ஆதி காலத்துல குகைகளில் நமது வாழ்க்கை இருந்தது. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தோம். பின்னர் அதையே வேக வைத்து உண்ணவும் கற்றுக்கொண்டோம். விவசாயம் வீட்டு விலங்கு வளர்ப்பு என்று காலங்கள் மாறிக்கொண்டே வந்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை பண்படுத்தி வந்தமையே பண்பாடு என்கிறோம். அப்படி மாறி வந்த பண்பாடுதான் இன்று நம்மை கணினி முன் அமர வைத்திருக்கிறது.
கலாச்சாரம் என்பது நமக்கான வாழ்க்கை முறைக்கான சட்ட திட்டங்கள். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல இத்தகைய சட்டதிட்டங்கள் தேவையாக இருக்கிறது. இதுவும் ஆதி காலத்தில் இருந்து காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது உள்ளது நம் கலாச்சாரமா? நூறு ஆண்டுக்கு முன் இருந்தது நம் கலாச்சாரமா? என்று தேடிக்கொண்டு போனால் குகைகளில் போய்தான் அடையணும்.
மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு. ஒரு ஒழுங்கு உண்டு. பக்கத்துத்தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும்.
இந்த கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்க்கும் மாறுபடும். அவர்களின் பூகோள அமைப்பு, தட்பவெப்பம் போன்றவற்றிற்கு ஏற்ப அவரவர் கலாச்சாரத்தை அமைத்துக்கொண்டார்கள். உடையையே எடுத்துக்கொண்டால் தமிழ் நாடு வெப்ப பூமி என்பதால் பருத்தியால் நெய்த வேட்டியை கட்டிக்கொண்டார்கள். அதே வேட்டிதான் பெண்ணுக்கும், மேலே மறைப்பு ஏதும் இல்லாமல். குளிர் பிரதேசங்களில் கோட், சூட். பாலைவனங்களில் மணல் மேலே விழாமல் இருக்க தலையிலிருந்து கால் வரை மறைக்கும் ஆடைகள். பனிப்பிரதேசங்களில் விலங்குகளில் தோல்களினால் ஆன ஆடைகள். இந்த உடைகள் ஆரம்பகாலங்களில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருந்தது. பின்னர்தான் மாற்றமடைந்தது.
இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்ந்தது என்பதெல்லாம் இல்லை. அவரவர்களின் வாழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டதே இவை. அவரவர்களுக்கு அவரவர் கலாச்சாரம் உயர்ந்தது.
நாம் சிந்து சமவெளி நாகரீக காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது. இப்போது உலகத்தில் சிறந்த உணவுகளில் முதலாவது இடத்தைப் பிடிப்பது இந்திய உணவுகள்தான். நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு.
நம் கலாச்சாரங்களில் பிற கலாச்சாரக் கலப்பு என்பது ஆரிய, இஸ்லாமிய, ஆங்கிலேயர் வருகைகளின்போது நடந்திருக்கும். அதுவும் பெரும் அளவில் நம் கலாச்சாரத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு நம்மிடமிருந்து சிலவற்றை அவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோம்.
நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது களைந்துகொண்டேதான் இருக்கிறோம். இப்போதுகூட ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில் உள்ள அதிகபட்ச சிரமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு டைவோர்ஸ் செய்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்ளலாம் என்ற மாற்றம் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள் தேவை. அதை நாம்தான் செய்துகொள்ள வேண்டும்.
ஆனால் இப்போது நடப்பதைப் பார்க்கும் போது அந்நியக் கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நடப்பவை அந்த நினைப்பைத் தருகின்றன. அந்நிய உடை ஏற்கெனவே நுழைந்துவிட்டது, உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இந்த லிவிங் டு கெதர் என்கிற கலாச்சாரம் அப்படி எளிதாக கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.
