சென்னையில் ஒரு மழை நாள்
6/25/2010 | Author: ஜெயந்தி
நம்ம அமைதிச்சாரல் மும்பை மழையப் பத்தி எழுதுனவொடனே எனக்கு சென்னை மழையில நான் மாட்டிக்கிட்ட நியாபகம் வந்துவிட்டது.

2002 ஆ 03ன்னு ஞாபகம் இல்லை. அப்போ சைதாப்பேட்டையில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். ஒரு நாள் சாயங்காலம் சரியாக 6 மணிக்கு மழை பிடிச்சுக்கிருச்சு. மழையின்னா மழை பேய் மழைன்னு சொல்வாங்களே அந்த மாதிரி கொட்டுது. சரியா 8 மணி வரைக்கும் ஒரே மாதிரி மழை கொட்டிக்கொண்டிருந்தது. 8 மணி ஆனவுடனே மழை சுத்தமாக விட்டுவிட்டது. அதன் பிறகு ஒரு சின்னத் தூறல்கூட இல்லை. நானும் என்னுடன் வேலை பார்க்கும் லட்சுமியும் ஆபீசில் இருந்து கிளம்பினோம். கிளம்பும்போதே வீட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டேன் டிராபிக் ஜாம் ஆகி லேட்டானால் கவலைப்படவேண்டாம் லட்சுமி என்னுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டேன். இல்லன்னா எங்கம்மாவுக்கு பயத்துல நாலு முறை வயத்தக்கலக்கி போயிரும். பஸ் ஸ்டேண்டுக்கு வந்தோம். சைதாப்பேட்டை கட் சர்வீஸ் ஒன்றில் ஏறி அமர்ந்துவிட்டோம். அங்கேயே டிராபிக் ஜாம் தொடங்கிவிட்டது.



டிராபிக் ஜாம்னா உங்க வீட்டு ஜாம் எங்க வீட்டு ஜாம் இல்லைங்க. சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி வந்து சேர 3 மணி நேரம் ஆனது. என்ன விஷயம்னா மழை கொட்டுன வேகத்துக்கு அத்தனை தண்ணீரும் வெளியேற முடியாதில்லையா? அதுனால எல்லா இடத்துலயும் தண்ணி அதிகளவுல தேங்கி நிக்குது. (கம்மியா பேஞ்சா மட்டும் தேங்கி திக்காதான்னெல்லாம் கேக்கக்கூடாது) அதுனால டிராபிக் ஜாம் ஆகியிருக்கு. நல்ல வேளை லட்சுமியும் கூட இருக்காங்க. ஒரு துணையா போச்சுன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. எனக்கு அடுத்த ஸ்டாப்பிங் அவங்க வீடு.

எங்க பஸ்சுல கூட்டம் கம்மி அதுனால எல்லாரும் உட்கார்ந்திருந்தோம். பக்கத்தில் வந்த பஸ்களில் ஸ்டேண்டிங்கில் வந்தார்கள். அவர்கள் எவ்வளவு பாவம். எவ்வளவு நேரம் நிற்க முடியும். உட்கார்ந்திருந்தாலும் எங்களுக்கு ஒரு கஷ்ட வந்துச்சு பாருங்க. பசின்னா பசி வயத்த கிள்ளுது. என்னா பண்ண முடியும். ஒரு வாய் தண்ணி குடிக்கலாம்னா எங்க போறது? அதுலயும் ஒரு சந்தோஷம் நல்ல வேளை பாத்ரூம் வரல. அத்தனை பேருலயும் வயத்தக்கலக்கிட்டு வந்தவங்க, யூரின் டேங்க் புல்லானவுங்க பாடெல்லாம் நினைச்சுப்பார்க்கவே முடியல.

அப்போ இந்தளவுக்கு செல்போன் எல்லாம் எல்லோரும் வைத்திருக்க மாட்டார்கள். இப்போதான் பிறக்கும் குழந்தை கூட கையில் செல்போனுடன் பிறக்கிறது. நிறையப்பேர் தகவல் சொல்ல முடியாமல் தவித்திருக்கலாம்.

