1. காலையிலும் மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போடப்போகும்போது எங்கிருந்தோ கூட்டமாக கிளம்பி வந்து நம்மை அட்டாக் பண்ணுமே கொசுக்கள், கோலம் போடுவதற்குள் பாடாய்ப்படுத்திவிடும். அதனுடன் டான்ஸ் ஆடிக்கொண்டுதான் கோலம் போடமுடியுமே அப்போது.
2. அரிவாள்மனையில் கறி நறுக்கும்போதோ அல்லது மீன் கழுவும்போதோ மூக்கு நமநமக்கும், காதுக்குள் ஏதோ ஊர்வதுபோல் இருக்கும், எங்காவது உடனே சொரிய வேண்டும்போல் அரிக்குமே அப்போது.
3. அடுப்பில் பால் பொங்க தொடங்கும் நேரமாக இருக்கும் அல்லது எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்கத் துவங்கும் நேரமாக இருக்கும் அப்போது லேண்ட் லைன் அடிக்கும். அடுப்பில் உள்ளதை என்ன செய்வது என்று புரியாமல் தவித்து ஏதோ ஒன்றை செய்துவிட்டு அவசரமாக போனை எடுத்தால் பிஎஸ்என்எல்-லின் ரெக்கார்டட் வாய்சாக இருக்கும் அல்லது ராங் காலாக இருக்குமே அப்போது.
4. பஸ்சுக்காக காத்திருக்கும்போது நாம் எதிர் பார்க்கும் பஸ்சைத் தவிர அனைத்து ரூட் வண்டிகளும் நிறைய போகும். அடுத்த முறை வேறு ரூட் பஸ்சிற்காக காத்திருக்கும்போது நாம் முதல் நாள் காத்திருந்து வராமல் தவித்த வண்டியாக போகும் இப்போதும் நாம் எதிர்பார்க்கும் பஸ்சே வராதே அப்போது.
5. ஒருவழியாக பஸ்சிற்குள் ஏறி உட்கார இடம் இருக்காது. நின்றுகொண்டே அரை மணி நேரம் செல்லுவோம். அப்போது வரும் ஸ்டாப்பிங்கில் ஏறும் பெண் நின்ற இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்குவார்கள். நாம் அப்படியே நின்றுகொண்டிருப்போமே அப்போது.
6. காலையில் அலுவலம் செல்ல பஸ்சை பிடிப்பதிலேயே லேட்டாகியிருக்கும் (அப்போதே மேனேஜரின் முகம் வந்துபோகும்) அதுபோதாதென்று வரும் சிக்னலில் எல்லாம் பஸ் நிற்குமே அப்போது.
7. வெயிலில் வெளியே அழைத்துவிட்டு வீட்டுக்கு வந்து பேனை போட்டுவிட்டு உட்காரும்போது கரெண்ட் போகுமே அப்போது. (நல்ல தூக்க நேரத்தில் கரெண்ட் போகும்போதும்)
8. வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கும்போது தண்ணீர் மோட்டார் ரிப்பேராகிவிடுமே அப்போது.
9. மழை நீரில் கால் பாதம் நனையாமல் பார்த்து பார்த்து மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கும்போது வேகமாக வரும் வாகனம் நம் மீது மழை நீரை வாரி அடித்துச் செல்லுமே அப்போது.
10. பத்தாவதாக எதை போடுவது என்று யோசிக்கும் வேளையில் எதுவுமே தோன்றாமல் இருக்குமே அப்போது.
(யாருங்க அது குத்து சீசன் முடிஞ்சுபோச்சுன்னு சொல்றது. பழங்கள் எல்லாம் சீசன் முடிஞ்சு போனால் அடுத்த வருடம் சீசன் வருமே அதுபோல இது அடுத்த சீசன்)
14 comments:
:-)) funny! enjoyed reading though!
செம குத்து போங்க...
நல்லாயிருக்குங்க.
படத்தில் யாராவது சம்பந்தமே இல்லாமல் பஞ்சு வசனம் பேசும் போது..;)
பஸ் மேட்டரு எல்லாம் சூப்பரு....
பாத்து bsnl காரனை அடித்து விடாதிர்கள் இங்க எங்க வீட்டில் நெட் வரது
தலைப்பை ஆர்வமாக படிக்குமாறு போட்டுவிட்டு...அதில் எதுவுமே இல்லாமல் எழுதிய பதிவை படிக்கும் போது...)))))
சும்மா நானும் முயற்சி செய்து பார்த்தேன்..நல்லா இருக்குங்க...
அரிவாள்மனையில் கறி நறுக்கும்போதோ அல்லது மீன் கழுவும்போதோ மூக்கு நமநமக்கும், காதுக்குள் ஏதோ ஊர்வதுபோல் இருக்கும், எங்காவது உடனே சொரிய வேண்டும்போல் அரிக்குமே அப்போது.
...... ரொம்ப கரெக்ட்!
பலசமயம் எனக்கும் இப்படி தோன்றியதுண்டு.
நல்ல அனுபவ பதிவு.
நல்ல சிந்தனைதான் ஜெயந்தி.
ரைட்டு;)
பஸ் குத்து காமன் போல எல்லாருக்கும்..
என்னா குத்து குத்துறீங்க போங்க ...!!
//அவசரமாக போனை எடுத்தால் பிஎஸ்என்எல்-லின் ரெக்கார்டட் வாய்சாக இருக்கும்//
ஊர்ல ஏர்டெல்லோட இந்தக் கொடுமையை அனுபவிச்சு, ஃபோனையே தூக்கிக் கடாசிடலாமான்னு வந்துது!!
நல்லா அனுபவிச்சு(ச்சதை) எழுதிருக்கீங்க!! ரசிச்சேன்!!
உங்க பதிவுகளை இப்பத்தான் படிக்கிறேன். மிக அழகு. எளிமையான இயல்பான நடை. எனக்குக் கூட இப்படி நடந்திருக்கே என்று எண்ணத்தோன்றும் யதார்த்தம். அருமை. நன்றி