பதிவுலக சண்டைகள் விளைவு
10/14/2010 | Author: ஜெயந்தி

மக்களே இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.





டாக்டர்: என்னாச்சு
பெண்: டாக்டர் கம்ப்யூட்டர்ல ஏதோ ப்ளாக்காம் அதுல ஏதோ சண்டை நடந்துக்கிட்டிருந்துச்சாம். அதைப் படிச்சதலிருந்து இப்படி பித்து பிடிச்ச மாதிரி ஆகிட்டாரு டாக்டர்.


---------------------


பிரபல பதிவர்: இங்க பாருங்க நீங்க புது பதிவரா இருக்கலாம். புதுசுன்றதால நடக்குற சண்டையோட லிங்குங்க சரியா புரிய மாட்டேங்குது. அதுனால தினமும் எனக்கு கொஞ்சம் சண்ட நடக்குற லிங்குகள என்னோட மெயிலுக்கு அனுப்புங்கன்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்ல சொல்லிட்டேன்.



----------------------



வக்கீல்:
ஏங்க உங்க மனைவிய டைவர்ஸ் பண்ணனும்னு சொல்றீங்க?
ஆண்: பின்ன என்னங்க கம்ப்யூட்டர் முன்னால உங்காந்தவ எந்திரிச்சே வர மாட்டேங்கறா. ப்ளாக்ல ஏதோ சண்டையாம். அது இப்ப முடிஞ்சுரும் அது முடிஞ்சவுடனே வந்து சாப்பாடு போடறேன்னு சொல்றா.
வக்கீல்: ஏங்க ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டா சாப்பிட்டாத்தான் என்ன?
ஆண்: நீங்க வேற சார். அவ ஒரு மாசமா கம்ப்யூட்டர் முன்னாலேயேதான் உட்காந்திருக்கா. நான் வீட்டுல சாப்பிட்டு ஒரு மாசமாச்சு.



----------------------

கூகுல் மேனேஜர்: நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு ஏன் தமிழ்நாட்டுல ஒட்டுமொத்தமா எல்லாரும் சாட் பண்ணறதையே நிறுத்திட்டாங்க?
என்ஜினியர்: ஏதோ ப்ளாக்குல சண்டையாம் சார். அதுனால எல்லா சாட்டையும் பப்ளிக்கா ப்ளாக்ல போட்டுட்டாங்களாம். அதுனால யாருமே சாட் பண்றதில்ல. இ மெயில் அனுப்பறதுகூட குறைஞ்சுக்கிட்டே வருது சார்.
மேனேஜர்: நீ உடனே போயி எப்டியாவது சண்டைய நிறுத்திட்டுவா. உனக்கு ப்ரமோஷனும் இன்கிரிமென்டும் தர்றேன்.
என்ஜினியர்: சண்டைக்கு உள்ள போனே வெளியவே வர முடியாது. இந்த வேலையே எனக்கு வேண்டாம் சார் வேலைய ரிசைன் பண்றேன்.



-------------------

-------------------------

டிஸ்கி: மக்களே திரும்பவும் சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இங்கே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. நான் எல்லோரையும் நண்பர்களாகவே நினைக்கிறேன். எனது நினைப்பு எப்படியாவது இந்த சண்டை நிற்காதா என்பது மட்டுமே.
This entry was posted on 10/14/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

48 comments:

On October 14, 2010 at 1:27 PM , உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சரி.. சரி.. மனசுல வைச்சுக்குறோம். சிக்காமயா போகப் போறீங்க..!

அன்னிக்கு வைச்சுக்குறோம்..!

 
On October 14, 2010 at 1:34 PM , அஹமது இர்ஷாத் said...

முடியல போங்க ...அசத்தல் ..

 
On October 14, 2010 at 1:40 PM , ஹுஸைனம்மா said...

வாவ்!! கிளாஸ் அக்கா!! அருமையான ஐடியா - அதுவும், ‘சண்டையில் ஜெயிக்காவிட்டால்...” அறிவிப்பு சூப்பர்!!

