எனக்கு பத்து வயதோ பதினொரு வயதோ இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல்லில் வடுகமேட்டு ராசா பட்டி என்ற இடத்தில் இருந்தோம். எனது நெருங்கிய தோழி அமுதா எதிர் வீட்டில் இருந்தாள். நாங்கள் இருவரும் இணைபிரியாத் தோழிகள். பள்ளிக்குச் செல்வதானாலும் இருவரும் சேர்ந்தே செல்வோம், விளையாட்டுகளின் போதும் இருவரும் சேர்ந்திருப்போம். அக்கம் பக்கத்தில் இருக்கும் இன்னும் சில தோழிகள் அவ்வப்போது வந்து எங்களோடு சேர்ந்துகொள்வார்கள்.

சம்பவம் நடந்த அன்று எங்களுடன் இன்னொரு தோழியும் இருந்தாள். அவள் பெயர் இப்போது நினைவில்லை. அமுதாவின் வீட்டில் இந்த கொட்டை முத்து எனப்படும் ஆமணக்கு விதை ஒரு பேப்பர் கூடை நிறைய இருந்தது. அது எதற்கு வாங்கி வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. அமுதா கை நிறைய ஆமணக்கு விதைகளை எடுத்துக்கொண்டு வந்தாள். இத எதுக்கு எடுத்துட்டு வர என்றேன். அதற்கு அவள் இந்த விதையை உரித்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் பருப்பு இருக்கிறது, அதை தின்றால் ருசியாக இருக்கிறது என்றாள்.

உடனே நாங்களும் உரித்து தின்று பார்த்தோம் நன்றாக தேங்காய் போல் இருந்தது. (விதி யாரை விட்டது) உடனே மூன்று பேருக்கும் ஒரு போட்டி, யார் அதிகமாகத் தின்கிறார்கள் என்று. அந்தப் போட்டியில யார் ஜெயித்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? வேற யார் நான்தான். நாற்பது விதைகளை உரித்து தின்றேன். (நாந்தான் நம்பர் ஒன்னா?) எனக்கு அடுத்து அமுதா இருபத்தைந்தோ முப்பதோ. அந்த மூன்றாவது தோழி மிகவும் தாமதம். கம்மியாகத்தான் சாப்பிட்டாள். வீட்டிலிருந்து இரவு உணவு சாப்பிடுவதற்கு அழைப்பு வந்ததால் களைந்து சென்றோம். வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு படுத்தோம். மெல்ல தூக்கம் கண்ணைக்கட்டியது. ஆரம்பமாயிருச்சு வேலை. வயிற்றைக் கலக்கிக்கொண்டு வாந்தி, வாந்தி முடிந்ததும் பேதி. மாற்றி மாற்றி இரவு முழுவதும் இதே வேலைதான். வடிவேலு சொல்வதுபோல் வயித்துல இருந்து கொடலு குந்தாணியெல்லாம் வெளியே வந்துவிட்டது.

காலையில் மாமா ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போனாரு. நான் தெம்பே இல்லாமல் மிகவும் சோர்ந்துபோய் இருப்பதைப் பார்த்த மாமா பரிதாபப்பட்டு ஏதாவது குடிக்கிறியா என்று கேட்டார். அப்பயெல்லாம் சர்பத் குடிப்பது என்றால் தேவாமிர்தம் குடிப்பது மாதிரி. சந்தப்பத்தை நழுவவிடுவோமா என்ன? சர்பத் கேட்டு வாங்கி ருசித்துக் குடித்தேன். உள்ளே சென்ற அடுத்த நிமிடம் அதுவும் வாந்தி வந்துவிட்டது. சாப்பாடு வாந்தி வந்த போது ஒன்றும் தெரியவில்லை சர்பத் வாந்தி வந்தபோது அழுகையே வந்துவிட்டது. சர்பத்து போச்சே.

ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது அம்மா வாந்தி பேதிக்கான காரணத்தை துப்புத்துலக்கி வைத்திருந்தாள் (எங்க அம்மா காரணங்களை துப்பு துலக்கி கண்டுபிடிப்பதில் எக்ஸ்பர்ட்). 'ஆமா நேத்து நீ அமுதா இன்னொரு பொண்ணு மூணு பேரும் முத்துக்கொட்ட சாப்புட்டீங்களா?' இது எப்டி அம்மாவுக்குத் தெரியும்? (இந்த அம்மாவுக்கு நாம என்ன செஞ்சாலும் எப்படியோ தெரிந்துவிடுகிறதே?) ஆச்சரியத்துடன் 'ஆமா' என்றேன். 'அந்த அமுதாவுக்கும் ராத்திரியெல்லாம் வாந்தி பேதியாம். அவங்க அம்மா சொன்னாங்க' என்றாள். ஆனா என்னை விட சற்று கம்மியாம். அந்த இன்னொரு பெண்ணுக்கு சேதாரம் ரொம்பக் கம்மியாம். நான் பேசக்கூட முடியாத மயக்க நிலையில் இருந்ததால் பாவம் பார்த்து திட்டு கிடைக்கவில்லலை.
|
This entry was posted on 3/03/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On March 3, 2010 at 6:54 PM , வடுவூர் குமார் said...

