ஆண்கள் அழலாமா?
4/02/2010 | Author: ஜெயந்தி
எங்க அம்மா இருக்காங்களே அவங்களால வேலை செய்யாம இருக்கவே முடியாது. வேலை செய்வது ஒன்றே அவர்கள் வாழ்க்கை லட்சியம் என்பதுபோல் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வீட்டில் நாங்கள் எல்லோரும் இருந்தாலும் காலிங்பெல் அடித்தால் அவர்கள்தான் ஓடுவார்கள் கதவைத் திறக்க. வயது 65 ஆகிறது.

ஒரு நாள் என்னாச்சு வெளியே மழை பெய்யத் தொடங்கிய சத்தம் கேட்டவுடன் காயப்போட்ட துணிகளை எடுக்க அவசரமாக கட்டிலில் இருந்து இறங்கும்போது கால் இடறி அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள். அவ்வளவுதான். எந்திரிக்கவே முடியவில்லை. எனக்கு அலுவலகத்திற்கு போன் வந்தது. அப்போதே முடிவு செய்துவிட்டேன். அது ஃப்ராக்சராகத்தான் இருக்கும். வீட்டிற்குச் சென்று அம்மாவைத் தூக்கி ஆட்டோவில் திணித்துக்கொண்டு ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே டாக்டரிடம் அம்மா வலிக்கிறதாகச் சொன்ன இடத்தில் எக்ஸ்-ரே எடுத்தார்கள். அதில் ஒன்றும் அவர்களுக்கு தெரியவில்லை. திரும்பவும் எங்க வலிக்குதுன்னு கேட்டாங்க. அம்மாவும் கால் உடம்போடு சேரும் (முன் பக்கம்) இடத்தைக் காட்டினார்கள். திரும்பவும் ஒரு எக்ஸ்-ரே அப்பவும் அவங்களுக்கு ஒன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எழுதிக்கொடுத்தார்கள். அதை எடுக்கச் சென்ற இடத்தில் மெசின் ரிப்பேர் ஆகியிருந்தது. நாங்கள் ஒரு முக்கால் மணி நேரம் காத்திருந்து பிறகு ஸ்கேன் எடுத்துச் சென்றோம். அந்த ஸ்கேனில் பார்த்தால் எங்கம்மா சொன்ன இடத்திற்கும் எலும்பு உடைந்திருந்த இடத்திற்கும் சம்பந்தமே இல்லை. அம்மா முன் பக்கத்தைக் காட்டினார்கள். ஆனால் பின் பக்கம் முதுகெலும்பு முடியும் இடத்திற்கு சற்று கீழே தள்ளி இருந்தது. நல்ல வேளை அது ஃப்ராக்சர் இல்லை. கிராக்தானாம். 6 வாரம் பெட் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சிதான் என் மனதிலேயே நிற்கிறது. ஸ்கேன் மிசின் ரிப்பேர் என்று முக்கால் மணி நேரம் நிற்க வைத்தார்கள் அல்லவா? காத்திருந்தபோது ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. யாரதுன்னு பார்த்தபோது நாங்கள் நின்ற இடத்திற்கு எதிர்புறத்தில் எங்களைப்போலவே எம்ஆர்ஐ ஸ்கேனிற்காக காத்திருந்த ஒரு ஸ்ரெட்சரின் அருகிலிருந்துதான் அந்த அழுகைச் சத்தம். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண். வாய்விட்ட அழுகை. ரொம்ப சத்தமாக இல்லை. பத்தடியில் இருந்த எனக்கு தெளிவாகக் கேட்கும் அளவிற்கான அழுகை. விம்மி விம்மி அழுகிறார். அந்த அழுகைச் சத்தம் என் மனதை என்னவோ செய்தது. ஸ்டெச்சரில் இருப்பவரைப் பார்த்தேன். சற்று வயதான பெரியவர். அழுபவரின் தந்தையாக இருக்கலாம். ஸ்ரெச்சரிலேயே பலவித கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. மார்பருகே லேப்டாப் மாதிரி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. சற்று மேலே பலூன் மாதிரி நாம் மூச்சுவிட்டால் ஏறி இறங்குவதைப் போல் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அவர் முகத்தைப்பார்த்தால் அவருக்கு நினைவின்றிக் கிடந்தார். அதற்கு மேல் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. மகன் கொஞ்சம் நேரம்கூட விடாமல் அழுதுகொண்டே இருந்தார்.

