திருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது பற்றி சந்தனமுல்லை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.
எனக்கு திருமணத்தின் போது பட்டுப்புடவைதான். அதனால அதுபற்றி ஒன்றும் பிரச்சனையில்லை. புடவை எடுப்பதற்கு முன் கலர் மட்டும் கேட்டார்கள். எனக்கு சிவப்புக்கலர் பட்டுப்புடவை வேண்டும் என்று கேட்டேன். அதே கலரில் வாங்கி வந்துவிட்டார்கள். பத்திரிகை மாப்பிள்ளை வீட்டிலேயே அடித்துக்கொடுத்துவிட்டார்கள். நாலாக மடித்த ஆர்ட்பேப்பரில் அச்சடித்த பத்திரிகைதான். நான் பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்குப்போட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எதிரே நடேசர் பிரஸ் இருந்தது. அதில் லேடீஸ் செக்ஷன் என்று தனியாக ஒன்று ஆரம்பித்தார்கள். அதில் அனைவரும் பெண்களே. எங்கள் வீட்டில் நேர் எதிர். அதனால் அங்கே அச்சுக்கோர்க்கும் வேலைக்குச் சென்றேன். அதனால் ப்ஃரண்ட்ஸ்னு பார்த்தா ஒரு பத்து பேருதான் இருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பத்திரிகையையே கொடுத்துவிட்டேன். இந்த மாதிரி தனியாக அடிக்கலாம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போ அவ்வளவு வெவரம் பத்தாது (யாருப்பா அது இப்போ மட்டும் ரொம்ப விவரமாக்கும் என்று சொல்வது).
கணவர் தனியாக ப்ஃரண்ட்ஸ் கார்டு அச்சடித்துக்கொண்டார்.
என்ன ஒன்னும் இன்ரஸ்டிங்கா இல்லையா? இருங்க கல்யாணத்தின் போது நடந்த சில சுவாரஸ்யங்களைச் சொல்கிறேன். என்னை பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு கணவர் ஒரு முறை வீட்டிற்கு வரப்பார்த்தார். வேறு எதற்கு அப்படியே என்னையும் பார்க்கத்தான். எங்க வீட்டிலயெல்லாம் ரொம்ப ஸ்ரிக்டு. அவர் வர்ராருன்னு தகவல் தெரிஞ்சவுடனே எங்க மாமா வழியிலேயே மடக்கி தெரிஞ்ச இடத்தில் வைத்து பேசி அனுப்பிவிட்டார். பொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம் பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை. எங்கள் திருமணம் முடிந்தபிறகுதான் வீட்டிற்கு போனே வந்தது. திருமணத்திற்குப் பிறகுதான் நான் அவருடன் பேசினேன்.
எங்கள் கல்யாணத்தை தலைவர்களை வைத்து சுயமரியாதை திருமணம்போல் நடந்த வேண்டும் என்று என் கணவருக்கு ஆசை. அதை என் மாமாவிடம் சொன்னார். என் மாமாவுக்கும் அதில் உடன்பாடு உண்டு. அம்மாவிடம் மாமா கேட்டார்கள். என் அம்மாவிற்கு நான் ஒரே பெண். அதனால் அவர்கள் விருப்பம்தான் முக்கியம் என்று மாமா நினைத்தார்கள். அம்மா அந்தத் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்கள். என் கல்யாண வாழ்க்கைதான் சரியில்லாமப்போச்சு. (என் அம்மாவுக்கு ஐயர் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது) என் மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுனால ஐயர் வச்சுத்தான் கல்யாணம் நடக்கணும்னு சொல்லிட்டாங்க. மாமா சொல்லிப்பார்த்தார் "அக்கா மாப்பிள்ளை பிரியப்படுகிறார்" என்றார் அம்மா சொல்லிட்டாங்க "அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு" என்று கறாராக கூறிவிட்டார். என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).
திண்டுக்கல்லில் எங்கம்மாவுக்கு நடந்த அதே சுப்பைய்யர் சத்திரத்தில் எனக்கும் கல்யாணம் நடந்தது.
இந்தத் தொடரை தொடர நான் அழைப்பது சித்ரா, புன்னகைதேசம் சாந்தி, ஹுசைனம்மா, முத்துலட்சுமி. ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.
20 comments:
naan 1st
நான் குழந்தைப் பையனா இருப்பதால் கருத்து கூற விரும்பவில்லை.
