ஒரு பிரச்சனைன்னு வந்தா இப்படி தடி எடுத்தவனெல்லாம் தண்டல்க்காரனாக மாறுவது ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக எப்போதும் ஆகாது. அந்தப் பிரச்சனை முடிவின்றி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

நான் பிளாக் உலகத்திற்கு வந்ததிலிருந்து இது வரை நடந்த சண்டைகளில் இதுதான் முடிவேயில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.

நம் பிளாக் உலகம் பல குழுக்களாகத்தான் இயங்குகிறது என்று தெளிவாக தெரிந்துவிட்டது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரையோ அல்லது இருவரையோ தேர்ந்தெடுத்து 5லிருந்து 10 பேர் கொண்ட ஒரு குழு அமைத்துக்கொண்டால், சின்னப் பிரச்சனைகள் முதல் இது போன்ற தீராத பிரச்சனைகள் வரை நம் சர்ாபாக குழு அங்கத்தினர் கூடிப்பேசி ஒரு முடிவை கொண்டு வருவார்கள். அதுவரை மற்ற அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

குழுகூடி என்ன முடிவெடுக்கிறார்களோ அதை நாம் அனைவரும் மவுனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இது எனக்குத் தோன்றும் கருத்து. வலையுலக மக்கள் அனைவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
|
This entry was posted on 6/03/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

32 comments:

On June 3, 2010 at 3:30 PM , soundar said...

நல்லது என்றால் குழு அமைக்கலாம்

 
On June 3, 2010 at 3:37 PM , LK said...

sari varathu thozhi. oru prachaniyil anaivarum karuthu solvathai nirutha vendum

 
On June 3, 2010 at 3:42 PM , ஜெயந்தி said...

கருத்துக்கு நன்றி சவுந்தர்!

நன்றி எல்கே!
அனைவரும் கருத்து சொல்வதை நிறுத்தத்தான் இந்த ஏற்பாடு. வேற எந்த வழியில் கருத்துசொல்வதை நிறுத்த முடியும்.

 
On June 3, 2010 at 3:49 PM , Anonymous said...

நல்லாத்தான் இருக்கும். ஆனா ஒவ்வொறு குழுவிலிருந்தும் 2 பேரை தேர்ந்தெடுக்கனும்னு சொல்றீங்களே, எந்த ரெண்டு பேரை தேர்ந்தெடுப்பது? இப்பல்லாம் ஒவ்வொறுக் குழுவுக்குள்ளும் பல சிறுகுழுக்கள் இயங்கிட்டிருக்கு. இதுக்கு முடிவே இருக்காது. நாம பிளாக் உலகத்துக்கு நல்லது செய்யனும்னு நினைச்சா, இதையெல்லாம் கண்டுக்கவே கூடாது. இதை ஒரு விவாதப் பொருளா எடுத்துக்கக் கூடாது. அப்ப தானாவே இது அடங்கிடும். ஒரு பிரச்சனைக்கு பத்து பேர் பதிவு எழுத, 100 பேர் பின்னுட்டம் போட இருந்தா நாம இதையெல்லாம் சகிச்சுத் தான் ஆகனும். பேச எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்குல்ல. (மன்னிக்கவும். இதைபத்தி பேசக்கூடாதுன்னு சொல்லிட்டு நான் பேசியது முரண். அமைதியா இருங்கன்னு சத்தம் போட்டுத்தான சொல்லவேண்டியிருக்கு...)

 
On June 3, 2010 at 4:08 PM , ஜெயந்தி said...

நீங்க சொல்றது சரிதான். இருந்தாலும் ஏதாவது ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமில்லையா?

 
On June 3, 2010 at 4:32 PM , ஜெய்லானி said...

எங்க குழுவுக்கு நீங்கதான் கொ ப செ சரியா ?

 
On June 3, 2010 at 4:36 PM , ஜெயந்தி said...

உறுப்பினரா சேர்த்துக்கறதே பெரிசு. இதுல பதவி வேறயா? அடுத்து தலைவர், முதலமைச்சர், அமெரிக்க ஜனாதிபதி பதவியெல்லாம் உண்டா?

 
On June 3, 2010 at 4:49 PM , dheva said...

சட்ட சபை ரேஞ்சுக்கு ஆகிடும்...மேடம்...! முதல்ல ஒருத்தர் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் நடந்து கொண்டால் சரி.

உங்க யோசனை நல்லாதான் இருக்கு ....அதை செயல் படுத்த நல்ல மனம் உள்ளவர்கள் வேண்டும். நான் உங்களுக்கு...ஓ.கே.. வோட் போடுறேன்.!

 
On June 3, 2010 at 4:57 PM , உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சரி.. நீங்க எந்தக் குழு..?

 
On June 3, 2010 at 5:04 PM , Discovery book palace said...

பரவாயில்லை நல்ல யோசனைதான். என்னா ஒன்னு இலங்கையிலும், காஷ்மீரிலும் கூட இந்த யோசனை எடுபடும்போல இருக்கு...

 
On June 3, 2010 at 5:09 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி தேவா!
//சட்ட சபை ரேஞ்சுக்கு ஆகிடும்...மேடம்...!//
அப்படி ஒரு அபாயமும் இருக்கு.


வருகைக்கு நன்றி உண்மைத்தமிழன்!
இதுவரை நான் எந்தக்குழுவிலும் இல்லை. தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் மட்டும் உள்ளேன்.

