பிறந்த நாள்
10/16/2010 | Author: ஜெயந்தி


இந்த போட்டோவுல இருக்கவங்களுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம். அவங்களுக்கு சுய தம்பட்டம் பிடிக்காதாம். அதுனால என்கிட்ட போட்டோவ குடுத்து போடச்சொன்னாங்க.

அவங்க பிறந்த தேதி சரியாத் தெரியாதாம். ஏன்னா அவங்க அம்மா தமிழ் மாசம் தமிழ் தேதிய மட்டும்தான் ஞாபகத்துல வச்சிருந்தாங்க. ஆனா அவங்க கொடுத்த ஒரு க்ளூ என்னன்னா இவங்க பொறந்த நாள் அன்னிக்கித்தான் சரஸ்வதி பூஜை கொண்டாடிக்கிட்டிருந்தாங்களாம். எல்லாரும் சாமி கும்பிட்டு பொரியெல்லாம் சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். அன்னிக்கி சாயங்காலம் 7 மணிக்கு நீ பொறந்தன்னு சொன்னதால இவங்க ஒவ்வொரு வருஷமும் சரஸ்வதி பூஜை அன்னிக்கே தன்னோட பொறந்த நாளா வச்சுக்கிட்டாங்களாம். அவங்களுக்கு ஒரு சந்தோஷம் படிப்பக் கும்புடுற நாள் அன்னிக்கி பொறந்ததுதான். (யாருப்பா அது அன்னிக்குத்தான் ஆயுதத்துக்கெல்லாம் பூஜை போடுவாங்கன்னு சொல்றது)

அப்புறம் என்னோட வயசு 30 முடிஞ்சு 29 நடக்குது. அது கொஞ்ச வருஷமா அப்படித்தான் போயிட்டிருக்கு. (எந்த வருஷத்துல இருந்து இப்படி போகுதுன்னு கேட்கறது யாருப்பா? நம்ம சிரிப்பு போலீஸ்தான. அப்புறம் கவனிச்சுக்கறேன்.)

என் ப்ளாக்குக்கும் முதல் பிறந்த நாள்

நான் இதை ஆலோசிச்செல்லாம் துவங்கல. இது ஒரு கோ-இன்சிடென்ட்ன்னு சொல்லலாம். என்னோட கணவர் என் மகனிடம் தனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பித்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அவன் அவருக்கு ஒன்று ஆரம்பித்துக்கொடுத்துவிட்டு நீயும் ஒன்னு ஆரம்பிக்கிறயான்னு கேட்டான்.

அவன் கிண்டலாக கேட்கிறான்னு நெனச்சுக்கிட்டு, ஏய் நானென்ன இலக்கியவாதியான்னு கேட்டேன். அதுக்கு அவன் அப்படி இல்லம்மா இது வந்து ஒரு டைரி எழுதற மாதிரி யாரு வேணும்னாலும் எழுதலாம், என்ன டைரிய யாரும் படிக்க மாட்டாங்க. ப்ளாக்க கொஞ்ச பேரு படிப்பாங்கன்னு சொன்னான். சரி எனக்கு நாலு வார்த்தை சேர்ந்தாப்போல பேசவே தெரியாதே நான் என்னத்த எழுதப்போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் உனக்கு தோணுறத எழுதுன்னு சொல்லிட்டுப்போயிட்டான்.

எனக்கு ப்ளாக்குன்னு ஒன்னு இருக்கறதே அப்பத்தான் தெரியும். எனக்கு ஆதி மூல கிருஷ்ணன் ப்ளாக் எப்படியோ படிக்கக் கிடைத்தது. அதில் குருவி பட விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. பிறகு அவர் எழுதி தங்கமணி இடுகைகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிறகு ஒரு பெண் பதிவரின் இடுகை படிக்கக் கிடைத்தது. அதில் அவர் கிள்ளிப்போட்ட சாம்பார் கதையை எழுதியிருந்தார். (அவர் பெயரை மறந்துவிட்டேன் மன்னிக்கவும்)அதைப் படித்தவுடன் நமக்குத்தான் இது போல கதையெல்லாம் நல்லாத் தெரியுமேன்னு நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சு. ஒரு மூணு இடுகைக்கான மேட்டரை டைப் பண்ணி என் மகனிடம் காட்டினேன். நல்லாயிருந்தா நான் ப்ளாக் ஆரம்பிக்கிறேன். இல்லன்னு சொன்னேன்னா ப்ளாக்கே வேணாம். அவனும் படிச்சுட்டு நல்லாயிருக்கு. உனக்கு ப்ளாக் ஆரம்பிக்க எல்லாத் தகுதியும் இருக்குன்னு சர்ட்டிபிகேட் கொடுத்துட்டான். உடனே ஒரு ப்ளாக்கும் ஆரம்பிச்சுக் கொடுத்துட்டான். இதெல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் நடந்தது. என் ப்ளாக் அக்டோபர் 20ம் தேதி துவங்கியுள்ளேன். இன்னும் நாலு நாள் இருக்கு. அட்வான்ஸ் பிறந்த நாள்.

