சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம் போல் வலைப்பூ விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே ஞாபகம் வந்தவர் ஆதி மூல கிருஷ்ணன். (ஆதி: அதுக்கு நாந்தானா கெடைச்சேன்.)

இவரது ஃ ப்ளாக்கை என் மகள் சொல்லித்தான் நான் படித்தேன். 'அம்மா இங்க பாறேன், குருவி பத்தி ஒரு விமர்சனம் சூப்பரா இருக்குது, அப்பறம் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை எல்லாம் நல்லா இருக்கு படிச்சுப் பாறேன்'.

அப்படி படிக்க ஆரம்பித்து இம்ப்ரஸ்சாகி ஃப்ளாக்கையே தலைகீழாக கொட்டிக் கவிழ்த்தாகிவிட்டது. இவரது அறிவுரை சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே அறிவுரை சொல்வது. கல்யாணம் பண்ணிக்காதீங்க என்று சொல்லிக்கொண்டே கல்யாணம் பண்ணிக்கொள்ள தூண்டுவது இவரது தனிச்சிறப்பு.

இவரது தங்கமணி இடுகைகள் அனைத்தும் அருமை. நீங்கள் தங்கமணிகளை கிண்டல் செய்வதைப் பார்த்து கொதித்துப் போயுள்ள பெண்கள் ரங்கமணிகளைப் பற்றி எழுதப்போவதாக ரகசியத் தகவல். (பெண் பதிவர்களிடம் தனி இடுகையே போட்டு மன்னிப்புக்கேட்டார், ஆனாலும் அவர்கள் கோபம் தீரவில்லை.)

சிக்மா பற்றி எளிய முறையில் புரிய வைத்தது, சுஜதாவை நினைவூட்டியது. அவர்தான் விஞ்ஞானக் கட்டுரைகளைக் கூட எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதுவார்.

இவர் வைத்த அயிரை மீன் குழம்பு வாசத்தில் நாக்கில் நீர் சொட்டி, அடுத்த நாள் எங்கள் வீட்டில் மீன் குழம்பு. (அயிரை கிடைக்காததால் சங்கரா மீன்). தக்காளி ரசத்துக்கு ஏனுங்க தக்காளியை வெந்நீரில் போட்டு தோளை உரித்துக்கொண்டு, பச்சையாக புளித்தண்ணீரில் பிசைந்துவிட்டால் போகிறது. நடுநடுவே டிப்ஸ் வேறு தருவார். நாமெல்லாம் இவர் உண்மையிலேயே இதையெல்லாம் செய்வார்னு நம்பனுமாம். ரமா ஏமாறுவதைப் போல் நாங்களெல்லாம் ஏமாந்தவர்களா என்ன?

இவரது எழுத்தின் சிறப்புக்குக் காரணம் இவரது நகைச்சுவை உணர்வுதான். கல்யாண வீடுகள், குடும்ப நிகழ்ச்சிகளில் பார்த்மோமென்றால் ஒரு இடத்தில் ஒரே கூட்டமாக இருக்கும். உள்ளே சென்று எட்டிப்பார்தால் ஒருவர் நடுவில் ஹீரோ போல் அமர்ந்திருப்பார். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருப்பார். கூடி நிற்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அதேபோல் இவரது ஃப்ளாக்கைச் சுற்றி ஒரே கூட்டம்.

கதைகளும் நன்றாகத்தான் எழுதுகிறார். இவரின் 'அழுக்கின் அழகு' சிறுகதை மீது எனக்கு உடன்பாடில்லை. கண்டனங்களும் உண்டு. இவர் கடைசியாகப் போட்டுள்ள ஆயுதம் ஆவணப்படம் க்ளாஸ். ஏங்க வடை தட்டையாகத்தானே இருக்கும். போண்டாபோல் உள்ளதை வடை என்கிறீர்களே?

டிஸ்கி : இவரது ரசிகர் மன்றத்தினர் இவருக்கு பட்டம் கொடுப்பதற்காக மொக்கை திலகம், லொள்ளு சக்கரவர்த்தி, குசும்பு தளபதி போன்ற பெயர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்களாம்.
This entry was posted on 11/20/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On November 20, 2009 at 5:49 PM , ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா...

தாமிரா ஆதியில்ல

கேமிரா ஆதியாகிட்டாரு இப்போ...

