காற்றில் வரும் கீதம்
7/09/2010 | Author: ஜெயந்தி
எனக்கு பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். வேலை செய்யும்போதுகூட பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்தால் வேலையின் சிரமம் தெரியாது. அதேபோல் மனதிற்கு கஷ்டமாக இருக்கும் நேரங்களில் பாட்டுக்கேட்டால் மனசு லேசாகும். என்னவோ எனக்கு சின்ன வயதிலிருந்தே பாட்டுன்னா உயிர்.

"காற்றினிலே வரும் கீதம்"ன்னு தொடங்கற பாட்டுக்கள் எல்லாமே எப்படி ரொம்ப அருமையா அமைஞ்சிருக்கு. எப்போக் கேட்டாலும் இனிமையா இருக்கும்.



எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்து பாடிய பாடல் "காற்றினிலே வரும் கீதம்". சாகாவரம் பெற்ற பாடல். பழைய மீரா படத்தில் வரும். இனிமையான பாடல்.

இன்னொரு பாட்டு ஜானி படத்தில் வருமே நம்ம ஸ்ரீதேவி கொட்டும் மழையில் மேடையில் பாடுவாங்களே அந்தப் பாட்டு.
"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே..." அப்பா எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது. என்னா பாட்டு. இந்தப் படத்தில் வரும் எல்லாப்பாடல்களுமே ரொம்ப நல்லா இருக்கும்.



ஒருமுறை ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகி சித்ரா அவர்கள் சொன்ன ஒரு தகவல் "ராஜா சார் ஒருமுறை சொன்னாரு அவங்க ஊரு தேனிப்பக்கத்தில் கிராமம். அங்கே டூரிங் தியேட்டரில் ராஜா சார் இசையமைத்த படம் ஓடிக்கொண்டிருந்ததாம். டூரிங் கொட்டகைனா திறந்தவெளி அரங்கம்தானே. அருகில் காடு உண்டாம். இந்தப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட பாடல் வந்தவுடன் அந்தக் காட்டில் இருந்து யானைகள் கிளம்பி வந்து தியேட்டர் அருகே நின்றுவிடுமாம். பாட்டு முடிந்தவுடன் கிளம்பிச் சென்று விடுமாம். அந்தப்படம் ஓடிய அத்தனை நாட்களும் இது நடந்ததாம்." என்று இளையராஜா அவர்கள் சொன்னதாக சித்ரா  சொன்னார்.

பழைய மீரா பாட்டில் வருமே கல்லும் கனியும் கீதம், காட்டு மிருகமும் கேட்கும் கீதம் என்னும் வரும் வரிகள் எத்தனை பொருத்தம் என்று தோன்றியது.

அப்புறம் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த படம். பாசில் இயக்கம் என்று நினைக்கிறேன். அந்தப் படத்துல வருமே "காற்றில் வரும் கீதமே எந்தன் கண்ணனை அறிவாயோ" இந்தப்பாடலும் ரொம்ப நல்லா இருக்கும்.

காற்றில் வரும் கீதம் என்று தொடங்கும் பாடல்கள் எல்லாமே இனிமையாக இருப்பதன் காரணம் என்ன?
This entry was posted on 7/09/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

23 comments:

On July 9, 2010 at 3:30 PM , எல் கே said...

unmaithannn

 
On July 9, 2010 at 3:35 PM , சௌந்தர் said...

நல்ல ரசனை இப்போது டிவியில் இரவு பழைய பாடல் போடுகிறார்கள். "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே... ஜெயா பிளஸ் இந்த பாடல் போடுவார்கள். உங்களுக்கு தெரியும் நினைகிறேன்

 
On July 9, 2010 at 3:43 PM , Unknown said...

//"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே..." அப்பா எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது.//

Excellent Song..

 
On July 9, 2010 at 3:43 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காற்றாக வருவாயா -உன்னைத் தேடி
காற்றில் என் - வரலாறு
காத்து காத்து -என் புருசன்தான் எனக்கு மட்டும் தான்

எனக்கு தெரிஞ்ச காற்றுப்பாடல்கள்

 
On July 9, 2010 at 3:53 PM , தமிழ் அமுதன் said...

///இந்தப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட பாடல் வந்தவுடன் அந்தக் காட்டில் இருந்து யானைகள் கிளம்பி வந்து தியேட்டர் அருகே நின்றுவிடுமாம். பாட்டு முடிந்தவுடன் கிளம்பிச் சென்று விடுமாம்.///

அருமையான தகவல் நன்றி...!

 
On July 9, 2010 at 4:15 PM , ஜெயந்தி said...

நன்றி எல்கே!

நன்றி செளந்தர்!
அந்தப்பாட்டு போட்டா கேட்டுட்டுத்தான் அடுத்த வேலை.

நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
ஆமாம்.

 
On July 9, 2010 at 4:17 PM , ஜெயந்தி said...

நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!

நன்றி தமிழ் அமுதன்!

 
On July 9, 2010 at 4:19 PM , dheva said...

பாட்டு கேட்பது என்பது செம ஜாலி அதிலும் அனுபவித்துக்கேட்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.....இதில் நீங்க சொல்லியிருக்கும் அத்தனை பாட்டுமே சூப்பர்தான்..

இசைக்கு மயங்காதாவர் யார்தான் உண்டு....உங்கள் வலைப்பூவின் தலைப்பே...."பாடினியார்" தானே....