நம்ம ரெண்டு பேரும் சேந்து கிளாஸ் நடத்துவோமா?.... அட, அடா, அதுக்கு ஏன் இப்படி பாயுறீங்க?? ;-)))))))

 
On October 14, 2010 at 1:44 PM , சி.பி.செந்தில்குமார் said...

suupparசூப்பர்

 
On October 14, 2010 at 1:45 PM , சி.பி.செந்தில்குமார் said...

லே அவுட் டிசைன்,நகைச்சுவை உணர்வு அனைத்தும் அருமை

 
On October 14, 2010 at 1:48 PM , தமிழ் அமுதன் said...

///டிஸ்கி: மக்களே திரும்பவும் சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இங்கே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. நான் எல்லோரையும் நண்பர்களாகவே நினைக்கிறேன். எனது நினைப்பு எப்படியாவது இந்த சண்டை நிற்காதா என்பது மட்டுமே.///

அதெல்லாம் நம்ப முடியாது நீங்க யாரையோ மறை முகமா தாக்குறீங்க ... !

இப்படியே ஒரு சண்டை ஆரம்பிக்கலமா..!;;;)))

 
On October 14, 2010 at 2:03 PM , சந்தனமுல்லை said...

:-)

 
On October 14, 2010 at 2:10 PM , அம்பிகா said...

அட!
‘சண்டையில் ஜெயிக்காவிட்டால்...” அறிவிப்பு சூப்பர்!!
நல்லாயிருக்கு!!!

 
On October 14, 2010 at 2:17 PM , Rathi said...

ஆஹா, ஆஹா, பதிவுலகை வெச்சு மகா, மெகா காமெடி பண்றீங்க.....!!! இனிமே, யாராச்சும் சண்டை போடுவாங்க!!!!!

 
On October 14, 2010 at 3:07 PM , விந்தைமனிதன் said...

e kalappai work aagala. adhunala tamilla type panna mudiyala.... konja neram kazhichu vaaren

 
On October 14, 2010 at 4:10 PM , Bavan said...

சூப்பரப்பு..:D

 
On October 14, 2010 at 4:17 PM , ஜானகிராமன் said...

ஜெயந்தி நீங்களுமா... (சரி பரவாயில்ல அங்க கிடைக்கிற மனக்கஷ்டத்துக்கு இங்க கொஞ்சம் சிரிக்க முடிஞ்சது)

 
On October 14, 2010 at 4:20 PM , V.Radhakrishnan said...

இது நகைச்சுவை மட்டுமல்ல, விரைவில் நடந்தாலும் நடக்கும். ;) ஹா ஹா.

 
On October 14, 2010 at 4:24 PM , கன்கொன் || Kangon said...

ஹி ஹி ஹி.....

 
On October 14, 2010 at 4:35 PM , ☀நான் ஆதவன்☀ said...

:))))))))))))))))))))))))))))))))))))

 
On October 14, 2010 at 4:38 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ க்ளாஸ்!!..ஜெயந்தி .. அடிபொளி..

பின்னூட்டத்திற்கு ஒரு டிஸ்கி:
மக்களே இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே ரசித்து எழுதப்பட்ட பின்னூட்டம். இங்கே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. நான் எல்லோரையும் நண்பர்களாகவே நினைக்கிறேன். எனது நினைப்பு எப்படியாவது இந்த சண்டை நிற்காதா என்பது மட்டுமே.

 
On October 14, 2010 at 4:48 PM , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பதிவுலக நிலைக்கேற்ற பகிடிகள். பாராட்டுக்கள்.

 
On October 14, 2010 at 4:57 PM , ரோகிணிசிவா said...

கோச்சிங் கிளாஸ் பேனர் அசத்தல் :))

 
On October 14, 2010 at 5:17 PM , Deepa said...

//தமிழ் அமுதன் said...
///டிஸ்கி: மக்களே திரும்பவும் சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இங்கே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. நான் எல்லோரையும் நண்பர்களாகவே நினைக்கிறேன். எனது நினைப்பு எப்படியாவது இந்த சண்டை நிற்காதா என்பது மட்டுமே.///

அதெல்லாம் நம்ப முடியாது நீங்க யாரையோ மறை முகமா தாக்குறீங்க ... !
// aamaam aamaam.. naanum apdi thaan nenaikkeren! :))

 
On October 14, 2010 at 5:22 PM , ராஜவம்சம் said...