இந்தியில் லிவிங் டு கெதர் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய வருகிறதாம். வட மாநிலங்களில் இந்தக் கலாச்சாரம் புகுந்துவிட்டதாம். தமிழ்நாட்டில்கூட நடந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?
அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பவர்கள். லஞ்ச லாவண்கங்களில் மூழ்குவதில்லை. அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும்.
நமது நாட்டில் அதுவும் சமீப காலங்களில் சரியாகச் சொன்னால் உலகமயமாக்கலுக்குப்பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், (எனது இந்த இடுகையை படிக்கவும்) பணத்தைத் துரத்திச் செல்வது, லஞ்சலாவண்யங்கள் தலைவிரித்தாடுவது போன்றவற்றைப் பார்க்கும்போது மனிதாபிமானத்தைத் தேட வேண்டியிருக்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் கலாச்சாரம் இருக்கும்போதே இரண்டு மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில் ஓமலூரில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவளது கர்ப்பப்பையில் 50 வயது ஆணின் விந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த லிவிங் டு கெதர் சரிப்பட்டுவருமா?
இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.
டிஸ்கி : இது எந்தப்பதிவுக்குமான எதிர்ப்பதிவு அல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.
This entry was posted on 11/19/2010 and is filed under
சிந்தனைகள்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
42 comments:
ம்ம்...மேற்கத்தி காரங்க மாதிரி நம்மாலே இந்த மாதிரி எல்லாம் மாறிகிட்டால் அது செயற்கை,நடிப்பு..நம் தேசம் நமக்கு சொல்லி கொடுத்த கட்டுப்பாடுகள்(பிடிக்குதோ இல்லையோ...)மட்டுமே நமக்கும் நல்லது..நம் நாட்டுக்கும் நல்லது..உங்கள் கருத்தில் முழுக்க முழுக்க உடன்படுகிறேன்...
நீங்க சரியாதான் சொல்லிருக்கீங்க. நல்ல கருத்து. பகிர்வுக்கு நன்றி
மிக சரியாக இதுல உள்ள சாதக, பாதகங்களை சொல்லிட்டிங்க. ஆனா எதிர்காலம், நமக்கு நல்லதை விட தீயதையே தரும்.
:)
தெளிவாக அந்த முறையை பற்றியும், அதனால் ஏற்பட கூடிய பின் விளைவுகளை பற்றியும் நீங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் மிக அருமை.
//நாம் சிந்து சமவெளி நாகரீக காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது.//
இதை பற்றி இப்போதைய தலைமுறையினருக்கு நினைவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி ஜெயந்தி
ஆமா ஆறு மாதம் எல்லாம் அதிகம்...இப்போதைக்கு தேவையான பதிவு
Well Said.............!!!!
பெண்களின் நிலைமை மிக மோசமாய் போகும் ஏற்கனவே இன்றைய சமூகம் பெண் பிள்ளை பெற்று கொள்ள தயங்குகிறது.குடும்பம் சின்னாபின்னமாகும். நானும் இதை பற்றி ஒரு பதிவினை நேற்று எழுதி உள்ளேன்..
வாங்க..வாங்க..நீங்களும் களத்துலே குதிச்சுட்டீங்களா? :-) கடைசி பாரா நல்லாருக்கு...
வாவ்! காய்தல், உவத்தல் இன்றி மிகத் தெளிவாக... அற்புதம்! இதற்கெல்லாம் இரண்டு,மூன்று ஓட்டுப் போடும் வாய்ப்பு இருந்தால் தேவலை. ப்ச்! ஒரு ஓட்டுத்தான் முடிஞ்சது.
நல்லதொரு பகிர்வு!!
மிக சிறந்த இடுகை.. நல்ல கருத்துகள்
நல்ல அலசல்!
ஆகா மொத்தத்தில நமக்கு ‘சுய ஒழுக்கம்’ பத்தாதுங்கிறீங்க. ஒத்துக்கிறேன்.