ஒருவழியா நாங்க வீட்டுக்கு வந்து சேந்தப்ப மணி நள்ளிரவு 1 மணி. அப்பக்கூட எங்க ஹவுஸ் ஓனர் வரல. அவங்க பாரீஸ்ல இருந்து வரணும். அவங்க கார் வேற வழியில ரிப்பேர் ஆகி அவங்க ஒரு வழியாகி 2 மணிக்கு மேல வந்தாங்க.

அடுத்த நாள் பேப்பர்ல பாத்தா சென்னை முழுவதும் இதே மாதிரிதான் நிலைமையாம். அன்று சென்னையில் எல்லோருமே இரவு 1 மணி 2 மணிக்குத்தான் வீட்டுக்குப் போயிருக்காங்க. தண்டவாளத்துல தண்ணி நின்னுச்சுன்னு டிரெயினும் ஓடலையாம்.
This entry was posted on 6/25/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

24 comments:

On June 25, 2010 at 2:58 PM , தமிழ் அமுதன் said...

2002 லயே அப்படின்னா இப்போ இன்னும் நிலமை மோசம்..! வரப்போற மழை காலத்துல பெரிய மழை வந்தா சென்னை நகருக்குள்ள போட் ஓடுதா இல்லயா பாருங்க ..!

 
On June 25, 2010 at 3:07 PM , ஜெயந்தி said...

நன்றி தமிழ் அமுதன்!
அதுதான் வருஷா வருஷம் ஓடுதே.

 
On June 25, 2010 at 3:07 PM , க.பாலாசி said...

//அன்று சென்னையில் எல்லோருமே இரவு 1 மணி 2 மணிக்குத்தான் வீட்டுக்குப் போயிருக்காங்க//

நல்லவேள நான்கூட உங்களுக்கு மட்டும்தானோன்னு நினைச்சேன்..

ஆமா இன்றைக்கும் நல்ல மழை பெய்தால் சென்னையின் நிலை இதுதானே...

 
On June 25, 2010 at 3:16 PM , ஜெயந்தி said...

நன்றி பாலாசி!
இப்போ கொஞ்சம் பரவாயில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவிடுகிறார்கள்.

 
On June 25, 2010 at 3:16 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்போ இந்தளவுக்கு செல்போன் எல்லாம் எல்லோரும் வைத்திருக்க மாட்டார்கள். இப்போதான் பிறக்கும் குழந்தை கூட கையில் செல்போனுடன் பிறக்கிறது. நிறையப்பேர் தகவல் சொல்ல முடியாமல் தவித்திருக்கலாம்.
//

amaanga. celphone thollai thaankana. antha mazhailathaan naan vankina 9000Rs mobile pochchu

 
On June 25, 2010 at 3:21 PM , ஜெயந்தி said...

நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!
நீங்களும் அந்த மழையில மாட்டுனீங்களா? மொபைல் என்னாச்சு?

 
On June 25, 2010 at 3:32 PM , சந்தனமுல்லை said...

ஆஹா..இந்த போஸ்ட் படிக்கும்போது என் ஜன்னலுக்கு வெளிலேயும் மழை...!

/நல்ல வேளை லட்சுமியும் கூட இருக்காங்க. ஒரு துணையா போச்சுன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு./

அவ்வ்வ்வ்! :-)

 
On June 25, 2010 at 3:33 PM , எல் கே said...

this is 2003 i remeber that rain.. its worst

 
On June 25, 2010 at 3:35 PM , ஜெயந்தி said...

நன்றி சந்தனமுல்லை!
நானும் போஸ்ட் போடுறதுக்கு நடுவுல போயி காயப்போட்டுருந்த துணியெல்லாம் எடுத்துட்டுவந்து போஸ்ட் போட்டேன்.

 
On June 25, 2010 at 3:36 PM , ஜெயந்தி said...

நன்றி எல்கே!
நீங்களும் மாட்டுனீங்களா?

 
On June 25, 2010 at 3:38 PM , சாந்தி மாரியப்பன் said...

