இந்த முறை வலைப்பூ விமர்சனத்திற்கு சிக்கியவர் சந்தன முல்லை. "சித்திரக்கூடம்"

சந்தன முல்லை. இந்தப் பெயர்தான் என்னை அவர்பால் ஈர்த்தது. ஃப்ளாக்கை படிக்க ஆரம்பித்தால் அங்கே தாய்மை நதி ஓடிக்கொண்டிருந்தது. என் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது என் நிலையை எனக்கு உணர்த்தியது.

மகளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து கவிதையாக்கியுள்ளார். கண்ணை மூடிக்கொண்டு சோப்பு போடச் சொல்வது, மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பது போன்றவை அருமை. பப்புவிற்கு கடிதம் எழுதுவது வித்தியாசமான முயற்சி. பிறந்த நாளுக்கு ஹோமுக்கு அழைத்துச் சென்று அந்த குழந்தைக்கு சிறு வயதிலேயே சமூக உணர்வை ஊட்டியது மிகவும் நல்ல செயல்பாடு. நம் ஒவ்வொருக்குள்ளும் இந்த சிந்தனை இருந்தால் நன்றாக இருக்கும். காது குத்தும் படலம் அமர்க்களம்.

ஜுன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் குறித்த இவரது கட்டுரை சிறப்பானது.சிறு வயது பயண அனுபவக் கட்டுரையின் போது நாமும் அவருடனே பயணித்தோம். பண்ருட்டி பலாச்சுளைகளை நாமும் உண்டுகொண்டு வடலூரை நெருங்கும்போது சாராய பேக்டரியின் நாற்றத்தின் காரணமாக மூக்கை மூடிக்கொண்டும் பயணிக்கிறோம்.

மகளை முதன்முதலில் டூருக்கு அனுப்புப் அனுபவம். அந்த திகதிக் பக்பக் அந்த உணர்வு, குழந்தை அந்த சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பும் மனது அடுத்த நிமிடமே குழந்தையின் பாதுகாப்பு குறித்த பயத்தில் பின்வாங்குவது நல்ல தடுமாற்றம்.

தன்னுடைய மகளின் பயணத்தினூடே தன்னுடைய சிறு வயது நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார். தென்கச்சிக்கு எழுதிய கடித்திற்கு பாட்டியின் ரியாக்ஷன். (எனக்கு இப்போது 46 வயது ஆகிறது. ஆதிமூல கிருஷ்ணனின் ஃபிளாக்கை நான் விமர்சித்ததை பார்த்து என் அம்மா 'எதுக்கு இந்த ஃப்ளாக் எழுதுற வேலையெல்லாம். இதை நிறுத்தச் சொல்லு' என்று என் மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.)

இவர் ரொம்ப சீனியர். 2006ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் கணவன் மனைவி சண்டை போடுவது அன்பால் பிறகு இணைவது போன்ற கதைகளும் ஜோக்குகளும் எழுதி இருக்கிறார். 'சண்டக்கோழி' சூப்பர். 'ஜில்லுனு ஒரு காதல்', 'கற்றது தமிழ்' படங்களை லொள்ளு சபா ஸ்டைலில் கலக்கல் கிண்டல். அதற்கு விளம்பர இடைவேளை வேறு. இவரது எழுத்து சரளமாகவும் வாசிக்க பிடித்தாகவும் இருக்கிறது. இவர் சிறு வயது முதல் நிறைய படித்ததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். பள்ளி அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.

'பதிவர்கள் ஒரு ஜாலி கற்பனை' அப்போதைய நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டதுபோல் இருக்கிறது. எனக்கு புரியவில்லை. பாலி சாகு மற்றும் பாப் மாலி, ஸ்டீவன் கபூர் அகா, அப்பாச்சி இந்தியன், நஃப் வைப்ஸ், இலா அருண்இ கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரெமோ, உஷா உதூப், சுனிதா, சுவேதா, சுசித்ரா போன்ற பாப் இசைக் கலைஞர்களை அனுபவித்து அறிமுகம் செய்கிறார்.

பப்புவுடனேயே இவரது ஃப்ளாக்கும் வளர்கிறது.

குறிப்பு: என் குழந்தைகளுடனேயே நானும் வளர்ந்தேன். அவர்கள் என் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். எனது சிறந்த நண்பர்கள் அவர்கள்தான்.
|
This entry was posted on 11/27/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On November 28, 2009 at 12:48 PM , சந்தனமுல்லை said...

நன்றி! என்னை இப்படி ஒரு இடுகைக்குள் 'அடக்கி'விட்டீர்களே! அவ்வ்! :-) பழைய இடுகைகளையும் வாசித்து ரசித்திருக்கிறீர்கள்...மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே சமயம் பாவமாகவும், உங்களை நினைத்து! :-)) என்னையும் தங்களது நாஸ்டால்ஜிக் போஸ்ட்கள் தான் ஈர்த்தது! தொடர்ந்து எழுதுங்கள்!

 
On November 28, 2009 at 1:56 PM , Thamiz Priyan said...

பப்புவின் ஆச்சி சந்தனமுல்லை என்று தலைப்பு இருக்க வேண்டும்..:-) நல்ல அறிமுகம்.

பப்பு பேரவை சார்பாக

தமிழ் பிரியன்
தோஹா கத்தார்

 
On December 2, 2009 at 4:13 PM , ஜெயந்தி said...

நன்றி சந்தன முல்லை!
இறங்கிய பிறகு படித்துத்தானே ஆக வேண்டும்? ஆனால் நல்ல பதிவுகள்.

நன்றி தமிழ் பிரியன்!
நீங்கள் சொன்ன தலைப்பும் நன்றாக இருக்கிறது.