ஆண்கள் அழுவதைப் பார்த்ததில்லை ஆதலால் அவர் அழுதது எனக்கு வித்தியாசமாக இருந்தது. நம் ஊரில் ஆண் அழுதால் எத்தனை விதமான கிண்டல்கள் 'ஏண்டா பொம்பள மாதிரி அழற', அந்தக் கேள்வியிலேயே அசிங்கப்பட்டு அடுத்தமுறை அழுகை வந்தால் அவன் அதை அடக்கிக்கொள்ளப் பழகிக்கொள்கிறான். தன் துக்கத்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்கிறான். அப்படி அடக்கி வைப்பதால் ஹார்ட் அட்டாக், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது ஒரு உணர்ச்சி அத ஏன் அடக்கி வைக்க வேண்டும். சின்னப்பிள்ளைத்தனமாக எதற்கெடுத்தாலும் அழுகச் சொல்லவில்லை. தாங்க முடியாத துயர நேரங்களில் வாய்விட்ட அழுகைதான் துயரத்தின் வடிகாலாக இருக்க முடியும். அழுகையை அடக்குவதில் என்ன கவுரவம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஸ்கேன் மிசின் சரியானவுடன் அழுது கொண்டிருந்த அந்த நபரின் தந்தைக்கு முதலில் ஸ்கேன் எடுத்து அனுப்பினார்கள். அங்கிருந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரமும் விடாமல் அழுதுகொண்டிருந்தார். அவ்வளவு அழுகை அழுவதென்றால் அந்தத் தந்தை எப்பேர்ப்பட்ட தந்தையாக இருக்கு வேண்டும். அல்லது அந்த மகன் எப்பேர்ப்பட்ட மகனாக இருக்க வேண்டும். அல்லது இருவருமா?

-----------------------
சங்கம்
சங்கம் நல்லதுதான் செய்யும்னு சங்கத்த ஆதரிச்சு சேர்ந்துட்டு திரும்பிப் பார்த்தா நெலமையே தலைகீழா மாறியிருக்கு சங்கம் தேவைன்னு கை தூக்கினவங்க எல்லாம் கையை கீழ போட்டுட்டாங்க. அவசரப்பட்டுட்டனோ?

வேலை அதிகமாக இருப்பதால் ஒரு பத்து பதினைஞ்சு நாளைக்கு இந்தப் பக்கம் வர மாட்டேன். நிம்மதியா இருங்க.
--------------------------------------

|
This entry was posted on 4/02/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On April 2, 2010 at 12:12 PM , sathishsangkavi.blogspot.com said...

//அது ஒரு உணர்ச்சி அத ஏன் அடக்கி வைக்க வேண்டும். //

உண்மைதாங்க....

நான் நிறைய தடவை அழுதுள்ளேன்....

ஆனால் ஒவ்வொரு முறை அழுகும் போதும் மனதில் உள்ள பாரம் குறைகிறது...

 
On April 2, 2010 at 5:34 PM , ஜெயந்தி said...

நன்றி சங்கவி!
நீங்க சொல்றது உண்மைதான்.

 
On April 2, 2010 at 7:32 PM , All India Mens' welfare Association said...

//தன் துக்கத்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்கிறான். அப்படி அடக்கி வைப்பதால் ஹார்ட் அட்டாக், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்//

Very well said.

Men are being perpetually subjected to emotional castration right from childhood. You have rightly highlighted the high incidence of heart attacks amongst men. In fact heat attack is almost entirely male-specific!

Very balanced writing indeed.

Thanks and regards

All India Mens' Welfare Association

 
On April 4, 2010 at 6:49 AM , Anonymous said...

enaku thirinthu nan aluthatu ellainga

annal friends ethavathu konkalangina thangamaten..pola polanu kotidum konner..apprum adutha nimisam siriciduven athu vera visiam...

alarathu angal pengal appdi ellam ondrum ellai
unargugal ulla oru oru jevanum alum.

oru nala padivu..jeyantima.
neriya eluthunga..nan comments potta yen podrathu ellai..

sari ethavathu net work problema erukum.

Nan padivar ellinga
ungal vasaagarlailil oru vasagan matumey.

nandri
valga valamudan
v.v.s
Complan surya

 
On April 4, 2010 at 6:50 AM , Anonymous said...

சங்கம்
சங்கம் நல்லதுதான் செய்யும்னு சங்கத்த ஆதரிச்சு சேர்ந்துட்டு திரும்பிப் பார்த்தா நெலமையே தலைகீழா மாறியிருக்கு சங்கம் தேவைன்னு கை தூக்கினவங்க எல்லாம் கையை கீழ போட்டுட்டாங்க. அவசரப்பட்டுட்டனோ?

வேலை அதிகமாக இருப்பதால் ஒரு பத்து பதினைஞ்சு நாளைக்கு இந்தப் பக்கம் வர மாட்டேன். நிம்மதியா இருங்க."
yenga eppdi erueknga..athalem mudiathu jeyantima..samatha oru kutikuti padivachum podunga..."

 
On April 4, 2010 at 11:49 AM , மங்குனி அமைச்சர் said...

ஏங்க அழுகுரதுல ஆம்பளை என்ன ? பொம்பளை என்ன ?
அது இயற்கையான ஒரு உணர்வு

 
On April 14, 2010 at 9:31 AM , www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
On April 20, 2010 at 12:55 PM , ஜெயந்தி said...

நன்றி All India Mens' welfare Association!

நன்றி காம்ளான் சூர்யா!
ஆகட்டும் மகனே.


முதல் வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சரே!

வருகைக்கு நன்றி bogy!