மழையே மழையே
10/30/2009 | Author: ஜெயந்தி
இந்த வருடம் பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. கிணற்றில் இப்போதே தண்ணீர் கீழே உள்ளது. வெயில் காலத்தில் தண்ணீருக்கு அலையப் போகிறோம் என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை, மழை வயிற்றில் பாலை (நீரை) வார்த்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை வீடுகளுக்குள் வரும் அளவுக்கு பெய்கிறது. ஆனால் அவ்வளவு நீரும் சாக்கடை வழியாக கடலில்தானே போய் சேர்கிறது.

நம் முன்னோர்களெல்லாம் மழை நீரை குளம், கம்மாய், ஏரி என்று சேமித்து வைத்து வளமாக வாழ்ந்தார்கள். நாம் அவற்றையெல்லாம் பிளாட் போட்டு விற்று வீடு கட்டிக்கொண்டு மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது என்று புலம்பிக்கொண்டு இருக்கிறோம்.

வெயில் காலத்திலோ தண்ணீருக்காக குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருவில் திரிய வேண்டும். சென்னையில் சின்டெக்ஸ் டேங் வைத்து லாரிகளில் நீரை கொண்டுபோய் அதில் ஊற்றிவிடுவார்கள். அந்தத் தெருவாசிகள் வரிசையில் நின்று தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். குறுக்கும் மறுக்கும் ஓடும் இந்த தண்ணி லாரிகளினால் அதிகளவில் விபத்துக்கள் நடப்பது தனிக்கதை.

அமெரிக்காவில் நம் அளவு மழைதான் பெய்யுமாம். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர்கூட கடலில் கலக்காதாம். அவ்வளவும் சேமிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. வெளி நாட்டினரிடமிருந்து எதை எதையோ பின்பற்றும் நாம் இதை பின்பற்ற முடியாதா? நல்ல விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என்று அழைத்து திட்டம் தீட்டி இதை செய்ய முடியாதா என்ன? ( நம் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுநர்களும்தான் வெளிநாட்டை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்)

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி நம் குடி என்று பேசிக்கொண்டே நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடுவார்கள் போல் இருக்கிறது. (மூத்த குடி என்பதை தவறாகப் புரிந்துகொண்ட நம் குடிமக்கள் டாஸ்மாக்கில் கும்பல் கும்பலாய் நிற்கிறார்கள். ரேஷன் கடைகளில் கூட அவ்வளவு கூட்டம் இல்லை.)

ஒரே ஒரு காமராஜரை இன்னும் எத்தனை காலத்துக்கு உதாரணம் காட்டிக்கொண்டிருக்கப் போகிறோம். (அவர் காலத்தில்தான் நிறைய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன)
This entry was posted on 10/30/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On November 1, 2009 at 4:45 PM , புலவன் புலிகேசி said...

நல்ல சிந்தனை இடுகை.

//நம் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுநர்களும்தான் வெளிநாட்டை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்//

இங்குள்ள அரசியல் வாதிகள் இது போன்ற அறிவியலாளர்களை ஆதரிப்பதை விட்டு நீங்கள் சொன்ன டாஸ்மாக் ஐ தான் ஆதரிக்கிறார்கள்.........

 
On November 1, 2009 at 6:33 PM , பின்னோக்கி said...

சென்னையில ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த போது, மழை நீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதிலிருந்து நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. நீங்க சொன்ன மாதிரி பெய்யுற மழைய இன்னும் நிறைய சேமிக்கனும். கடல் நீர் -> குடிநீர் நல்ல விஷயம் தான். அதுக்காக அதுல கமிஷன் நிறைய வருதுன்னு, பெய்யுறத சேமிக்காம இருக்க கூடாது. இந்த மழை பத்தாதுங்க. இன்னும் பெய்யனும்.

(பின்னோக்கின்னு யாராவது எழுதுனாலே எனக்கு பீதியாகிடுதுங்க :) )

 
On November 4, 2009 at 7:01 PM , ஜெயந்தி said...

சரிதான் புலிகேசி.
கருத்திற்கு நன்றி!

நன்றி பின்னோக்கி!
இந்த வருடமும் நல்ல மழை பெய்யும்!