அப்பறம் ஒருஒரு இடுகையையும் போட்டுவிட்டு யாராவது படிப்பார்களா என்று எதிர்பார்ப்பதெல்லாம் உங்கள் அனைவருக்கும் நேர்ந்த கதையாகத்தான் இருக்கும். பிறகு அடுத்தவருக்கு நாம் ஓட்டும் பின்னூட்டமும் போட்டால்தான் நமக்கும் அது கிடைக்கும் என்ற ப்ளாக் உலக அரசியல் எல்லாம் என் மகன்தான் எனக்கு சொல்லித்தந்தான்.

அப்பறம் காட்சியில இருந்து அஞ்சல் தலை பகுதிக்கு எழுதுமாறு கேட்டார்கள். நானும் எழுதி அனுப்பினேன். போடுவார்களோ என்னமோன்னு தயக்கத்தோடேயே அனுப்பினேன். அவர்கள் இரண்டு நாட்களில் போடுவதாக மெயில் அனுப்பியிருந்தார்கள். பிறகு பார்த்தால் அடுத்த நாளே போட்டுவிட்டார்கள். தந்தையர் தினம் என்பதால் என் கடிதம் பொருத்தமாக அமைந்ததால் போட்டுவிட்டார்கள் போலும். பிறகு பெண்ணியம் ப்ளாக்கிலும் என் இடுகைகளை எடுத்துப்போட்டார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நம்மளாலயும் எழுத முடியும்னு இதுக்கு முன்னால நான் நெனச்சதே இல்ல. பெண்ணியத்தில் நிறைய திறமைசாளிகளின் படைப்புகளை போடுகிறார்கள். அதில் என்னுடையதும் வந்தது எனக்கு அளவில்லா சந்தோஷத்தைக் கொடுத்தது. அவர்கள் இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை ஓட்டுப்போட்டு பின்னூட்டம்போட்டு ஊக்குவிக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
This entry was posted on 10/16/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

36 comments:

On October 16, 2010 at 12:26 PM , LK said...

உங்களுக்கும் உங்கள் வலைப்பூவிற்கும் இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி

 
On October 16, 2010 at 12:33 PM , தமிழ் அமுதன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!


ப்ளாக்குக்கும் முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

 
On October 16, 2010 at 12:43 PM , dheva said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயந்தி....!

அட்டகாசமா எப்போதும் சிரித்துக் கொண்டு சந்தோசமாக எல்லா நலமும் பெற்று 100+வருடங்கள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...!

 
On October 16, 2010 at 12:58 PM , கலாநேசன் said...

வாழ்த்துக்கள்.

 
On October 16, 2010 at 1:08 PM , அஹமது இர்ஷாத் said...

உங்க‌ளுக்கும் உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்துக்கும் வாழ்த்துக்க‌ள்..

 
On October 16, 2010 at 1:31 PM , நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உங்க‌ளுக்கும் உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்துக்கும் வாழ்த்துக்க‌ள்

 
On October 16, 2010 at 1:37 PM , எம் அப்துல் காதர் said...

அது சரி பிறந்த நாளை இப்படியெல்லாம் கூட சொல்வீங்களா?? எல்லாரும் ரெண்டு ரெண்டு வயசா மைனஸ் பண்றாங்க. நீங்க ஒரு வயசு கூட்டி சொல்றீங்களே!! எப்படி இருந்தாலும் 105 + ப்ளஸ்.. உறுதி!! (100 சொன்னா, நீங்க சொன்ன சிரிப்பு போலீஸ் வந்துடுவாரு. ஹி.. ஹி..) வாழ்த்துகள் மேடம்! நீங்க நல்லா இருங்க சகோதரி!!

 
On October 16, 2010 at 1:49 PM , பிரசன்னா said...

தங்களின் மகன் மிகவும் நல்லவராக இருப்பார் போல இருக்கிறது.. அவர் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.. ஓங்குக அவர் புகழ்..

 
On October 16, 2010 at 1:53 PM , ganesh said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

 
On October 16, 2010 at 1:59 PM , LK said...

:))

 
On October 16, 2010 at 2:23 PM , dineshkumar said...