நல்ல பகிர்வு...ஜெயந்தி....!

பின் குறிப்பு: பாட்டு கேட்டுகிட்டே....வேலையையும் பாருங்க....ஹா..ஹா...ஹா..வாழ்த்துக்கள்!

 
On July 9, 2010 at 4:22 PM , சந்தனமுல்லை said...

:)) நல்ல ஆராய்ச்சி மேடம்...

 
On July 9, 2010 at 4:26 PM , ஜெயந்தி said...

நன்றி தேவா!
எப்படி கண்டுபிடிச்சீங்க. எனக்கு பாட்டு பிடிக்கும்றதுனாலதான் அந்தப்பெயர் வைத்தேன். அதோடு பழைய சங்கப் பெண் புலவர் காக்கைப்பாடினியார் பெயரும்.

நன்றி சந்தனமுல்லை!

 
On July 9, 2010 at 5:06 PM , Menaga Sathia said...

சூப்பர்ர் பதிவு!! //காற்றில் வரும் கீதம் என்று தொடங்கும் பாடல்கள் எல்லாமே இனிமையாக இருப்பதன் காரணம் என்ன? // நானும் இந்த பதிவை படித்த பிறகு தான் கவனித்தேன் காற்றில் வரும் கீதத்தில் நிரைய பாடல்கள் இருப்பதை...பகிர்வுக்கு நன்றிங்க...

 
On July 9, 2010 at 8:00 PM , ப்ரியமுடன் வசந்த் said...

எனக்கு அந்தப்பாட்டுல வர்ற ஸ்ரீதேவிதாங்க ரொம்ப பிடிக்கும்...

//எனக்கு பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். வேலை செய்யும்போதுகூட பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்தால் வேலையின் சிரமம் தெரியாது.//

மீ டூ எப்பவும் ஐ பேட்தான் என் கூடவே இருக்கும்...

 
On July 9, 2010 at 11:22 PM , அம்பிகா said...

அருமையான பாடல்கள்.இந்த வரிசையில் காற்றினிலே வரும் கீதம் படத்தில் வரும் `கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் ‘ பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 
On July 10, 2010 at 12:19 AM , செ.சரவணக்குமார் said...

நானும் காற்றில் வரும் கீதத்தின் ரசிகன் தான்.

ஜானி படத்தில் வரும் 'காற்றில் எந்தன் கீதம்' பாடல் எப்போது கேட்டாலும் அவ்வளவு ரம்மியமாக இருக்கும். ஜானகியம்மாவின் அந்தக் குரல் அடடா..

நல்ல பகிர்வுக்கு நன்றி மேடம்.

 
On July 10, 2010 at 12:42 AM , சாந்தி மாரியப்பன் said...

காற்றின் மொழி இசையா--- மொழி படத்தில் வரும் பாடல்.

பாட்டுக்கேட்டுக்கிட்டே வேலைசெய்யுற பழக்கம் எனக்கும் இருந்தது. எப்போ காணாம போச்சுன்னு தெரியலை:-( மறுபடி கண்டுபிடிக்கணும்.....

அருமையான பகிர்வுங்க.

 
On July 10, 2010 at 2:27 AM , ALHABSHIEST said...

கண்டேன் எங்கும் பாடலை விட்டுட்டீர்களே

 
On July 10, 2010 at 8:29 AM , ஜெயந்தி said...

நன்றி மேனகா!

நன்றி வசந்த்!
எங்களுக்கு ஸ்ரீதேவி பிடிக்கும்.

நன்றி அம்பிகா!
ஆமாம்.

 
On July 10, 2010 at 8:32 AM , ஜெயந்தி said...

நன்றி செ.சரவணகுமார்!
அந்தப்பாடல் எல்லோரையும் உருக்கிரும்.

நன்றி அமைதிச்சாரல்!
நல்ல பழக்கத்தை விட்டுறாதீங்க.

நன்றி சிவா!

 
On July 10, 2010 at 7:51 PM , http://rkguru.blogspot.com/ said...

அருமை ..........

 
On July 11, 2010 at 3:41 AM , ஜெய்லானி said...

/////"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே..." அப்பா எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது.////


ஒரு தடவை கேட்டாலே போதும் , தானே மனசு ஆட ஆரம்பிக்கும் பாட்டு அது

 
On July 12, 2010 at 7:11 PM , அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//காற்றில் வரும் கீதம் என்று தொடங்கும் பாடல்கள் எல்லாமே இனிமையாக இருப்பதன் காரணம் என்ன?..//
காற்றில் வரும் என்பதாலோ என்னமோ இனிமையாக இருக்கிறது போலும்... உண்மைதாங்க... அந்த பாடுகள் எல்லாமும் அருமை தான்

 
On July 12, 2010 at 9:48 PM , app_engine said...

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
"காற்றினிலே வரும் கீதம்"
(படத்தின் பெயரும் "காற்றினிலே வரும் கீதம்" )

 
On July 14, 2010 at 10:10 AM , ஜெயந்தி said...

நன்றி rk guru!

நன்றி ஜெய்லானி!

முதல் வருகைக்கு நன்றி அப்பாவி தங்கமணி!
நானும் அப்படித்தான் நினைப்பேன்.

நன்றி app_engine!
அருமையான பாடல்தான்.