காதல் திருமணம்
11/26/2010 | Author: ஜெயந்தி
சமீபத்தில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மணமக்கள் மேடைக்கு சற்றுத்தள்ளி சிறிய மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதில் அப்பா மேல் சிங்கர் (ஆண் பாடகர்), 12 வயது மகள் ஃபிமேல் சிங்கர் (பெண் பாடகர்),  இன்னும் இரண்டு மூன்று ஆண்கள் கீ போர்ட் மற்றும் வாத்தியங்கள் வாசித்தார்கள். அம்மா சவுண்டை சரிபண்ணும் கருவியை மேடை மேல் வைத்துக்கொண்டு மேடைக்கு கீழே சேர் போட்டு அமர்ந்து கொண்டு சவுண்டை சரி பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களின் மகன் 3-4 வயதிருக்கும் நான்கு மேளங்கள் இணைந்தார்போல் ஒரு இணைப்பை அவன் முன் வைத்து ட்ரம்ஸ் அடிக்கும் குச்சியை வைத்து அடித்துக்கொண்டிருந்தான். அவனும் அம்மாவைப்போலவே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பையனைப் பார்த்தவுடன் இப்படித்தான் சூப்பர் சிங்கரில் பாடிய ஸ்ரீகாந்தும் உருவாகியிருப்பான் என்றாள் என் மகள்.

ஸ்டேஜில் இருக்கும் அப்பா அம்மாவை கண்களால் அழைத்து மகன் எங்கே என்று கேட்கிறார். திரும்பிப்பார்த்த அம்மாவின் முகத்தில் சின்ன பதற்றம். பக்கத்தில் மகனைக் காணவில்லை. இருவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே கண்களால் தேடுகிறார்கள். அப்பா உயரமான இடத்தில் நிற்பதால் மகனை உடனே கண்டுபிடித்துவிடுகிறார். அம்மாவிடம் கண்களாலேயே சுட்டிக்காட்டுகிறார். கல்யாணத்திற்கு வந்த இன்னொரு குழந்தையின் அருகே இருக்கும் சேரில் இந்தக் குழந்தை ஏறமுடியாமல் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவித நிம்மதியுடன் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள்.



கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம்.

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ

கண்களின் மொழிகளைப்பற்றிய அருமையான பாடல்களும் உள்ளன.

மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை.

சாதிகள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் மணங்களும் நடந்திருக்கும். எத்தனை எதிர்ப்பு இருந்த போதிலும், காதல் மரணங்கள் இருந்த போதிலும் இந்தக் காதல் மட்டும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் காலகாலத்திற்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. புதிதாக பிறந்துகொண்டே இருக்கிறது. உலகத்தை வாழ வைப்பதே காதல்தானே.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் அதற்கேற்ற சட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம். இத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கிறதே. அவர்களுக்கு நிறைய சலுகைகள் அளித்து சாதியற்ற ஒரு குழுவை உருவாக்கலாம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் சாதியை வெறுக்கும் அனைவரும் அதில் இணையலாம் என்று கூறலாம். அவர்களுக்கு வேலை, படிப்பு அனைத்திலும் முன்னுரிமை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்தக்குழு பல்கிப்பெருகி சாதியில்லாத நிலைமையை உருவாக்கும். சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...

டிஸ்கி : கண்களால் பேசிக்கொள்ளும் பாடல்களை பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.
This entry was posted on 11/26/2010 and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments:

On November 26, 2010 at 1:09 PM , ப்ரியமுடன் வசந்த் said...

கண் பேசும் வார்த்தைகள் எப்பவும் புரியறதே இல்லை:(

சொல்லாமலே படத்தில் சொல்லாதே சொல்லசொல்லாதேன்னு லிவிங்ஸ்டன் கௌசல்யா நடித்த பாடல்...
http://www.youtube.com/watch?v=s6Z-snt8HvQ

காதலுக்கு மரியாதை லவ் அண்ட் ல்வ் ஒன்லி புத்தகத்தை பார்த்த பிறகு வரும் விழியில் விழி மோதி
http://www.youtube.com/watch?v=WjnI77QQRts

ஜெயம் திரைப்படத்தில் ரவியும் சதாவும் நடித்த கோடி கோடி மின்னல்கள்..
http://www.youtube.com/watch?v=_5jNNxjW5tc

சுப்ரமணிய புரத்தில் வரும் கண்களிரண்டால்
http://www.youtube.com/watch?v=L9PuB-N69pQ

இன்னும் நிறைய இருக்கு...