விளைவு ங்கிரதை வினவு ன்னு படிச்சிட்டேன் இத வச்சி ஏதாவது சண்டைப்போடமுடியுமா?

 
On October 14, 2010 at 5:23 PM , கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல நகைச்சுவை...

 
On October 14, 2010 at 5:41 PM , மங்களூர் சிவா said...

:))))))

 
On October 14, 2010 at 5:42 PM , ஜெயந்தி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

உண்மைத்தமிழன், தமிழ் அமுதன், தீபா மூணு பயபுள்ளகளும் என்னமா கோர்த்துவிடுதுங்க பாருங்க.

 
On October 14, 2010 at 5:46 PM , வடகரை வேலன் said...

ஹா ஹா சூப்பர்.

 
On October 14, 2010 at 6:22 PM , vaarththai said...

//டாக்டர்: என்னாச்சு
பெண்: டாக்டர் கம்ப்யூட்டர்ல ஏதோ ப்ளாக்காம் அதுல ஏதோ சண்டை நடந்துக்கிட்டிருந்துச்சாம். அதைப் படிச்சதலிருந்து இப்படி பித்து பிடிச்ச மாதிரி ஆகிட்டாரு டாக்டர்.//

இதுல மனைவின்னு போடாம பெண்னு ஏன் போட்டீங்க.....
அப்ப மறைமுகமா ஆண்கள கேவலப்படுத்த நினைக்கிற "பெண்ணியவாதி"யா நீங்க?

//வக்கீல்: ஏங்க உங்க மனைவிய டைவர்ஸ் பண்ணனும்னு சொல்றீங்க?
ஆண்: பின்ன என்னங்க...............................................வந்து சாப்பாடு போடறேன்னு சொல்றா.//

மனைவின்னா கணவனுக்கு சாப்பாடு போடுற அடிமைன்னு கருத்து வர்ற மாதிரி எழுதி இருக்குற நீங்க "ஆணியவாதி"யா....?????

உண்மைய சொல்லுங்க...
யாருகிட்ட காசு வாங்கி இப்படி எழுதுறீங்க...????

(ஹி..ஹி...பதிவுலகத்துல இது எதுனா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சண்டையா மாறுதான்னு பாப்போம்...)

 
On October 14, 2010 at 6:37 PM , தஞ்சாவூரான் said...

:)))))

 
On October 14, 2010 at 6:55 PM , Mrs.Menagasathia said...

ha ha super!!

 
On October 14, 2010 at 6:55 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோச்சிங் சென்டர் அட்ரெஸ் வேணுமே. எவ்ளோ பீஸ்? கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லித் தருவாங்களா?

 
On October 14, 2010 at 6:56 PM , மங்குனி அமைசர் said...

எச்சூச்மி , எனக்கு ஒரு சேர் தர்ரின்களா ?

 
On October 14, 2010 at 6:56 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரபல பதிவர்: இங்க பாருங்க நீங்க புது பதிவரா இருக்கலாம். புதுசுன்றதால நடக்குற சண்டையோட லிங்குங்க சரியா புரிய மாட்டேங்குது. அதுனால தினமும் எனக்கு கொஞ்சம் சண்ட நடக்குற லிங்குகள என்னோட மெயிலுக்கு அனுப்புங்கன்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்ல சொல்லிட்டேன்.//

யார் இந்த திமிர் பிடித்த பிரபல பதிவர். புது பதிவருக்கு உதவாம?

 
On October 14, 2010 at 7:13 PM , ஜெயந்தி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கோச்சிங் சென்டர் அட்ரெஸ் வேணுமே. எவ்ளோ பீஸ்? கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லித் தருவாங்களா?//

பின்ன

//மங்குனி அமைசர் said...
எச்சூச்மி , எனக்கு ஒரு சேர் தர்ரின்களா ?//

சேரா ஷேரா சரியாச் சொல்லுங்க.
கோச்சிங் சென்டர்ல சேந்தா கண்டிப்பா சேர் தருவாங்க. ஷேர்ன்னா கோச்சிங் சென்டர்ல ஃபுல் அமவுண்டும் கொடுத்து பார்ட்னரா சேரனும்.