இரண்டாவது ஏன் பெண்களை கொஞ்சம் புத்தி மந்தம் என்கிற ரேஞ்சிலேயே நம் சமூகம் வைச்சுப் பேசுது? அவங்களுக்கு எங்கன உதைச்சு எப்படி சமூகத்தை நேர் வழிப் படித்தி எடுத்துட்டுப் போகணும்னு தெரியாதா? எப்போதான் இந்த விடலைகள் எல்லா மனுச/மனுசிகளுக்கும் உணர்வுகள்/வலிகள் பொதுவின்னும் - அது ஜாதி, மதம், இனம் கடந்ததுன்னும் தெரிஞ்சிக்கிறது.
நேரமிருந்தா இதையும் வாசிங்க, what if அடிப்படையைக் கொண்டு எழுதப்பட்டது ... http://thekkikattan.blogspot.com/2010/11/what-if.html
மற்றபடி கட்டுரை நன்று!!
சொல்ல வருவது புரிகிறதா... ஹோப், மேக் சம் சென்ஸ்.
நன்றி ஆனந்தி!
நன்றி ரமேஷ்!
நன்றி தமிழ் உதயம்!
நன்றி அருண் பிரசாத்!
நன்றி கவுசல்யா!
நன்றி சவுந்தர்!
நன்றி தேவா!
நன்றி அமுதா கிருஷ்ணா!
நன்றி சந்தனமுல்லை!
நன்றி விந்தை மனிதன்!
நன்றி மேனகா!
நன்றி எல்கே!
யார் அந்த கருப்பு ஆடு?
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தெகா!
//இரண்டாவது ஏன் பெண்களை கொஞ்சம் புத்தி மந்தம் என்கிற ரேஞ்சிலேயே நம் சமூகம் வைச்சுப் பேசுது? அவங்களுக்கு எங்கன உதைச்சு எப்படி சமூகத்தை நேர் வழிப் படித்தி எடுத்துட்டுப் போகணும்னு தெரியாதா? எப்போதான் இந்த விடலைகள் எல்லா மனுச/மனுசிகளுக்கும் உணர்வுகள்/வலிகள் பொதுவின்னும் - அது ஜாதி, மதம், இனம் கடந்ததுன்னும் தெரிஞ்சிக்கிறது.
//
நீங்கள் சொல்லும் இந்த விசயங்கள் அத்தனையும் ஏற்றுக்கொள்கிறேன். பெண்கள் அடுமைப்படுத்தப்பட்ட இனம். இப்போதுதான் மெல்ல அடிமைத்தனம் புரிந்து விடுதலையை நோக்கிச் செல்லத் துவங்கியிருக்கிறார்கள். சாதி மதம் எல்லாம் இப்போதைக்கு மாறாது என்பது என் எண்ணம்.
உங்கள் இடுகையை வாசிக்கிறேன்.
நல்ல அலசல்.
இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை அனுபவித்துவரும் பிலிப்பைனில் கூட தந்தையால் கைவிடப்பட்டு, தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டுவரும் குழந்தைகள் ஏராளம்.
இதனால் ஆண்களுக்கு மிகுந்த லாபமே. :-)
கலாச்சாரம் என்ற ஒன்று எப்போதுமே உறுதியாய் இருந்ததில்லை... மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், அது எத்தகைய விளைவுகளை உருவாக்கலாம். அதன் சாதக பாதகங்கள் என்பதை நாம் உணர்ந்து மாறிக்கொள்வதில் தவறில்லை.
சில கழிவுக்கலாச்சாரங்களும், அழிவுக்கலாச்சாரங்களும் நம்மையும் அறியாமலே காலஓட்டத்தில் நம்மில் நுழைந்துவிடும் என்பதயும் மறுக்கமுடியாது.
நன்றி ஜோதிஜி!
யாருன்னு தெரியல. நானும் பிரபலமாயிட்டேனோ?
நன்றி ரோஸ்விக்!