எங்கூருக்கு வந்த மழை அடுத்தாப்ல உங்க சென்னைக்கும் வந்துதே.. போட்டெல்லாம் ஓடுனதை அப்ப டிவில பாத்தேன்.வீட்டுக்கு வந்து சேர்றவரைக்கும் உசிரை கையில பிடிச்சுக்கிட்டு இருந்திருப்பீங்க இல்லியா. எங்கூரு மழையை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி.

 
On June 25, 2010 at 3:38 PM , சௌந்தர் said...

மழை கொட்டுன வேகத்துக்கு அத்தனை தண்ணீரும் வெளியேற முடியாதில்லையா//
அதுதான் மழை நீர் சேமிப்பு திட்டம்

 
On June 25, 2010 at 3:42 PM , Unknown said...

இப்படிதான் ஒரு முறை மழை பெய்தபோது( வருடம் நினைவு இல்லை ) சென்னை முகப்பேரில் வசித்தேன்.. வீட்டிற்குள் தண்ணீர் வந்து கைக்குழந்தையுடன் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானோம்..

 
On June 25, 2010 at 3:56 PM , எல் கே said...

/நீங்களும் மாட்டுனீங்களா?//

aamam..... but enga officela irunthu drop vasathi irunduchi athanaala oralavu samaalichen

 
On June 25, 2010 at 4:00 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீங்களும் அந்த மழையில மாட்டுனீங்களா? மொபைல் என்னாச்சு?//
அப்பா சம்பளம் 3000Rs தான். கஷ்டப்பட்டு கலர் மொபைல் கேமரா வோட வாங்கினேன். ரூமுக்குள்ள வெள்ளம் வந்து செல் ஊறிப்போய் நாஸ்தி ஆயிடுச்சு. தண்ணில நனைஞ்சா வாரண்டி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அவ்ளோதான். back to black & White mobile!!!

 
On June 25, 2010 at 4:25 PM , ஜெயந்தி said...

நன்றி செளந்தர்!
ம்ம்ம்

நன்றி அமைதிச்சாரல்!
ஆமா அந்த மழையில நிறைய வீடுகள் தண்ணியில மூழ்குச்சு.

நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
எங்களுக்கு வீட்டுக்குள்ள தண்ணி வந்த அனுபவம் உண்டு. எதிர்ல இருந்த அறிவியல் இயக்கம் ஆபீசுல அகதி வாழ்க்கை வாழ்ந்தோம்.

 
On June 25, 2010 at 5:03 PM , VELU.G said...

நல்ல அனுபவங்க

 
On June 25, 2010 at 5:54 PM , அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்....

மழையில மாட்டிகிட்டதுக்கு அல்ல,

பட்ட பாட்டை பகிர்ந்து கொண்டமைக்கு!

 
On June 25, 2010 at 7:32 PM , ஜெய்லானி said...

92க்கு பிறகு இது வரை எந்த மழைக்கும் ஊரில் (இந்தியாவில் ) இருந்தது இல்லை . நீங்க என்னடான்னா கஷ்டம்ன்னு சொல்றீங்க.

 
On June 25, 2010 at 9:01 PM , தமிழ் உதயம் said...

எல்லா ஊருலயும் மழை பெய்தா இந்த நிலைமை தான்.

 
On June 25, 2010 at 11:24 PM , Chitra said...

எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கு...... அம்மாடி! நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தாச்சு... Praise the Lord!

 
On June 26, 2010 at 10:51 AM , Jackiesekar said...

ரொம்ப நிறைய மழை பெஞ்சுதுன்னா.. கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டுல போகவே முடியாது...

சென்னையில எல்லா இடத்திலியும் இதுதான் நிலமை..

 
On June 29, 2010 at 12:15 PM , ஜெயந்தி said...

நன்றி வேல் ஜி!

நன்றி சி.கருணாகரசு!

நன்றி ஜெய்லானி!
வீட்டுக்குள்ள வெள்ளம் வர்ரப்ப வந்து பாருங்க.

 
On June 29, 2010 at 12:16 PM , ஜெயந்தி said...

நன்றி தமிழ் உதயம்!

நன்றி சித்ரா!

முதல் வருகைக்கு நன்றி ஜாக்கி சேகர்!