சங்க இலக்கிய புத்தகம் ஒன்றை தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். அந்த வேலை ஏன் செய்றேன்னு கேட்குறீங்களா? அதுதாங்க நம்ம தொழில். புத்தகமாக்கி பிரிண்டுக்கு அனுப்ப வேண்டும். இதுல என்ன ஒரு வசதின்னா, புத்தகங்கள் படிச்ச மாதிரியும் ஆச்சு, வேலை செஞ்ச மாதிரியும் ஆச்சு. மாடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு. இதுனால ஐ லவ் மை ஜாப். என் வேலையை நான் காதலிக்கிறேன் (ஒண்ணுமில்ல மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி சொல்லிப்பார்த்தேன்).

தலைவன், தலைவி, தோழி, பசலை நோய், ஊடல், கூடல், கார்மேகம், முரசு,தினைப்புனம் இதெல்லாம் என்னன்னு பார்க்குறீங்களா? சங்க இலக்கியத்தோட தாக்கம்.

சங்கம்ன்னு போட்டுட்டு வேற என்னவோ இருக்கேன்னு பார்க்குறீங்களா? விஷயத்துக்கு வர்றேன். நம்ம சங்கத்தையும் (வலைப்பதிவர் சங்கம்) நான் ஆதரிக்கிறேன். (உன் ஆதரவு யாருக்கு வேணும்னு சொல்லீறாதீங்க. அழுதுறுவேன்)

-------------------------------

தொடர் பதிவு
இந்த அங்காடித் தெரு படம் இருக்கே அதப்பத்தி நம்ம வலையுலகத்தில் ஏறக்குறைய எல்லோருமே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கனும்.

நம்ம வலையுலகத்தில் நானும் நுழைந்ததில் இருந்து பார்க்கிறேன், ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி விவாதமாக ஓடிக்கொண்டிருக்கும். சிலது சின்னதாக முடிந்துவிடும். சிலது பற்றி எறியும். ஒன்று முடிந்தவுடன் அடுத்தது தயாராக நுழைந்துவிடும்.

இந்த நிலையில்தான் அங்காடித் தெரு ஒட்டுமொத்த வலையுலகின் ஒற்றுமையாக எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இந்த மாதிரி எல்லா விஷயத்திலும் இருந்தா எப்படியிருக்கும். ரொம்ப போரடிக்குமோ?

தொடர் பதிவு என்னன்னா இதே மாதிரி பதிவுலம் ஒற்றுமையாக ஆதரித்த விஷயங்களை பட்டியலிடலாம். ஒருவர் ஒன்றோ அல்லது அதற்கு மேலாகவோ ஒற்றுமைகளை பதியலாம். பிரியம் இருப்பவர்கள் தொடர் பதிவைத் தொடரலாம்.ச்சும்மா ஒரு வெளம்பரம்
This entry was posted on 3/31/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On March 31, 2010 at 12:40 PM , சந்தனமுல்லை said...

/நம்ம வலையுலகத்தில் நானும் நுழைந்ததில் இருந்து பார்க்கிறேன், ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி விவாதமாக ஓடிக்கொண்டிருக்கும். சிலது சின்னதாக முடிந்துவிடும். சிலது பற்றி எறியும். ஒன்று முடிந்தவுடன் அடுத்தது தயாராக நுழைந்துவிடும்./

:-)

 
On March 31, 2010 at 12:56 PM , அகநாழிகை said...

எப்டிங்க இதெல்லாம்....

 
On March 31, 2010 at 2:11 PM , தமிழ் உதயம் said...

நல்லா யோசிச்சு இருக்கீங்கன்னு தெரியுது. தொடர் பதிவு- நல்லா சிந்தனையை தூண்டும் விதமா உள்ளது.

 
On March 31, 2010 at 7:04 PM , அண்ணாமலையான் said...

ஆஹா

 
On April 2, 2010 at 12:49 PM , Anonymous said...

ohhhhhhhhhhh

good..

 
On April 2, 2010 at 5:33 PM , ஜெயந்தி said...

நன்றி சந்தனமுல்லலை!

நன்றி அகநாழிகை வாசுதேவன்!
தங்கள் முதல் வருகைக்கு நன்றி!

நன்றி தமிழ் உதயம்!

நன்றி அண்ணாமலையான்!

நன்றி காம்ளான் சூர்யா!