திண்டுக்கல்,எங்க ஊர் பக்கம் சுயமரியாதை திருமணம் தான் அதிகம் நடக்குது
நல்ல அனுபவம்.. சுய மரியாதை திருமணமோ.. அய்யர் வைத்தோ இரு மனம் இணைந்தாலே திருமணம்தான்...
நல்ல கொசுவத்தி.
நல்ல கொசுவத்தி.
aanaa sappunu poiduchee
//தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே//
paavam avarr
//என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது)//
எல்லம் சூப்பருங்க...கலக்கல் ஆன இந்த ரெண்டு லைனும் எத்தன தடவ படிச்சாலும் புரியல அதுவும் "தேவதை போல பொண்ண"ன்ற வார்த்தை கொஞ்சம் கூட புரியலைங்க...
ஹா...ஹா....ஹா...! வாழ்த்துக்கள் தோழி அருமையான பகிர்வு...அடுத்து சித்ரா என்ன எழுதுறாங்கன்னு பாக்குறேன்.....!
வாழ்க வளமுடன்....
என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).
சரி..ச.....ரி... :)
இந்தத் தொடரை தொடர நான் அழைப்பது புன்னகைதேசம் சாந்தி, ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.
அவ்வ்வ்வ்வ்வ்.. என்னையுமா.. நாம் படிப்பதோட சரி.. அல்லாரும் எழுதுங்க நேரம் கிடைச்சா வாசிப்பேன்.. ( இப்ப நள்ளிரவில் பேய் மாதிரி )
வாழ்க்கையில மறக்க முடியாதது இதுப்போன்ற நினைவுகள்..!! அருமை..
"அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு" என்று கறாராக கூறிவிட்டார். என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).
சூப்பருங்கோ.......
ிருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது ......
more details please...... நாங்க தொடரணும்னா சும்மாவா..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...
நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!
ஆமாமாம் சொன்னாங்க.
நன்றி செளந்தர்!
ஆமாம். நடக்குது.
நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
நீங்கள் சொல்வது 100% உண்மை.
முதல் வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி!
நன்றி எல்கே!
தேவதைன்னு சொன்னது பொருக்குதா பாரு.
நன்றி தேவா!
ஒரு சின்னதா கற்பனை பண்ணி சந்தோஷப்படக்கூடாதே. உடனே ஆப்போட வந்துருவீங்களே.
நன்றி சி.கருணாகரசு!
முதல் வருகைக்கு நன்றி புன்னகைதேசம்!
நன்றி ஜெய்லானி!
நன்றி சித்ரா!
வாங்கம்மா தாயம்மா. உங்களுக்கு புரியலயா? நாங்க நம்பிட்டோம். ஒரு முறை சந்தனமுல்லை ப்ளாக்கை படிச்சுக்கோங்க.
//(அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).//
வடிவேலு வாய்ஸ்லதான் நினக்கத் தோணுது!! நல்ல டைமிங்!!
அப்புறம், நானுமா? காம்ப்ரமைஸ்.. ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு.. ரொம்ப டீடெய்லா யோசிச்சா, என்னால் என் புகுந்த வீட்டினர் செய்துகொண்ட காம்ப்ரமைஸ்கள்தான் ஞாபகம் வருது!!
கோச்சுக்காதீங்க, மெதுவா எழுதுறேன், சரியா? ஊருக்குப் போறேன், அதான்!!
பொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம் பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை.//
அட அது அந்தக் காலம். இந்தக் காலத்தில் இளசுகளுக்கு போன், facebook, மின்னஞ்சல் என்று தொடர்பு கொள்ள நிறைய வழிகள் இருக்கு.
உங்கள் அனுபவப் பகிர்வு அருமை. தமிழ் தெளிந்த நடையில் இருக்கிறது. தொடர்ந்தும் நிறைய எழுதுங்கோ.
வாழ்த்துக்கள் சகோதரி!
வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா!
மெல்ல எழுதுங்கள். ஒன்றும் அவசரமில்லை.
முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி தமிழ் மதுரம்!
ஆமாம் இப்போதான் உடனே தொடர்பு கொள்ள முடிகிறது. இந்த போனில் வேறு மணிக்கணக்காக பேசிக்கொள்கிறார்கள்.
அக்கா, எழுதிட்டேன் (ஒருவழியா)..
http://hussainamma.blogspot.com/2010/09/blog-post_27.html