கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அனுபவக் கணக்கு. சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த ஒரு சாமானியரின் வாழ்க்கைக் கணக்கு, தாம் பிறந்தது இந்தியாவிலா பர்மாவிலா என்ற மர்மத்தைத் தேடுகிறது, இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவிலிருந்து சிரமமான மலைப்பாதை வழியாக ஜப்பான்காரனின் குண்டு மழைகளின் நடுவே கால் நடையாக இந்தியா திரும்பிய அனுபவத்தைத் சொல்கிறது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே நடத்திச் சென்ற ஒரு பழ கமிஷன் ஏஜென்ட் வியாபாரியின் கதை. தாத்தாவிடம் கதை கேட்ட பேரனின் படைப்பு.