பெண் எழுத்தாளர். மிகச் சிறந்த எழுத்தாளர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்றவர்களையெல்லாம் விட சிறந்தவரா என்று கேட்பீர்களேயானால் எனது பதில் ஆம். அவரது எழுத்தை படித்தவர்கள் இதை உணர்வார்கள். படிக்காதவர்கள் படித்தீர்களேயானால் உணர்வீர்கள்.
இப்போவெல்லாம் எழுத்தாளர்கள் பிரபலமாவதற்கு குழாயடிச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அவர்களது வாசகர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து அதே சண்டையை தொடர்கிறார்கள்.
ஆனால் சூடாமணி, இவரது கதையைத் தவிர வேறெந்த விவரமும் இவரைப்பற்றி பத்திரிகைகளில் வந்ததில்லை. இவரது போட்டோக்கூட எந்தப் பத்திரிகையிலும் வந்ததில்லை. அவருக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை போலும். அவரது எழுத்துக்கள் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்தார் போலும்.
அவர் மறைந்துவிட்டார் என்று எம்.ஏ.சுசீலா அவர்களின் வலைப்பூ மூலமாகவே அறிந்தேன். மற்றபடி பேப்பர், பத்திரிகைகள் என்று நானும் புரட்டிப்புரட்டி பார்க்கிறேன் அவரைப்பற்றி ஒரு செய்தியும் காணோம். அவர் உயிரோடு இருந்தபோது அவரைப்பற்றி வெளியே தெரியாமல் இருந்ததைப்போலவே அவரது மரணமும் வெளியே தெரிய வேண்டியதில்லை என்று அவர் விரும்பியிருப்பாரோ? அல்லது பத்திரிகளுக்கு இவரைப்பற்றி எழுதுவதால் ஆதாயம் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
இவர் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நான்கைந்து நாவல்கள் (எண்ணிக்கை எனக்கு சரியாக தெரியவில்லை) எழுதியுள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடன் நாடகப் போட்டியில் பரிசு பெற்ற நாடகமும் உண்டு. ஆங்கிலத்திலும் சூடாமணி ராகவன் என்கிற பெயரில் எழுதியுள்ளதாக அறிகிறேன்.
அவரது எழுத்துக்கள் நம்மை சிறுகுழந்தைபோல் கையைப்பிடித்து அழைத்துச் செல்லும். அவ்வளவு எளிமையாக இருக்கும். படித்து முடித்தவுடன் அந்தக் கதையைவிட்டு வெளியே வர முடியாது. அம்மாடி எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று மலைப்பு தோன்றும். ஒவ்வொரு கதைக்கும் அதே மலைப்பு எனக்கு தோன்றும். எழுத்து என்பதை வரம் என்று சொல்வார்கள். அந்த வரம் இவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. பெண்களின் மற்றும் குழந்தைகளின் மன உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்துவார்.
இவருக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பதாய் அறிகிறேன். அதற்கு பதிலாய்த்தான் அவருக்கு அத்தனை அறிவோ.
அவருக்கு சாகித்ய அகாடமி, ஞான பீடம் போன்ற பரிசுகள் கொடுக்கப்படாததால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாள் அந்த விருதுகள் பெருமையடைந்திருக்கும்.
தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இது போன்ற அற்புதமான எழுத்துக்களை போற்றிப் பாதுகாத்தாலே தமிழ் நிச்சயம் வாழும்.
This entry was posted on 9/18/2010 and is filed under
எழுத்தாளர்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
9 comments:
படைப்பாளிகளில் அவர் ஒரு சூடாமணி. 1960 -இல் விகடன்,கல்கி,கதிர் போன்ற கண்ணியமான அந்தகால பத்த்ரிக்கைகளில் புரட்சி,புதுமை என்ற எந்த லேபல்களும் இல்லாமல் புரட்ச்சியாகவும்,புதுமையாகவும் எழுதியவர்.அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்லானை வேண்டுகிறேன்.
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்காக வருந்துகிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
நல்ல பகிர்வு. நானும் படித்ததில்லை. இனி படிக்க வேண்டும்.
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
சிறப்பான பகிர்வு..அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்..
nanum ithu varai avarathu kadaikal padithathillai...
ini kidaithal miss pana maten....
http://azhiyasudargal.blogspot.com/2010/07/blog-post_27.html?showComment=1284204295681
you can go this link and read all her stories.
thank you.
அருமையான படைப்பு
நன்றி. நான் அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. உங்கள் இடுகைக்குப் பிறகு படிக்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. ஜெயகாந்தன், பு.பியை விட, அல்லது அதற்கு நிகரான ஆளுமை வெளிச்சத்துக்கு வராதது கொடுமை. கவலைபடாதீங்க, அவங்க இறந்துட்டாங்கல்ல... இனிமே எல்லாவிருதையும் அவருக்கு கொடுப்பாங்க. பு.பியை கூட இறந்தபிறகு தானே பெரிய அளவில் கவனிக்க ஆரம்பித்தோம்.