சின்னத் தாய் அவள்
10/22/2009 | Author: ஜெயந்தி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 போட்டியில் கலந்து கொண்டவர்களில் பிரியங்காவும் அவரது தாயாரும் என்னுள் வந்தார்கள்,

ஆரம்ப சுற்றுகளில் எல்லாம் பிரியங்கா பாடும் போதெல்லாம் அவரது தாயாரின் கண்களில் தண்ணீர் வழிந்துகொண்டிருக்கும். பிரியங்கா பாடும் பாடல்கள் எல்லாம் பழைய நாம் அதிகம் கேட்டறியாத மிக நல்ல பாடல்களாகவே இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் அவர் பாராட்டுதல்களோடு செலக்ட் செய்யப்படுவார்.

ஒரு முறை நடுவர்கள் உனக்கு யார் இந்தப் பாடல்களை சொல்லித்தருகிறார்கள் என்று கேட்டனர். தன் தாயார் சொல்லித்தருவதாக சொன்னார். அவளது தாயை அழைத்து பாடச் சொன்னார்கள். அப்போதும் கண்களில் கண்ணீரோடு மகள் பாடிய அதே பாடலை பாடினார். மிகவும் அற்புதமாக பாடினார். நடுவர்கள் இப்போது தெரிகிறது பிரியங்கா எப்படி இவ்வளவு நன்றாக பாடுகிறாள் என்று என்று பாராட்டினார்கள்.

அதன் பிறகு அந்தத் தாயின் கண்களில் கண்ணீர் இல்லை. ஒரு புன்சிரிப்பு மட்டுமே இருக்கும். மோனாலிசாவின் ஓவியத்தில் வரும் புன்னகை போல் இருக்கும்.

இறுதிச் சுற்றுகளில் வேறு நடுவர்கள் (பிரபல பாடகர்கள்) அந்தச் சுற்றுகளிலும் பிரியங்கா நன்றாகவே பாடினார். இப்போது நடுவர்கள் அந்தத் தாயை அழைத்து பாடச் சொன்னார்கள்.

மகள் பாடிய அந்தப் பாடலை மகளை விடவும் அருமையாகப் பாடினார்.

"சின்னத்தாய் அவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே"
This entry was posted on 10/22/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On October 22, 2009 at 9:08 PM , உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

 
On October 28, 2009 at 4:51 PM , ஜெயந்தி said...

பின்னூட்டத்திற்கு நன்றி!

 
On October 28, 2009 at 5:04 PM , சந்தனமுல்லை said...

நான் அந்நிகழ்ச்சியை பார்ப்பதில்லை! நீங்கள் சொன்னபின் ஆர்வமேற்படுகிறது!! :-)

 
On October 28, 2009 at 6:51 PM , ஜெயந்தி said...

நன்றி சந்தன முல்லை!
எங்கு பார்த்தாலும் ரியாலிட்டி ஷோக்கள் என்பதால் அலுப்பு ஏற்பட்டுவிட்டது. அதையும் மீறி குழந்தைகள் நம்மை ஈர்த்துவிடுகின்றனர்.