அழிவு, கழிவுகளையெல்லாம் அரசாங்கம் நினைத்தால் தடுத்து நிறுத்திவிட முடியும். அவ்வளவு நல்லவர்கள் எங்கே இருக்கிறார்கள்.
தெகாவின் கருத்துடன் முரண்படுகிறேன். பெற்றோர் வளர்ப்பு மாத்திரம்தான் என கருதுவது பெற்றோர் மீது பழிபோட்டு தப்பிக்க ஒரு வழி
-mani
புரிந்து கொண்டமைக்கு நன்றி, ஜெயந்தி.
//சாதி மதம் எல்லாம் இப்போதைக்கு மாறாது என்பது என் எண்ணம்.//
அதற்கு இரு பக்க உரையாடல் அவசியம். முதலில் அதனைச் சுற்றி இருக்கும் கற்பிதங்களை உடைக்க வேண்டுமெனில் எதிர் பாலினத்தவருக்கு பரஸ்பரமாக உரையாட வாய்ப்பை கொடுத்து அது போன்று ‘பண்மையடையாத’ உள்ளங்களை தனிப்பட்ட முறையில் திறுத்தி எழுதினாலே உண்டு; ஒரு அம்மா தன் பிள்ளைகளை வளர்ப்பது போல. உங்களுக்கு அதில் பங்கு இருக்கிறது. ஆணை செழுமை படுத்தி, கேணலாக எண்ணும் மனதை மாற்றும் பொறுப்பு.
இந்த கருத்துப் போர் இதனை அடிப்படையாக கொண்டே உரையாடலுக்கான ஒரு வாய்ப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது.
நன்றிங்க!
பெற்றோர் வளர்ப்பு மாத்திரம்தான் என கருதுவது பெற்றோர் மீது பழிபோட்டு தப்பிக்க ஒரு வழி//
மணி, இங்க நான் பெற்றோர்களை கை சுட்டிக் காமிக்கவில்லை... அவர்களைத் தாண்டியும் நாம் வளர்கிறோம் என்றே கூறுகிறேன். நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். அப்பொழுதுதான் வளர முடியும் என்பது என்னுடைய புரிதல்.
அதற்கான புரிதலை நோக்கிய உரையாடலுக்கு இங்கே நான் கொடுத்திருக்கும் ‘இணைப்பை’ தொடர்ந்து வாங்க. நன்றி!
மிகவும் எதார்த்தமாகவே எளிமையாக எழுதியிருக்கிறீர்கள்.
//இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?// இணைந்து வாழ்தல் பற்றியபடம் தமிழிலேயே வந்தது "அ ஆ". தாராளமயக் கொள்கையை செயல்படுத்தும் அனைத்துப் பெருநகரங்களிலும் ஐந்திலக்கச் சம்பளம் பெறும் இளைஞர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள். சென்னையிலும்தான். இதில் மாநில பேதமெல்லாம் இல்லை.
//உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை// உணவுப் பழக்கத்தில் பாதிப்பு நிச்சயம் உண்டு. நம்முடைய உணவுமுறை ஆபத்தில்லாதது. தாராளமயம் திணிக்கும் உணவுப்பழக்கம் மிகவும் கேடானது. துரித உணவுகள், ஃபிட்சாக்கள் இன்னும் பல இழவுகள் நமக்கு உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கேடானது. இன்றைய பொருளாதாரப் போரில் விதைகளே பேராயுதம். உணவும்தான். எல்லோரும் கோலாவும், குர்குரேவும், லேய்ஸும் உண்பதால் இந்தியனுக்கு இலாபமில்லை.
//இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான்// இந்த ஒரு காரணம்தான் எனக்கும் அதை ஆதரிக்கத் தயக்கமாக உள்ளது. இது ஆணின் வேலையை எளிதாக்கிவிடுகிறது.
சாதக பாதகங்களை நல்லாவே அலசிட்டீங்க..
