குற்றாலக்குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்ப கவிராயர் என்பவர். இவர் தென்காசி அருகிலுள்ள மேலகரம் என்ற ஊர்ல பிறந்தவராம். குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதரைப்பற்றியும் அவரது மனைவி வசந்தவல்லியைப்பற்றியும் பாடியுள்ளார். அதோட அந்த மலையின் வளம், அவர்களின் நாகரீகம் அவர்களின் கடவுள், பழக்கவழக்கங்கள் என்பதை பாடலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். குறவஞ்சி என்றால் குறத்தி வாயிலாக பாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் இதன் பெயர் குறவஞ்சி. குற்றாலத்தைப்பற்றி பாடுவதால் குற்றாலக் குறவஞ்சி. குறத்தி திருக்குற்றாலநாதருக்கும் வசந்தவல்லிக்கும் உள்ள காதலை அறிந்து அதனை வசந்தவல்லியிடம் பாடலாகப் பாடி பரிசு பெறுவதுபோல் அமைந்துள்ளது.
இந்தப்பாடல்களைப் படித்த மதுரை மன்னர் முத்துவிசயர்ஙக சொக்கநாத நாயக்கர் பாடலில் மயங்கி புலவருக்கு குறவஞ்சி மேடு என்ற நிலப்பகுதியை பரிசளித்தாராம். இதிலுள்ள எதுகை மோனை இந்தப் பாடல் வரிகளில் இருக்கும் அழகு இந்தப்பாடல்கள் நம்மைக் கவர்கின்றன.
குறத்தி மலை வளம் கூறுதல் என்ற பகுதியில் இருந்து இரண்டு பாடல்கள். முதல் பாடல் நான் பள்ளியில் படிக்கும்போது மனப்பாடப் பகுதியில் வந்தது. அப்போது படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.
இதன் பொருள்:
திருக்குற்றாலமலையில் உள்ள ஆண் குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து மந்திகளுக்கு கொடுத்துக் கொஞ்சி மகிழும். அப்பழங்களைத் தின்றும் சிதைத்தும் பெண் குரங்குகள் விளையாடும். இவ்வாறு மந்தி சிந்திய பழங்களை வான் உலகில் வாழும் தேவர் கூட்டம் மிக வேண்டி விரும்பிக்கேட்கும்.
காடுகளில் வாழும் வேடர்கள் தங்கள் கண் பார்வையாலேயே உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள். வான் வழியாகச் செல்லும் சித்தர்கள் கீழிறங்கி இம்மலைக்கு வந்து உடலுக்கு நன்மை அளிக்கும் யோகங்கள் என்னும் சித்து வேலையைச் செய்வார்கள். இம்மலையிலுள்ள தேன்கலந்த மலை அருவியின் அலைகள் மேல் நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் இருந்து வழிந்து ஓடும். அதனால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச் சக்கரமும் வழுக்கி விழும்.
வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியையும் உடையவர் திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான். அவர் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்கது திருக்குற்றாலமலை. அம்மலையே எங்களுக்கு உரியது என்று குறத்தி மலைவளம் கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது.
இன்னொரு பாடல்
கொல்லிமலை எனக்குஇளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்உலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்அரிய சாமிமலை மாமிமலை அம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்இனங்கள் முழவுகொட்ட மயில்இனங்கள் ஆடும்
திரிகூடமலை எங்கள் செல்வமலை அம்மே.
இதன் பொருள்:
கொல்லி மலையானது எனக்குப் பின்பிறந்த செல்லி என்பவளுக்கு உரிய மலை ஆகும். அவள் கணவனாகிய குமாரக் கடவுளுக்குக் குடிக்காணி ஆட்சியாக இருப்பது பழநி மலை ஆகும். ஞாயிறு மேல் எழும்பிச் செல்கின்ற விந்தை என்னும் மலையே என் தந்தைக்கு உரிய மலை ஆகும். இமயமலை என்னுடைய தமையனுக்கு உரிய மலை ஆகும்.
சொல்வதற்கு அரிய சுவாமிமலை என் மாமியாருக்கு உரிய மலை ஆகும். நாஞ்சில் நாட்டில் உள்ள வேள்வி மலை என் தோழிக்கு உரிய மலை ஆகும். மேகக்கூட்டங்கள் மிருதங்கம் போன்று இனிய ஓசையை எழுப்ப, அதற்கேற்ப மயில்கள் நடனம் ஆடுகின்ற திரிகூடம் என்னும் திருக்குற்றால மலையே எங்களுக்குச் செல்வப் பொருளாக இருக்கின்ற மலை ஆகும்.
குறவர்களின் வாயிலாக இந்தப்பாடலை ஏன் பாடல் ஆசிரியர் அமைத்துள்ளார். ஒருவேளை குறவர்கள் அந்தக்காலத்திலேயே கலப்புமணம் புரிந்தவர்கள் என்பதாலா? அதுதாங்க முருகனுக்கு வள்ளியை திருமணம் செய்து வைத்தார்கள் அல்லவா?