வணக்கம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்றதுக்கு முன் என்னையும் வாழ்தணும் ஆமாங்க நானும் புரட்டாசி ஐந்தாவது சனிகிழமை இராகுகாலத்துல சரஸ்வதி பூஜைலதான் பிறந்தேன் இன்னைக்குதான் திரும்பவும் அதே மாதிரி சரஸ்வதிபூஜை வந்திருக்கு பலவருடங்களுக்கு பிறகு என்ன ஒருமாற்றம் ஆங்கில தேதி மட்டும் ஒருநாள் பிந்திப்போயுள்ளது
என்ன வாழ்த்த வாரிங்கலா.........

http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_15.html

 
On October 16, 2010 at 4:20 PM , சௌந்தர் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் வலைபூவிற்கும் வாழ்த்துக்கள்

 
On October 16, 2010 at 5:24 PM , ஹுஸைனம்மா said...

பாத்தா அசப்புல அப்படியே அரசியல்வாதி மாதிரியே இருக்கீங்களே!! அப்படி ஐடியா எதுவும் இருக்கா? ;-))))

 
On October 16, 2010 at 6:02 PM , மாதவராஜ் said...

வாழ்த்துக்கள்.
தங்கள் மகனுக்கு பாராட்டுக்கள்.
தொடருங்கள்....

 
On October 16, 2010 at 7:15 PM , ஜெய்லானி said...

உங்களுக்கும் உங்கள் வலைப்பூவிற்கும் இனியப் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சகோஸ்

 
On October 16, 2010 at 7:51 PM , Chitra said...

படம் - ரொம்ப அருமையாக இருக்குதுங்க...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பதிவுலகில் - ஓராண்டு ..... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
நவராத்திரி வாழ்த்துக்கள்!

தொடர்ந்து அசத்துங்க!

 
On October 16, 2010 at 8:03 PM , வார்த்தை said...

வாழ்த்துக்கள்.

 
On October 16, 2010 at 8:10 PM , மாதேவி said...

பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

வலைப்பூவிற்கும்.

 
On October 16, 2010 at 8:26 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//(எந்த வருஷத்துல இருந்து இப்படி போகுதுன்னு கேட்கறது யாருப்பா? நம்ம சிரிப்பு போலீஸ்தான. அப்புறம் கவனிச்சுக்கறேன்.)//

யாருப்பா அது சிரிக்கிறது., பிச்சுபுடுவேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்க ப்ளோக்குக்குm. உன்ன ப்ளாக் ல தண்ணி ஊத்தி கழுவி சுத்தம் பண்ணிடுங்க..

இனியப் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சகோ

 
On October 16, 2010 at 8:34 PM , விந்தைமனிதன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 
On October 16, 2010 at 10:31 PM , Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் ஜெயந்தி மேடம்.. போட்டோ நல்லாருக்கு.. (வலையுலகம்) எலக்சன்ல நின்னா எங்க ஓட்டுபூராவும் உங்களுக்குதான்.

இன்றுபோல என்றும் வளமோடு வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன். உங்கள் ப்ளாக்க்கும் என் வாழ்த்துகள்.

ஒரே ஒரு சந்தேகம்.. உங்க ப்ளாக் தலைப்பு "பாடினியார்" இதுக்கு என்ன அர்த்தம் என்று சொல்வீர்களா..

நான் நினைக்கிறேன். சங்ககாலத்துல பாடினியார் என்றொரு புலவர் இருந்தாங்க.. அவங்க ஞாபகமா பெயர் வச்சிருக்கீங்களோ.. அவங்களைப் போலவே நீங்களும் இலக்கியத்தில் சிறப்புற்று விளங்கவேண்டும்.

 
On October 16, 2010 at 11:16 PM , மின்மினி RS said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெயந்தியக்கா..

 
On October 17, 2010 at 12:11 AM , Anonymous said...

வாழ்த்துக்கள்.
எல்லாத்தையும் ஒரு சந்தோசமா பகிர்றது என்பது ஒரு சிறப்பான அம்சம். அதுக்கும் ஒரு வாழ்த்துக்கள்.
Sethu

 
On October 17, 2010 at 4:04 AM , ப்ரியமுடன் வசந்த் said...

என்னுடைய வாழ்த்துகளும் மேடம் !

 
On October 17, 2010 at 8:07 AM , ராம்ஜி_யாஹூ said...

wishes

 
On October 17, 2010 at 10:40 AM , நீச்சல்காரன் said...

உங்கள் வலைப்பூவிற்கும் இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 
On October 17, 2010 at 11:16 AM , Kousalya said...

அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

 
On October 18, 2010 at 11:28 AM , jothi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்,..

 
On October 18, 2010 at 12:18 PM , ஜெயந்தி said...

எல்கே
தமிழ் அமுதன்
தேவா
கலாநேசன்
அஹமது இர்ஷாத்
நண்டு @நொரண்டு
எம்.அப்துல் காதர்
பிரசன்னா
கணேஷ்
தினேஷ்குமார்
சவுந்தர்
ஹுஸைனம்மா
மாதவராஜ்
ஜெய்லானி
சித்ரா
வார்த்தை
மாதேவி
ரமேஷ்
விந்தை மனிதன்
ஸ்டார்ஜன்
மின்மினி
சேது
பிரியமுடன் வசந்த்
ராம்ஜி_யாஹு
நீச்சல்காரன்
கெளசல்யா
ஜோதி
என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

 
On October 18, 2010 at 12:22 PM , ஜெயந்தி said...

//ஹுஸைனம்மா said...
பாத்தா அசப்புல அப்படியே அரசியல்வாதி மாதிரியே இருக்கீங்களே!! அப்படி ஐடியா எதுவும் இருக்கா? ;-))))//

அசப்புல பாத்தா அரசியலவாதி மாதிரி இருக்கேனாவா? நான் அரசியல்வாதிதாங்க. நம்ம ப.மு.க. கட்சியில எனக்கு பதிவியெல்லாம் குடுத்துருக்காங்க. ஏம்பா சவுந்தர் பதிவி இருக்கா? இல்ல பறிச்சிட்டீங்களா?

 
On October 18, 2010 at 12:23 PM , ஜெயந்தி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//(எந்த வருஷத்துல இருந்து இப்படி போகுதுன்னு கேட்கறது யாருப்பா? நம்ம சிரிப்பு போலீஸ்தான. அப்புறம் கவனிச்சுக்கறேன்.)//

யாருப்பா அது சிரிக்கிறது., பிச்சுபுடுவேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்க ப்ளோக்குக்குm. உன்ன ப்ளாக் ல தண்ணி ஊத்தி கழுவி சுத்தம் பண்ணிடுங்க..//
எதுக்கு ஆயுத பூஜை கொண்டாடவா?

 
On October 18, 2010 at 12:25 PM , ஜெயந்தி said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நான் நினைக்கிறேன். சங்ககாலத்துல பாடினியார் என்றொரு புலவர் இருந்தாங்க.. அவங்க ஞாபகமா பெயர் வச்சிருக்கீங்களோ.. அவங்களைப் போலவே நீங்களும் இலக்கியத்தில் சிறப்புற்று விளங்கவேண்டும்.
//
நீங்க நெனக்கிற மாதிரி சங்கப் புலவர் காக்கைப்பாடினியார் பெயரில் இருந்து பாதியை உருகிக்கிட்டேன்.

 
On October 18, 2010 at 1:30 PM , ஹுஸைனம்மா said...

//ஏம்பா சவுந்தர் பதிவி இருக்கா? இல்ல பறிச்சிட்டீங்களா? //

அதுசரி, பதவில இருக்கோமா இல்லையான்னு அன்னன்னிக்குப் பேப்பர் பாத்து தெரிஞ்சுக்கிற நிலமையில் இருக்க அரசியல்வாதியா நீங்க?? சரி, ஏதோ ஒண்ணு, பதவி இருந்தாச் செரிதான்!! ;-)))))

 
On October 18, 2010 at 2:00 PM , ஜெயந்தி said...

//ஹுஸைனம்மா said...
//ஏம்பா சவுந்தர் பதிவி இருக்கா? இல்ல பறிச்சிட்டீங்களா? //

அதுசரி, பதவில இருக்கோமா இல்லையான்னு அன்னன்னிக்குப் பேப்பர் பாத்து தெரிஞ்சுக்கிற நிலமையில் இருக்க அரசியல்வாதியா நீங்க?? சரி, ஏதோ ஒண்ணு, பதவி இருந்தாச் செரிதான்!! ;-)))))

//
இப்பத்தான அரசியல்ல நொழைஞ்சிருக்கம். அதுனாலதான்.

 
On October 18, 2010 at 10:53 PM , அமைதிச்சாரல் said...

ஆஹா!! என்னோட வாழ்த்துக்களை மேடம்கிட்ட கொடுக்கச்சொல்லி அனுப்பினேனே.. வந்து சேரலியா???

 
On October 19, 2010 at 12:17 PM , ஜெயந்தி said...

வாழ்த்துக்கு நன்றி அமைதிச்சாரல்!
ம்ம் வந்து சேர்ந்தாச்சு.