 
On June 3, 2010 at 5:12 PM , ஜெயந்தி said...

முதல் வருகைக்கு நன்றி Discovery book palace!
நல்லாயிருக்கு உங்க கிண்டல்.

 
On June 3, 2010 at 5:18 PM , கே.ஆர்.பி.செந்தில் said...

இது உக்காந்து யோசிச்சதா?

 
On June 3, 2010 at 6:26 PM , Anonymous said...

குறைந்த பட்ச நாகரீகத்தை கடைபிடித்தாலே வலையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் சண்டை வராது.

 
On June 3, 2010 at 8:53 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
நின்னுக்கிட்டே யோசிச்சது.

 
On June 3, 2010 at 8:53 PM , ஜெயந்தி said...

நான் சொல்ல வர்றது என்னன்னா மொத்த வலையுலகமே சேர்நது ஒரு விஷயத்த விவாதிக்கறதுக்கும் ஒரு 10 பேரு விவாதிக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்.

 
On June 3, 2010 at 9:20 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enakku enna post

 
On June 3, 2010 at 10:23 PM , தமிழ் உதயம் said...

பிரச்சனையே தேவையில்லாத பிரச்சனை. பிறகு குழு எதற்கு.

 
On June 3, 2010 at 10:38 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!
பிரதமர் பதவி ஓகேவா.

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்!
தேவையோ தேவையில்லை பிரச்சனைன்னு ஆனப்புறம் அத வேடிக்கை பார்க்க முடியாதில்லையா?

 
On June 3, 2010 at 11:21 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Directaa பிரதமர் pathaviyaa ok ok

 
On June 4, 2010 at 3:15 AM , நசரேயன் said...

எனக்கும் எதாவது பதவி கிடைக்குமா ?

 
On June 4, 2010 at 5:10 AM , நீச்சல்காரன் said...

குழு அமைப்பதில் ஏதாவது பிரச்சனை வராமலிருந்தால் அதுவும் சரிதான்.

 
On June 4, 2010 at 2:15 PM , ஜெயந்தி said...

முதல் வருகைக்கு நன்றி நசரேயன்!
வர்ரதுக்கு முன்னாலேயே பதவி கேக்குறாங்கப்பா. எல்லாருக்கும் பதவி குடுத்தா என்னாகுறது.

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நீச்சல்காரன்!

 
On June 4, 2010 at 2:16 PM , ஜெயந்தி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Directaa பிரதமர் pathaviyaa ok ok//
போதுமா?

 
On June 4, 2010 at 3:08 PM , கக்கு - மாணிக்கம் said...

அவரவர்கள் தங்கள் வேலையை பார்த்தாலே போதுமே !
சண்டை சச்சரவுகள் வர இடமேது. குழுக்களாக இருப்பதேதான் பிரச்சினை என்று புரியாமல், மேல்கொண்டு அதிலிருந்து மேலும் சில உறுபினர்கலாம் , இன்னுமொரு குழுவாம் !!
குளிக்க போய் சேற்றை பூசிக்கொண்டு வந்து நிற்க எனக்கு உரிமை உள்ளது. ஆனால் எல்லோரையும் அப்படி
பண்ணச்சொல்ல வேண்டுமா நான்? வேண்டாமே! !

சுய உணர்வுடன் எழுதும் எவரும் இது போன்ற சண்டை சச்சரவுகளில் சிக்குவதில்லை. குழுவாக சேர்ந்து செயல் படும் போது வினைகள், குழு மூலமே வருகிறதே?

"நாம் ஒரு குழுவாக இருக்கிறோம் " என்ற அந்த தலை கணமே போதும் சந்திசிரிக்க. இப்போது சாந்தி சிரித்துப்போனதும் இந்த குழ மனப்பான்மையினால் தான் சகோதரி, ஒரு குழ இன்னொரு குழுவுக்கு எதிரி என்ற நிலை உண்டாக்கப்பட்டு விட்டது .
புரிந்துகொள்ளுங்கள். கோபப்பட்டு என்ன பயன்..

 
On June 4, 2010 at 7:21 PM , மங்குனி அமைச்சர் said...

வணக்கமுங்க , நன்றிங்க

 
On June 6, 2010 at 4:06 PM , நிகழ்காலத்தில்... said...

//மவுனமாக//

அதைய இப்ப செய்தாலே எப்பவும் பிரச்சினை வராதுங்கிறது என்னோட அபிப்ராயம்

வாழ்த்துகள் நண்பரே

 
On June 7, 2010 at 8:29 AM , Madumitha said...

எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டுப்
போவதுதான் ஆகச் சிறந்த வழி.

 
On June 11, 2010 at 7:30 PM , சி. கருணாகரசு said...

இன்னோரு குழுவா???

தாங்குமா?

 
On June 11, 2010 at 7:36 PM , அக்பர் said...

சம்பந்தப்பட்டவர்கள் தீர்த்துக்கொள்ளட்டும் என்று அனைவரும் ஒதுங்கிச்செல்வது சிறந்த வழி. ( நான் ரொம்ப லேட் )

 
On June 12, 2010 at 7:10 AM , சந்ரு said...

அந்தக் குழுவுக்கு யார் தலைவர் எனும் பிரச்சினை வந்து விடுமே.

 
On June 14, 2010 at 2:23 AM , YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி