இந்தப் படத்தைப் (பாகம் 1) பார்க்கும்போது, அந்தப் பையனுக்கு பள்ளியின் மீதும் படிப்பின் மீதும் இருக்கும் வெறுப்பு, அதனால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகள் போலவே எனக்கும் பள்ளிக்கூட நாட்களில் இருக்கும் என்று என் மகனிடம் கூறினேன். உடனே அவன் சொன்னான் இந்தப் படத்தைப் பார்த்த 90 சதவீதம் பேருக்கு இந்த உணர்வுதான் ஏற்பட்டதாம் என்றான்.

எனக்கு என் பள்ளி நாட்கள் நினைவில் வந்தன. திண்டுக்கல் பக்கத்தில் 5ம் வகுப்பு வரை உள்ள சிறு கிராமம். அங்குதான் 5ம் வகுப்பு வரை படித்தேன். 6ம் வகுப்பிற்கு திண்டுக்கலில் கான்வென்ட் என்று அழைக்கப்படும் (செயின்ட் ஜோசப்ஸ் ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்) கிறிஸ்துவ பள்ளிக்கூடம். பெரிய பள்ளிக்கூடம். காதல் படத்தில் சந்தியா படிக்கும் பள்ளிதான்.

5ம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் பிக் ஏபிசிடி மட்டுமே தெரியும். ஸ்மால் ஏபிசிடி என்றால் என்னவென்றே தெரியாது. 6ம் வகுப்பில் 80-90 பக்கமுள்ள ஆங்கிலப் புத்தகம். ஒரு 10 பாடங்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வாரம் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டேன். இந்த ஒரு வாரத்தில் அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பாடம் நடத்திவிட்டார்கள் போல் இருக்கிறது. நான் போன அன்று டிக்டேஷன். எல்லோரும் டீச்சர் வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல புத்தகத்தைப் பார்க்காமல் எழுத வேண்டும். என் நிலையை யோசித்துப் பாருங்கள். எனக்கு வலது பக்கத்தில் இருந்த பெண் எனது இடதுபுறமுள்ள பெண்ணை பார்த்து எழுதிக்கொண்டிருந்தார். என்னையும் அவ்வாறே எழுதச் சொல்லி சாடை காட்டினார். நான் எனது இடதுபுறமுள்ள பெண் எழுதுவதை பார்த்தேன். ஸ்மால் லெட்டர்சில் வேகவேகமாக எழுதிக்கொண்டிருந்தாள். என்னால் அதைப் பார்த்தே எழுத முடியவில்லை. புரியவேயில்லை. எனக்குத்தான் ஸ்மால் ஏபிசிடியே தெரியாதே.

நல்ல வேளை மற்ற பாடங்கள் எல்லாம் தமிழிலேயே இருந்தன. அதுவும் கஷ்டம்தான். ஆனால் எழுத்துக்கூட்டி படிக்கவாவது முடியுதே. நான் படித்த பத்தாம் வகுப்பு வரையில் ஒருமுறைகூட ஆங்கிலத்தில் பாஸ் ஆனதே கிடையாது. மற்ற பாடங்களிலும் ஒன்று அல்லது இரண்டில் பெயில் ஆகி விடுவேன். தமிழிலும், கணக்கிலும் மட்டும் எப்போதும் பாஸ் பண்ணிவிடுவேன்.

இந்த லட்சணத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வந்தது. அந்த வருடம்தான் 11ம் வகுப்பை எடுத்துவிட்டு +2 கொண்டுவந்தார்கள். நாங்களும், 11ம் வகுப்பு பசங்களும் ஒன்றாக பொதுத்தேர்வு எழுதினோம். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதினேன்.

ரிசல்ட் வந்துவிட்டது என்று காலையிலேயே ஊரே அல்லோல கல்லோலப்பட்டது. எங்கள் வீட்டிலும் மாமா பேப்ரில் என் நம்பரை தேடிக்கொண்டிருந்தார். அது எங்கே இருக்கப்போகிறது என்று நானும் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம் என் நம்பர் வந்திருந்தது.

மாமாவிற்கும் அதே ஆச்சரியம்தான். அந்த வருடம் புதிதாக 10ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வைத்ததால் 30 சதவீதம் பேர்கூட பாசாகவில்லை என்றதால் பார்டரில் இருந்த கொஞ்சம் பேருக்கு மார்க் போடப்பட்டு பாசாக்கப்பட்டதாக பேப்பரில் செய்தி வந்திருந்தது. உடனே மாமா சொல்லிவிட்டார் நீ எப்படி பாசானேன்னு இப்போ தெரியுது.
This entry was posted on 11/12/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On November 12, 2009 at 9:00 PM , prathiba said...

sollave illa.. :)

 
On November 13, 2009 at 2:05 PM , மதிபாலா said...

5ம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் பிக் ஏபிசிடி மட்டுமே தெரியும். ஸ்மால் ஏபிசிடி என்றால் என்னவென்றே தெரியாது. 6ம் வகுப்பில் 80-90 பக்கமுள்ள ஆங்கிலப் புத்தகம். ஒரு 10 பாடங்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வாரம் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டேன். இந்த ஒரு வாரத்தில் அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பாடம் நடத்திவிட்டார்கள் போல் இருக்கிறது. நான் போன அன்று டிக்டேஷன். எல்லோரும் டீச்சர் வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல புத்தகத்தைப் பார்க்காமல் எழுத வேண்டும். என் நிலையை யோசித்துப் பாருங்கள். /

எனக்கெல்லாம் ஒன்பதாம் வகுப்பு போற வரைக்கும் கிராமர்னாலே என்னன்னு தெரியாது...


அனுபவம் சுவாரஸ்யம்

 
On November 13, 2009 at 3:46 PM , சந்தனமுல்லை said...

அழகாக எழுதிருயிருக்கிறீர்கள்! நல்ல அனுபவம்! உங்க மாமாவுக்கு செம சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் போல:)))

 
On November 14, 2009 at 6:36 AM , Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள்
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

 
On November 14, 2009 at 6:08 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி பிரதீபா!

நன்றி மதிபாலா!
நம் கல்வி அமைப்பு அப்படி இருக்கிறது.

 
On November 14, 2009 at 6:09 PM , ஜெயந்தி said...

நன்றி சந்தனமுல்லை!
ஆமாம்.

நன்றி தமிழ்நெஞ்சம்!