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பிரபல பதிவர்: இங்க பாருங்க நீங்க புது பதிவரா இருக்கலாம். புதுசுன்றதால நடக்குற சண்டையோட லிங்குங்க சரியா புரிய மாட்டேங்குது. அதுனால தினமும் எனக்கு கொஞ்சம் சண்ட நடக்குற லிங்குகள என்னோட மெயிலுக்கு அனுப்புங்கன்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்ல சொல்லிட்டேன்.//

யார் இந்த திமிர் பிடித்த பிரபல பதிவர். புது பதிவருக்கு உதவாம?//

அந்த பதிவரா. யாரோ செம்மொழி மாநாட்டுப்புகழ் சிரிப்புப்போலீசாமே.

 
On October 14, 2010 at 7:13 PM , ganesh said...

நல்ல நகைச்சுவை....அதோடு கூடிய சில விசயங்கள்...நன்றாக இருக்கு...

 
On October 14, 2010 at 7:17 PM , ஜோதிஜி said...

ரசித்தேன்.

 
On October 14, 2010 at 7:29 PM , பயணமும் எண்ணங்களும் said...

:)))) kalakkal Jeyanthi. I enjoyed

 
On October 14, 2010 at 7:33 PM , சௌந்தர் said...

கூகுல் மேனேஜர்: நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு ஏன் தமிழ்நாட்டுல ஒட்டுமொத்தமா எல்லாரும் சாட் பண்ணறதையே நிறுத்திட்டாங்க?///

அட டா இது ரொம்ப நல்லா இருக்கே நல்ல நகைசுவை

 
On October 14, 2010 at 7:34 PM , Kousalya said...

அடடா சூப்பர்...இப்பதான் உங்க பதிவை படிக்கிறேன்.....அந்த லிங்க் எல்லாம் பார்த்து ரொம்ப நொந்து போய் இருந்தேன்....இப்ப உங்களால சிரிச்சிட்டே இருக்கிறேன்....ரொம்ப தேங்க்ஸ்.

:))

 
On October 14, 2010 at 7:40 PM , Chitra said...

:-)

 
On October 14, 2010 at 7:41 PM , LK said...

ரொம்ப அருமையா இருந்துச்சி ஜெயந்தி. உண்மையில் பதிவுலக அரசியலினால் மனம் மிக வருத்தத்தில் இருந்த சமயத்தில் உங்கள் பதிவு ஆறுதலாய் உங்கள் பதிவு. ரொம்ப நன்றி

 
On October 14, 2010 at 7:55 PM , மனசாட்சியே நண்பன் said...

ஹலோ லண்டனா மிஸ்டர் ஹாட் ப்ளாக் இருக்காரா - சும்மா தாம்பா டென்சன் வேணாம்
superrrrrrruuuuuuuuuu

 
On October 14, 2010 at 7:59 PM , நிலாமதி said...

நல்ல நகைச்சுவை..

 
On October 14, 2010 at 8:30 PM , Anonymous said...

Excellent. சிரிச்சு மாளல.

Sethu.

 
On October 14, 2010 at 9:30 PM , அமுதா கிருஷ்ணா said...

super

 
On October 14, 2010 at 10:15 PM , அபி அப்பா said...

எல்லாமே நல்லா இருக்கு:-))) ஒரு ஓட்டும் போட்டுக்குறேன்!

 
On October 15, 2010 at 5:21 AM , Anonymous said...

அருமையோ அருமை.

 
On October 15, 2010 at 2:20 PM , ரமேஷ் கார்த்திகேயன் said...

last Image very very funny ...........

 
On October 15, 2010 at 6:28 PM , பாலா said...

குடும்பத்தில் பெரியவர்கள் மனதில் உள்ள இறுக்கத்தை குழந்தைகளின் குறும்புகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடும். அதை போன்ற ஒரு சூழலை இதை போன்ற பதிவுகள் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையுடன்..

 
On October 16, 2010 at 11:12 AM , GSV said...

:)))

 
On November 7, 2010 at 12:37 AM , முகுந்த் அம்மா said...

வித்தியாசமா யோசிச்சு அருமையா எழுதி இருக்கீங்க.
”பதிவுலக சண்டைகள் கற்றுதரப்படும்” ultimate :-))