ந‌ல்லா தின்னீங்க‌ போங்க‌. :-)

 
On March 3, 2010 at 7:59 PM , ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

;;))

 
On March 3, 2010 at 8:45 PM , ஸ்வர்ணரேக்கா said...

//சர்பத்து போச்சே.//

இந்த lineஅ படிச்சிட்டு சிரிச்சு மாளவில்லை..


//இந்த அம்மாவுக்கு நாம என்ன செஞ்சாலும் எப்படியோ தெரிந்துவிடுகிறதே?//

உண்மைதான்.. அது எப்படியோ தெரிந்துவிடுகிறது..

 
On March 3, 2010 at 9:02 PM , Sangkavi said...

//சர்பத் வாந்தி வந்தபோது அழுகையே வந்துவிட்டது. சர்பத்து போச்சே//

ஆமாங்க ஆசைப்பட்டத அளவுக்கதிகமா சாப்பிட்டு நானும் இந்த இன்ப வேதனைய அனுபவித்து இருக்கிறேன்...

 
On March 4, 2010 at 5:59 AM , Anonymous said...

hahaha..

hio hio

eppudi eppadi ellam...

rasichu padikliku sirichu sirichu padichtenga...
pakathila ulavanga ellam enaku etho pidichu pochu pola endra alavuku oru matiri pakra alvuku aitunga..

simply super..hmm.ethilyila erunthu enna cholavarengana udambu sari elathapa nama virubarthu keta kidikumnu cholrenga..note panikitenga note panikten..

nandri valaga valamudan.

varuthpadtha valibar sangam sarbaga
complan surya

 
On March 8, 2010 at 6:06 AM , Anonymous said...

anbula jeyanthi madam avargalukkum

matrum anniathu mahilrukum mahalir padivarukum

"ENIYA MAHALIR THINA VALTHUKKAL"
"Pennai pirakka maa thavam purinthida vendum amma"yaru oru kavigar chonathu..

VAruthapadtha valibarsangam sarbaha
complan surya.

 
On March 9, 2010 at 8:43 PM , ஜெயந்தி said...

நன்றி வடுவூர் குமார்!

நன்றி ஜீவன்!

நன்றி ஸ்வர்ணரேக்கா!

நன்றி சங்கவி!
அது அதிகமா சாப்பிட்டதால வந்த வாந்தி இல்ல. அது விளக்கெண்ணெய் எடுக்கிற கொட்டை விளக்கெண்ணை குடிச்சா என்னாகும்? அதே எபஃக்ட் அந்த கொட்டை சாப்பிட்டதற்கும்.

நன்றி காம்ப்ளான் சூர்யா!
மகளிர் தின வாழ்த்துக்கு நன்றி!

 
On March 19, 2010 at 10:42 AM , ச.தமிழ்ச்செல்வன் said...

வணக்கம் ஜெயந்தி அவர்களே.. இப்படி ஒரு ப்ளாக் நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது முன்பே தெரியாமப் போச்சே என்று வருத்தம் எனக்கு.ரொம்ப நல்லா எழுதறீங்க.இனி தொடர்ந்து வாசிப்பேன்.கருத்தடை ஆப்பரேசன் பண்ணிய அந்தப் பெண் பற்றிய பதிவு மனதை நெகிழ வைத்தது.நாங்கள் எல்லாம் எழுதுவதை விட நீங்கள் எழுதுவதுதான் ரொம்பவும் முக்கியமானது என்று மனப்பூர்வமாக நினைக்கிறேன்.பாடினியாரின் படைப்புகளை இனி தவறாமல் வாசிப்பேன்.வாழ்த்துக்கள்.

 
On March 19, 2010 at 11:52 AM , 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

விதி யாரை விட்டது...

ஹா ஹா..:))
--

அது அதிகமா சாப்பிட்டதால வந்த வாந்தி இல்ல. அது விளக்கெண்ணெய் எடுக்கிற கொட்டை விளக்கெண்ணை குடிச்சா என்னாகும்? அதே எபஃக்ட் அந்த கொட்டை சாப்பிட்டதற்கும்.
//
கெட்டதிலயும் ஒரு நல்லது நடந்திருக்கு பாருங்க..:))

 
On March 24, 2010 at 2:18 PM , R.Gopi said...

அளவுக்கு அதிகமா சாப்பிட்டா முத்து கொட்டையும் பேதிதான்....

அந்த நேரத்துல குடிச்ச சர்பத்தும் வாந்தி தான்...

பலே விவரிப்பு...

 
On March 24, 2010 at 9:26 PM , ஜெயந்தி said...

நன்றி ச.தமிழ்செல்வன்!
தங்கள் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி ஷங்கர்!

நன்றி R.Gopi!