முதல் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்போது இரண்டாவது குழந்தை பிறக்கும். சின்னக்குழந்தை என்பதால் அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு 24 மணி நேரமும் இருக்கும். அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே சின்னக்குழந்தையைப் பற்றி விசாரித்தபடியே வருவார். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் புதிதாக பிறந்துள்ள குழந்தையை பார்த்து கொஞ்சிவிட்டுச் செல்வார்கள். பெரிய குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கும்.

நமக்கு அது பெரிய குழந்தை. அதற்கு அவ்வளவு கவனிப்புத் தேவையில்லை. சின்னக்குழந்தைக்குத்தானே கவனிப்பு அவசியம். உண்மைதான்.
மூன்று நான்கு வருடமாக பெரிய குழந்தைதான் நமது முழு போகஸ் ஆக இருந்திருக்கும். அப்பா அந்தக்குழந்தையைத்தான் அழைத்துக்கொண்டே உள்ளே நுழைவார். அம்மா எப்போதும் அந்தக் குழந்தையைத்தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இன்னொரு குழந்தை உள்ளே நுழைந்து அத்தனையையும் தட்டிப்பறித்துகொள்வதை அந்த பெரிய குழந்தையின் இடத்திலிருந்து யாராவது பார்த்திருக்கிறோமா?

அலுவலகத்தில் நமக்கு 6 மாதம் பின்னால் வந்த ஒருவருக்கு பிரமோஷன் தந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் பெரியவர்கள். நம்மாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தைக்கு எப்படி இருக்கும். சிறு வயதில் உண்டாகும் இந்த ஏக்கம் எப்போதுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பெரிய குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போது சின்னக்குழந்தை 3ம் வகுப்பு படிக்கும். அப்போதும் அதுதான் சின்னக்குழந்தை.

இரண்டு பேருக்கும் ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும்போது விலையிலோ தரத்திலோ சின்ன வித்தியாசம்தான் இருக்கும். நாம் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டோம். எதேச்சையாகத்தான் நடந்திருக்கும். பெரிய குழந்தையின் மனதில் நாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு வரும். இரண்டு பேருக்குள்ளும் பாசம் எல்லாம் இருக்கும். ஆனால் இந்த உணர்வை மட்டும் நம்மால் கடைசி வரை மாற்ற முடியாது.

எனவே பெற்றோர்களே! கொஞ்சம் கவனமாக இருந்து பிஞ்சு மனங்களை பூ வாக்குவோம்!
This entry was posted on 11/25/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On November 25, 2009 at 2:14 PM , Vijay Anand said...

நல்ல பதிவு., ஜெயந்தி

 
On November 25, 2009 at 2:27 PM , கிரி said...

சரியா கூறி இருக்கீங்க.. இது பற்றி நானும் நினைத்து இருக்கிறேன்.

 
On November 25, 2009 at 3:32 PM , malar said...

nalla pathivu

 
On November 27, 2009 at 12:26 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி மலர்!
வருகைக்கு நன்றி கிரி!
வருகைக்கு நன்றி விஜய் ஆனந்த்!

 
On November 27, 2009 at 1:11 PM , புதுகைத் தென்றல் said...

அருமை,

நீங்கள் அனுமதித்தால் இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் பதிய விருப்பம்

 
On November 27, 2009 at 1:20 PM , K.S.Muthubalakrishnan said...

நல்ல பதிவு.,

 
On November 27, 2009 at 2:12 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி கே.எஸ்.முத்துபாலகிருஷ்ணன்!
வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்!
பேரண்ட்ஸ் கிளப்பில் பதியுங்கள். எனக்கு அதில் சந்தோஷம்.

 
On November 27, 2009 at 3:20 PM , புதுகைத் தென்றல் said...

http://parentsclub08.blogspot.com/2009/11/blog-post_27.html

பேரண்ட்ஸ் கிளப்பில் போட்டாச்சு. நன்றி

 
On November 27, 2009 at 5:33 PM , Mrs.Menagasathia said...

நல்ல பதிவு!!

 
On December 2, 2009 at 4:06 PM , ஜெயந்தி said...

நன்றி புதுகைத் தென்றல்!
நன்றி Mrs.Menagasathia!