அமீர்கான் படம் 'தாரே சமீன் பர்'. இந்த படத்தில் வரும் சிறுவனுக்கு மூளையில் ஒரு சிறு குறைபாடு. அவன் பார்க்க நார்மலாகத்தான் இருப்பான்.

பசங்களோடு விளைபாடும்போது பந்து தன்னை நோக்கி வரும்போது அவன் மூளை ஒரு இடத்தைச் சொல்லும். அவன் அந்த இடத்தில் போய் பந்தை பிடிப்பான். ஆனால் பந்து வேறு இடத்தில் விழும். இதனால் தன் வயது பிள்ளைகளால் ஒதுக்கப்படுகிறான்.

அதே போல் படிப்பிலும் அவனால் மற்ற பிள்ளைகளைப் போல் படிக்க முடியவில்லை. அவன் பெற்றோர்களுக்கும் இவனது குறைபாடு தெரியவில்லை. அவன் வேண்டுமென்றே படிக்காததுபோல் நினைக்கிறார்கள். அவனை ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார்கள். அம்மாவை பிரிந்து செல்வது அவனால் தாங்க முடியாத துன்பமாக இருக்கிறது. வேறுவழியில்லை. ஹாஸ்டலிலும் அவனுக்கு அதே நிலை. ஆசிரியர்களாலேயே வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் பெற்றோர்களை அழைத்து புகார் செய்கிறார்கள். அவன் அதிகமாக தனிமையை நாடிச் செல்கிறான்.




இந்த நேரத்தில் அவனுக்கு ஒரு புது ஆசிரியர் வருகிறார் (அமீர்கான்). அவர் இந்தச் சிறுவனின் வித்தியாசமான நடவடிக்கைகளை கவனித்து அவனுடைய குறையை கண்டுபிடித்துவிடுகிறார். ஏனென்றால் அவருக்கும் சிறுவயதில் அதே குறைபாடு இருந்திருக்கிறது. உடனே அந்த ஆசிரியர் அவன் பெற்றோரை அணுகி அவனுக்கு மூளையில் இந்த குறைபாடு இருக்கிறது என்கிறார். அவன் பெற்றோர் இவரை திட்டி அனுப்பிவிடுகின்றனர்.

இந்த ஆசிரியர் பிள்ளைகளிடம் வித்தியாசமான அணுகுமுறை உள்ளவர். அவர்களுக்கு புரிகிற விதத்தில் விடையாட்டுடன் பாடம் நடத்தக்கூடியவர். இது மற்ற ஆசிரியர்களுக்கு பிடிக்காது. இவரை மட்டமாகவே பார்ப்பார்கள் (அம்மணமான ஊரில் கோவணம் அணிந்தவன் பைத்தியக்காரன் என்பதைப்போல) இவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்.

அந்தச் சிறுவன் நன்றாக படம் வரைவான். ஒரு வீடு அதில் அம்மா, அப்பா, இரண்டு சிறுவர்கள். அவன் நோட்டில் கார்ட்டூன்போல் வரைந்த படத்தை பேப்பரை வேகமாக புரட்டும்போது ஒரு சிறுவன் மட்டும் அந்த வீட்டில் இருந்து மெல்ல மெல்ல விலகி பிறகு இல்லாமலே போய்விடுகிறான். அவனை ஹாஸ்டலுக்கு அனுப்பப்போவதை நினைத்து அவன் வரைந்த படம். கண்களில் நீரை வரவழைக்கிறது.

பின்னர் அவனை தன்வழிக்குக் அந்தச் சிறுவனை கொண்டு வந்து எப்படி அவனை சரியாக்குகிறார் என்பதுதான் படம். சிறுவனின் தந்தையும் மகனின் குறைபாட்டை நெட்டின் உதவியுடன் உணர்ந்து மகனை பார்க்க வருகிறார்.
This entry was posted on 11/11/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On November 11, 2009 at 5:39 PM , சந்தனமுல்லை said...

மிகவும் அருமையான படம். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

 
On November 11, 2009 at 6:20 PM , பூங்குன்றன்.வே said...

நல்ல படம்.நல்ல விமர்சனம்.
ஆனா எனக்கும் இந்த 'இந்தி' க்கும் ரொம்ப தூரம்ங்க.

 
On November 11, 2009 at 6:50 PM , ஜெயந்தி said...

சந்தனமுல்லை ஊக்கத்திற்கு நன்றி!

வருகைக்கு நன்றி பூங்குன்றன் வேதநாயகம்!
எனக்கும் தமிழைத்தவிர வேறு எந்த லாங்வேஜும் தெரியாது. பிள்ளைகள் இங்கிலீஷ் சப் டைட்டில் பார்த்து ஒவ்வொரு வசனமாக எனக்கு மொழி பெயர்ப்பார்கள்.

 
On November 11, 2009 at 10:34 PM , நேசமித்ரன் said...

நல்ல விமச்ர்சனம்

நல்லா எழுதி இருக்கீஙக

 
On November 12, 2009 at 1:29 AM , Toto said...

ந‌ல்ல‌ ப‌திவுங்க‌..

-Toto
www.pixmonk.com

 
On November 12, 2009 at 1:29 AM , Toto said...

ந‌ல்ல‌ ப‌திவு.. தொட‌ர்ந்து எழுதுங்க‌..

-Toto
www.pixmonk.com

 
On November 12, 2009 at 7:05 PM , ஜெயந்தி said...

நன்றி நேசமித்திரன், Toto!