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
well said .a very nice article perfect for currant situation!.
உங்களுடைய கருத்துகளை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.
//இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம்.//
இங்கே யாருக்குமே இதனை கவனித்து என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க ஆண்கள் சமுதாயத்தையே - இப்படி வாய்ப்புக் கிடைத்தால் எல்லாருக்கும் மனம் சஞ்சலப்படுகிற மாதிரின்னு - தார்மீகமான ஒரு கோபம் வரலயே கவனிச்சீங்களா... :))
இதுதான் யதார்த்தம் தோழர். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் globalization will eliminate contextualization. உலகம் முழுக்க ஒரே பாரம்பரியம், ஒரே பொருளாதாரம், ஒரே மொழி, ஒரே மதம். அதை நோக்கித்தான் உலகம் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். மேற்கத்திய நாடுகள் அதை திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். நாம் மந்தை ஆடுகள் போல பின்னால் சென்றுவருகிறோம்.
ஆனா, living together என்ற வார்த்தையில் எந்த தப்புமில்லை, அது சேர்ந்து வாழ்வதைத்தானே குறிக்கிறது. நமது புரிதலில் தான் பிரச்சனை உள்ளது. living togetherஐ ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு காமம் சார்ந்தியங்குவதிலுள்ள சிக்கல். நமது திருமண முறைகளும், கணவருக்கு மனைவி அடிபணிந்திருக்கவேண்டும் என்ற ஏற்றத்தாழ்வை வலியுருத்தும் போது, அந்த அர்த்தமற்ற பண்பாட்டை மறுத்து, இதுபோன்ற மாற்று நடைமுறைகள் வரத்தான் செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக, நல்லதோ கெட்டதோ, டெமாக்ரசி தான் பண்பாட்டை வடிவமைக்கும். நன்றி.
முதல் வருகைக்கு நன்றி தமிழ்வினை!
கருத்துக்களை ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க. வெளியிலிருந்து வந்த உணவெல்லாம் ஜங் புட்ஸ். அவ்வளவும் கெடுதல்தான்.
முதல் வருகைக்கு நன்றி குடுகுடுப்பை!
நன்றி அமைதிச்சாரல்!
//Thekkikattan|தெகா said...
//இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம்.//
இங்கே யாருக்குமே இதனை கவனித்து என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க ஆண்கள் சமுதாயத்தையே - இப்படி வாய்ப்புக் கிடைத்தால் எல்லாருக்கும் மனம் சஞ்சலப்படுகிற மாதிரின்னு - தார்மீகமான ஒரு கோபம் வரலயே கவனிச்சீங்களா... :))//
பெரும்பான்மையான ஆண்களின் விருப்பத்தை சொல்லியிருக்கிறேன். இதைப்படிப்பவர்களும் சமுதாயத்தில் நடப்பதை கவனித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதனால் அமைதியாக இருக்கிறார்கள்.
நன்றி ஜானகிராமன்!
நீங்கள் சொல்வதுபோலத்தான் நடக்கப்போகிறது. நமது கலாச்சாரம் அழியப்போகிறது என்கிற நினைக்கவே வருத்தமா இருக்கு.
//நமது கலாச்சாரம் அழியப்போகிறது என்கிற நினைக்கவே வருத்தமா இருக்கு.//
ஜெயந்தி, அப்படி நினைத்து வருந்த வேண்டியதில்லை. நல்ல விசயங்கள் எப்பொழுதும் காலத்தினால் பரிசோதிக்கப்பட்டு மேலும் புதுப் பொலிவினை பெறும் என்பதில் ஐயம் வேண்டியதில்லை. அது இயற்கையின் படியே சுழன்று வருகிறது -பரிணாமம். நமக்கு உள் மன ஆரோக்கியம் முக்கியம் தனிப்பட்ட ரீதியில்.