டிஸ்கி: இப்போ எதுக்கு குற்றாலக்குறவஞ்சின்னு கேட்குறீங்களா? கணவர் என்னை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். அதனால் இந்தபாடல்களை தயார் பண்ணி குற்றாலத்திற்கு கிளம்புவதற்கு முன்பாவது போய்வந்த பின்பாவது போடலாம் என்றிருந்தேன். என்னாச்சுன்னா அவரு அல்வா கொடுத்துட்டாரு. குற்றாலம் போகாமலேயே பாடலைப்போட்டுவிட்டேன். என் வாயில் புகை வருவது தெரியுதா? வயிறு அவ்வளவு எரியுது.
முஸ்கி: நம்ம மங்குனி ப்ளாக்குல இந்த முஸ்கியப் பாத்துட்டு நம்மளு எப்படியாவது இந்த முஸ்கியப் போடனும்னு இருந்தேன். இன்னக்கி போட்டுட்டேன். (ங்கொய்யால நாங்களும் போடுவம்ல)
மக்களே கலைஞர் டிவியில் மேட்ரிக்ஸ்-ன்ற ஆங்கிலப்படத்த தமிழ்ல போடுறாங்க. நாளைக்கு (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு. என்ன மாதிரி இங்கிலீஸ் தெரியாவங்கல்லாம் பார்த்து பயனடையுங்கள். இங்கிலீஸ்லயே ஒருமுறை பார்த்துட்டேன். என் பிள்ளைகளின் உதவியுடன். படம் நல்லாயிருக்கும் பாருங்க.
This entry was posted on 7/14/2010 and is filed under
சங்கப் பாடல்கள்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
20 comments:
அருமை. பகிர்வுக்கு நன்றி
//குற்றாலம் போகாமலேயே பாடலைப்போட்டுவிட்டேன். என் வாயில் புகை வருவது தெரியுதா? வயிறு அவ்வளவு எரியுது.
/
இந்த பாட்டை கேட்டுட்டு இங்கயே குற்றாலம் வந்திருக்குன்னு நினச்சி இருப்பார்
gundamma.. matrix podradhu kalaignar tv la..
நன்றி எல்கே!
நீங்க உங்க ஆளுகளுக்குத்தான சப்போர்ட் நிப்பீங்க.
நன்றி மகளே!
மாற்றிவிடுகிறேன்.
எனக்கு ஸ்கூல்லே தமிழ் வகுப்பிலே இருந்த ஃபிலீங்!
பைதிவே, இந்த விளக்கவுரையை அங்கிளுக்குச் சொல்லி சொ.செ.சூ வைச்சுக்கீட்டீங்களோ?
:)))
ஹஹ்ஹா...அனானி மற்றும் உங்க கமெண்ட் ரசிச்சேன்! :))
நன்றி சந்தனமுல்லை!
அது உண்மையிலேயே என்னோட மகள்தான். பெயரைப்போடாமல் விட்டுவிட்டாள்.
ay kutraalam enga area..
நன்றி ரமேஷ்!
உங்க ஏரியா உள்ள வரலாமா?
குற்றால அருவியில் குளிக்காம உங்க எழுத்துகளிலே நான் குளித்தேன்....நல்ல பதிவு வாழ்த்துகள்.
பதிவு அருமை குளுகுளுன்னு..
//உங்க ஏரியா உள்ள வரலாமா?//
welcome welcome
அருமையான பதிவு!!
குற்றால குறவஞ்சி என்றாலே, வானரங்கள் கனி கொடுத்து பாட்டு தான் நினைவு வருகிறது.
நல்ல பகிர்வு.
உங்க மகளின் கமெண்ட்டும்..:-))
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
எனக்கு ஸ்கூல்லே தமிழ் வகுப்பிலே இருந்த ஃபிலீங்!
குற்றாலக் குறவஞ்சி பள்ளியில் படித்தது.. அப்போது மனப்பாடம் செய்ய அழுவோம்..
இப்போது படிக்கும்போது ஒரு அற்புதமான பாடலை தவற விட்டது புரிகிறது..
மாட்ரிக்ஸ் படம் கனவுலகிர்க்கும், நிஜ உலகிற்கும் இடைப்பட்ட படம்... அதனைப் பற்றி எழுதப் போகிறேன்... பார்க்கலாம் தமிழில் ஒழுங்காக மொழி மாற்றம் செய்திருக்கிறார்களா என்று..
kutraalam, ilanji, shencottai,thaenkasi,paimpolil, thirumalaik koil ;intha oorkalai ellaam marakka mudiyaathu! neer valamum.nilavalamum niraintha pakuthi.
நன்றி ஆர்.கே.குரு!
முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி மலிக்கா!
ரமேஷ் நான் ஏற்கெனவே ஒரு முறை வந்திருக்குறேன்.
நன்றி மேனகா!
நன்றி அம்பிகா!
நன்றி சவுந்தர்!
நன்றி தமிழ் உதயம்!
என்னோட மகள் கூட அப்படித்தான் சொன்னாள்.
நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
எனக்கு பள்ளியில் படிக்கும்போதே இந்தப்பாட்டு ரொம்பப் பிடிக்கும். மேட்ரிக்ஸ் படம் தமிழில் நன்றாக மொழி பெயர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.
முதல் வருகைக்கு நன்றி எல்.சி.நாதன்!
ஆமாம் பசுமையான பகுதிகள்.