களுக்கு மறந்து போயிரும்.\\
ஆமாங்க.
நல்ல பகிர்வு
//அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க ஊர் தமிழ் பெரிசு தான்.//
சென்னைக்குமா?
அருமையான பகிர்வு ஜெயந்தி மேடம்.
தமிழ்மணத்தில் அறிவொளி இயக்க நினைவுகள் படிச்சது அப்படியே சின்ன வயசு நியாபகங்கள் வந்துவிட்டது.
மெட்ராஸ் தமிழத் தவிர எந்தத் தமிழை வேணாப் பொறுத்துக்கலாம்!!