நீயா நானா
6/13/2011 | Author: ஜெயந்தி
"டேய் ஒம்பொண்டாட்டி பண்றது கொஞ்சங்கூட சரியில்ல சொல்லீட்டேன்."
"என்னம்மா விஷயம்"
"சாயங்காலம் சீக்கிரம் வா, கிருஷ்ணஜெயந்திக்கு எல்லா தயார் பண்ணி வச்சிர்றேன். நீ வந்தவுடனே சாமி கும்புடலாம்னு சொல்றேன் அதுக்கு அவ சொல்றா ஆபீசுல முக்கியமான வேல இருக்கு. அது சீக்கிரம் முடிஞ்சிருச்சுன்னா சீக்கிரம் வர்றேன்னு சொல்றாடா"
ரூமுக்குள் வந்த கணவன் "என்னம்மா சாயங்காலம் சீக்கிரம் வர்றதுதான"  என்றான்
"ஏங்க உங்க அம்மா சொல்றாங்க, பிரக்னென்டா இருக்கறவங்க கிருஷ்ணஜெயந்தி கும்புட்டா ஆம்பளப்புள்ள பொறக்குமா, இந்த வார்த்தைக்காகத்தான் நான் அப்டிச்சொன்னேன். ஏன் பொம்பளப்புள்ள பொறந்தா தூக்கி எறிஞ்சுடுவீங்களா?"

"ஏண்டா குழந்தைக்கு கழுதப்பால் குடுக்கணும்னு சொன்னா ஒம்பொண்டாட்டி கேக்க மாட்டேங்குறாடா."
"ஏங்க டாக்டர்கிட்ட கேட்டேன். வேற எந்த உயிரினமாவது வேற ஒரு உயிரினத்தோட பாலக்குடுக்குதான்னு என்னையே திருப்பிக்கேக்குறாரு. தாய்பால் மட்டும்தான் குடுக்கணுமாம். அதுனாலதான் வேண்டாம்னு சொன்னேன்."
"ஏண்டா கொழந்தைக்கு பால் குடுக்குறாளே தயிர் ஊத்தி திங்காத கொழந்தைக்கு சளி பிடிக்கும்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாடா"
"டாக்டர் எல்லாமே சாப்புடலாம்னு சொல்லியிருக்காரு. நான் சாப்புறது அப்டியே கொழந்தைக்கு போகாது. குழந்தைக்கு ஜீரணமாகுறமாதிரி பால்தான் போகும்".
"ஏண்டா வாழப்பழம் மாம்பழமெல்லாம் சாப்புட்டா கொழந்தைக்கு சேராது"
"ஏங்க எனக்கு பழம் சாப்புட்டாத்தான் வயிறு பிரச்சன இல்லாம இருக்கும். என்னால பழம் சாப்புடாம இருக்க முடியாது."
"ஏண்டா கொழந்தைக்கு போனிசன் ஊத்தணும். வசம்பு ஊத்தணும். அப்பத்தான் பிள்ள நல்லா வளரும்"
"ஏங்க எந்த டாக்டராவது கிரைப் வாட்டர பிரிஸ்கிரைப் பண்றாங்களா? அப்புறம் இந்த வசம்பப்பத்தி எனக்கு தெரியல. ஆனா அதை கருக்கி கருப்பா குடுக்குறாங்க. கருப்பா இருக்கறது கார்பன்தான, எனக்கு அதக் குடுக்க பயமா இருக்கு அதுனால குடுக்கல"
"ஏண்டா ஐஞ்சாம் மாதம் இட்லி, சாதம், சப்பாத்தியெல்லாம் குடுக்கலாம்னு எங்க அக்கா சொல்றாங்க"
"இங்க பாருங்க ஆறு மாசம் வரைக்கும் வெறும் தாய்ப்பால்தான் குடுக்கணும்னு டாக்டர் சொல்றாரு. அதுக்கு அப்பறம்தான் சாலிட் புட் குடுக்கணுமாம். ஏங்க கொழந்தைக்கு சப்பாத்தியெலலாம் குடுத்தா எப்டி ஜீரணமாகும்"
"ஏண்டா அதுக்குத்தான் போனிசன், வசம்பு எல்லாம் குடுக்கணும்"
"இங்க பாருங்க குழந்த அதுவே ஜீரணிக்கணும். மருந்து குடுத்து ஜீரணிக்க வைக்கக்கூடாது. அது நல்லதில்ல"
கணவன் மெல்ல "ஏ
ண்டா செல்லம் நீதான் அம்மாவ கொஞ்சம் அஜ்ஜஸ் பண்ணி போயிறேன்"
"நான் அஜ்ஜஸ் பண்ணத் தொடங்குனா உங்க அம்மா மாதிரி இன்னொரு அம்மாவா இருப்பேன். என்னோட படிப்பு, எனக்கான அறிவு எல்லாத்தையும் தூக்கி குப்பையிலதான் போடணும்"

கணவன் மனதிற்குள் 'இப்டி புட்பால் மாதிரி மிதிபடுறேனே. அப்பவே ஆதிமூல கிருஷ்ணன்னு ஒரு நல்ல மனுஷன் திருமணம் ஆகாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னு எச்சரிச்சாரு. கேட்டனா...'
This entry was posted on 6/13/2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On June 14, 2011 at 7:23 AM , எல் கே said...

hmm hmm

 
On June 14, 2011 at 7:35 AM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present madam. welcome back

 
On June 14, 2011 at 1:20 PM , அருண் பிரசாத் said...

ரைட்டு....

பாவம்ங்க கணவன்மார்கள்

 
On June 16, 2011 at 12:50 PM , ஹுஸைனம்மா said...

மற்ற விஷயங்களில் அம்மா-மனைவியைச் சமாளிப்பது தனிக்கலைதான்!! ஆனா, குழந்தை சம்பந்தப்பட்டதில், அம்மாவுக்கு சரியானதை எடுத்துச் சொல்லிப் புரிய வைச்சா ஒத்துக்க மாட்டாங்களா என்ன? அதே போல, தாய்ப்பால் கொடுக்கும் தாய் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகள் அவசியம்தான். (புளித்த தயிர் போன்றவை...)