//இதைப்படிப்பவர்களும் சமுதாயத்தில் நடப்பதை கவனித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.//
அதனில் நானும், அவரும் அடக்கம். அப்படியாக ஒரு ஓபன் சிஸ்டமிருந்தால் மாற்றிக்கொண்டே செல்வேணா என்று யோசித்தாலே ஓரளவிற்கு மறுத்து சொல்லத் தோன்றலாமென்று கருதுகிறேன்.
எனிவே, நன்றி - ஜெயந்தி. பொறுமையான உரையாடலுக்கு.
இன்னைக்குதான் படித்தேன்.. ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க..
//நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது கலைந்துகொண்டேதான் இருக்கிறோம்//
கலைந்துகொண்டா அல்லது களைந்து கொண்டா ?
பணத்தைத் துறத்திச் செல்வது அல்லது துரத்தி செல்வது ?
//இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்த்தி //
ஒசத்தி என்பதை அப்படியே எழுத்து மொழியில் உயர்த்தி என்று பதிவு செய்திருக்கிறீர்கள் ஆனால் இங்கு உயர்ந்தது அல்லது மேலானது என்று பயன்படுத்தி இருக்கலாம்
நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
முதல் வருகைக்கு நன்றி எழில்!
நீங்கள் சுட்டிக்காட்டியவற்றை திருத்திவிட்டேன். நன்றி.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
மிக்க நன்றி ஜெயந்தி
நான் பதிவின் மையப் பொருளைப் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் வெறும் குறைகளை மட்டுமே சுட்டி காட்டியிருந்தேன் இதற்கு என்னை திட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள் திருத்தி இருக்கிறீர்கள்.நன்றி
கலாச்சாரம் குறித்த உங்களது பார்வை மிகுந்த முதிர்ச்சியானது.
// ezhil said...
மிக்க நன்றி ஜெயந்தி
நான் பதிவின் மையப் பொருளைப் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் வெறும் குறைகளை மட்டுமே சுட்டி காட்டியிருந்தேன் இதற்கு என்னை திட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள் திருத்தி இருக்கிறீர்கள்.நன்றி //
பதிவைப்பற்றி ஒன்னும் சொல்லாதைப்பற்றி கேட்கலாம்னுதான் நெனச்சேன். அப்புறம் சொல்லனும்னு தோணியிருந்தா சொல்லியிருப்பீங்கன்னு தோணுச்சு. அதுனால கேக்கல.
இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.
...... very interesting. பல விதங்களிலும் யோசிக்க வைத்து இருக்கீங்க.
மிகவும் ஆழமான புரிதலின் அடிப்படையில், எளிமையாக எடுத்துச்சொல்லப்பட்ட கருத்துக்கள். அழகான பகிர்வு. வாழ்த்துக்கள்!
//living together என்ற வார்த்தையில் எந்த தப்புமில்லை, அது சேர்ந்து வாழ்வதைத்தானே குறிக்கிறது. நமது புரிதலில் தான் பிரச்சனை உள்ளது. living togetherஐ ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு காமம் சார்ந்தியங்குவதிலுள்ள சிக்கல்.//
ஜானகிராமன் அவர்கள் சொல்லியிருப்பது போல,லிவிங் டுகெதர் குறித்த நம்மவர்களின் தவறான புரிதலே லிவிங் டுகெதரின் சிக்கல்களுக்கு அடிப்படை. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாத (திருமணமல்லாத) ஆண்-பெண் உறவுகளில் காமம் நுழைவதையும் அங்கீகரிக்கச் சொல்லி கேட்பதே நம்மவர்களின் லிவிங்-டுகெதரோ எனத் தோன்றுகிறது?! அது ஆரோக்கியமான தாம்பத்தியத்தின் அழிவென்றே படுகிறது!! இறுதியில், காலம்தான் பதில் சொல்லும், லிவிங் டுகெதெர் நமக்கு சரியா தவறா என்று.
பகிர்வுக்கு நன்றி.
பத்மஹரி,
http://padmahari.wordpress.com