 
On November 26, 2010 at 1:27 PM , Unknown said...

சாதிதான் நிறைய கட்சிகளின் சொத்து, ஓட்டு வங்கி, சுலப்மான வ்ழி.. அதை ஒழித்து தஙகளின் பிழைப்பை த்ங்களே கெடுக்க அவங்க்ளுக்கு பைத்தியமா பிடித்து இருக்கு ?

 
On November 26, 2010 at 3:51 PM , வார்த்தை said...

//காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை
வாங்குவது மட்டும் மாறவில்லை.//

ம்க்கும்... வெளங்கீரும்

http://vaarththai.wordpress.com

 
On November 26, 2010 at 4:52 PM , Unknown said...

அந்த ஆர்கெஸ்ட்ரா குடும்பம், மிகவும் சுவாரசியம் ...

 
On November 26, 2010 at 7:02 PM , Unknown said...

நல்ல பகிர்வுங்க..

இப்ப யோசிச்சு பார்த்தா.. நலந்தானா பாட்டு மட்டும்தான் ஞாபகம் வருது.. மேல வசந்த் சொல்லியிருக்கற பாடல்களும் நல்லாயிருக்கும்..

 
On November 26, 2010 at 7:48 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு அனுபவம் இல்லிங்கோ

 
On November 26, 2010 at 9:09 PM , Chitra said...

கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது.


..... ;-)


சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை.


.... :-(

 
On November 26, 2010 at 9:30 PM , அம்பிகா said...

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே;
காதாலேக் கேட்டு கேட்டு செல்லாத
படம் -அடுத்த வீட்டுப் பெண்.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் மன்றாடுதே.
படம் - வஞ்சிக் கோட்டை வாலிபன்.

விழியிலே மலர்ந்தது; உயிரிலே கலந்தது
படம்- புவனா ஒரு கேள்விக் குறி.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே,
படம்- அலைகள் ஓய்வதில்லை.

யோசித்தால் இன்னும் நிறைய இருக்கும்.
நல்ல பகிர்வு.

 
On November 26, 2010 at 10:48 PM , Anonymous said...

ok boss. Why antha first para. sammanthame illama adutha para. First para created a great hype then tyre punctured

 
On November 27, 2010 at 12:03 AM , R. Gopi said...

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே - அம்பிகாபதி

உன் கண்ணில் நீர் வழிந்தால் - வியட்நாம் வீடு சுந்தரம்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா - ஜீன்ஸ்

கண்ணுக்குக் குலமேது - கர்ணன்

கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது

விழியே கதை எழுது - உரிமைக்குரல்

தூங்காத கண்ணென்று ஒன்று - குங்குமம்

விழியிலே என் விழியிலே - வெள்ளித்திரை

விழியிலே ஒரு விழியிலே மவுன மொழி பேசும் பேசும் - படம் பேர் தெரியவில்லை

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல், நெஞ்சத்தை நீ தந்தால் காதல் ௦- படம் பேர் தெரியவில்லை

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக - ஆத்மா

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் - நினைத்ததை முடிப்பவன்

அவ்ளோதான் ஞாபகம் இருக்கு

 
On November 27, 2010 at 12:28 AM , Starjan (ஸ்டார்ஜன்) said...

கருத்துகள் அருமை. நல்ல பகிர்வு ஜெயந்தி மேடம்.

கதைகளை பேசும் விழியருகில் எதை நான்... அங்கடித்தெரு.

 
On November 27, 2010 at 1:01 AM , ராஜ நடராஜன் said...

//சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...//

ம்ம்ம்...(நசரேயன்கிட்டருந்து கடன் வாங்கிக்கிறேன்.)

 
On November 27, 2010 at 9:15 AM , ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லா பகிர்வு சகோதரி...

கண்களால் கூடவா பேசிக்கொள்வார்கள்... ஆச்சர்யமா இருக்கே..

 
On November 27, 2010 at 6:21 PM , செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு மேடம்.

 
On November 30, 2010 at 9:25 AM , அன்புடன் மலிக்கா said...

மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை//

அதெல்லாம் மாறாதுங்கோ மாற்றவதென்றால் அதற்கு நல்ல மனம்வேண்டும். நல்ல பதிவு ..

 
On December 1, 2010 at 2:14 AM , vinthaimanithan said...

//அந்த ஆர்கெஸ்ட்ரா குடும்பம், மிகவும் சுவாரசியம் ...//

அதே...அதே!