 
On November 20, 2009 at 6:15 PM , puduvaisiva said...

புது பட்டம்

இளைஞர்களின் விடிவெள்ளி அண்ணன் "ஆயுதம் " ஆதி
தலைமை ரசிகர் மன்றம் பதிவு எண் 219\2009
மவுண்ட் ரோடு
சென்னை.

குறிப்பு: புதிய உறுப்பினர் சேர்கையின் போது அனைவருக்கும் அண்ணன் ஆதி கையொப்பம் இட்ட ஒரு உருண்டை வழங்கப்படும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
On November 20, 2009 at 6:50 PM , அறிவிலி said...

ஆதியை பற்றிய இடடுகை அருமை. :))))

 
On November 21, 2009 at 12:25 PM , Thamira said...

நண்பர் வெயிலான் சுட்டிக்காட்ட இந்தப்பதிவை அறிந்தேன். உண்மையில் மிக மகிழ்ந்தேன். இதுவரை நீங்கள் எனக்கு பின்னூட்டமிட்டதாகக்கூட நினைவில்லை. இருப்பினும் உங்கள் அன்பு மகிழச்செய்கிறது. நன்றி.

தன்னை வெளிப்படுத்திக்கொண்டிராத உங்களைப்போன்ற உயர்வான நண்பர்கள் தொடர்ந்து இயங்க உந்துசக்தியாக இருக்கிறீர்கள், நன்றி.

(ஆனாலும் மொத்தமாக மொக்கைபார்ட்டி என்று முத்திரை குத்திட்டீங்களே.. அவ்வ்வ்.. எவ்ளோ கதை, டெக்னிகல், லவ் எழுதிக்கிறேன் தெரியுமா.?)

 
On November 21, 2009 at 12:27 PM , Thamira said...

இப்போதான் கவனிக்கிறேன். + ஓட்டு ஒன்று கூட வாங்காவிட்டாலும் இதுவரை ஒரு - ஓட்டு கூட வாங்காதவன் நான். என்னைப்பற்றி எழுதி 2 - ஓட்டு வாங்கியிருக்கீங்க பாருங்க.! என்னத்தச்சொல்ல..

 
On November 21, 2009 at 11:18 PM , ஜெயந்தி said...

நன்றி பிரியமுடன்... வசந்த்!
ஆமா ஆமா

நன்றி புதுவை சிவா!
"ஆயுதம்" ஆதி பட்டம் நல்லாயிருக்கு.
ஒரு உருண்டை ரெடி பண்ணி வையுங்க.

நன்றி அறிவிலி!

 
On November 21, 2009 at 11:30 PM , ஜெயந்தி said...

நன்றி ஆதிமூல கிருஷ்ணன்!
எனக்கு கொஞ்சம் பெரிய ஆட்கள் என்றால் பின்னூட்டமிடக்கூட பயம். உங்களை விமர்சனம் செய்ய முதலில் நிறைய யோசித்து பின்னர் சரி எழுதித்தான் பார்ப்போமே என்று எழுதியது. உங்களைப்போய் யாராலும் மொக்கை என்று சொல்ல முடியுமா? மேக்னடிக் எழுத்து உங்களது.

மைனஸ் ஓட்டு போட்டால் போட்டுவிட்டுப் போகட்டும். அவர்களுக்கு அதில் சந்தோஷம் என்றால் அடையட்டும்.

 
On November 24, 2009 at 5:17 PM , பரிசல்காரன் said...

//எவ்ளோ கதை, டெக்னிகல், லவ் எழுதிக்கிறேன் தெரியுமா.?)//

ஒத்துக்கர்றேன்...! நீயும் ரௌடின்னு ஒத்துக்கறேன் ஆதி!

 
On November 25, 2009 at 2:17 PM , நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள் ஆதி.

 
On November 27, 2009 at 12:24 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி பரிசல்காரன்!
வருகைக்கு நன்றி நர்சிம்!
ஆதிக்காக வந்திருக்கீங்கதானே?

 
On November 27, 2009 at 1:12 PM , pudugaithendral said...

நானும் ஆதிக்காக வந்தேன். நம்ம ஃப்ரெண்ட் அவரு. நல்லா எழுதியிருக்கீங்க.

 
On November 27, 2009 at 2:14 PM , ஜெயந்தி said...

நன்றி புதுகைத் தென்றல்!