நேற்று... இன்று... நாளை...
10/28/2009 | Author: ஜெயந்தி
நேற்று...

டீவியின் ரிமோட் யாரால் கைப்பற்றப்படுகிறதோ (அடிதடி ரகளைக்குப்பின்) அவர்களின் விருப்ப சானல் ஓடிக்கொண்டிருக்கும். மகனுக்கு கிரிக்கெட், புட்பால், டென்னிஸ் போன்றவை. மகளுக்கு பிற மொழி சேனல்கள் (ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்). அம்மாவுக்கு சீரியல்கள். கணவருக்கு நியூஸ் சேனல். நம்மளுக்கு பாட்டு மற்றும் காமெடி சீன்கள்.

மகளுக்கு படிப்பின் மீது கொஞ்சம் (நிறைய) ஆர்வம் அதிகம். "எனக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு அந்த டீவிய ஆஃப் பண்ணுங்க."
"எக்ஸாமுனாலும் பரவாயில்ல டெஸ்டுக்கெல்லாம் ஆஃப் பண்ண முடியாது. வேணும்னா ரூமுக்குள்ள போய் கதவை மூடிக்கிட்டு படி." (வருடம் முழுவதும் ஒன்று டெஸ்ட் இருக்கும் இல்லைன்னா எக்ஸாம் இருக்கும்)
மகளின் புலம்பல்: எல்லா வீட்டுலயும் டீவிய ஆஃப் பண்ணிட்டு புள்ளைங்கள படிக்க வைக்கிறாங்க, இங்க எல்லாமே தலைகீழ்.

இன்று...

ஞாயிற்றுக்கிழமை, கம்ப்யூட்டரை யார் கைப்பற்றுவது என்று காலையில் இருந்தே போர் தொடங்கிவிடும். மகனுக்கு ஆங்கிலப் படங்கள், ஆர்க்குட் ஸ்கிராப்புகள், சாட்டிங்... மகளுக்கு படிப்பு சம்பந்தமான வேலை. காலையில் இருவரும் தொடங்கிவிடுவார்கள். கணவர் ஏதோ வேலையாக வருவது போல் சைடில் கம்ப்யூட்டரை பார்த்தபடி வந்து வந்து போய்க்கொண்டிருப்பார். கொஞ்சம் கேப் கிடைத்தாலும் அம்மா உட்கார்ந்துவிடுவார்கள் (வயது 66. இரண்டு கேம்ஸ் தெரியுமுங்கோ). நமக்குத்தான் ப்ளாகில் நிறைய வேலை இருக்கிறதே. இதற்கு நடுவில் கடைக்காரப் பையன் தண்ணீர் கேன் எடுத்து வருவான். அவன் வரும்போது யார் கம்யூட்டரில் அமர்ந்து இருந்தாலும் எழுந்துவிட வேண்டும். அவனுக்கு ஐந்து நிமிடம் டைம், ஐந்தாவது நிமிடம் அவனுடைய செல்போனுக்கு அவனுடைய கடை ஓனர் மிஸ்டு கால் கொடுப்பார், உடனே ஓடிவிடுவான். அவனுக்கும் கேம்ஸ்.
மகளின் புலம்பல்: படிப்புக்கு கம்யூட்டர குடுக்க மாட்டேங்கறாங்க.

நாளை...
This entry was posted on 10/28/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On October 28, 2009 at 4:39 PM , சந்தனமுல்லை said...

:-))) /மகளின் புலம்பல்: படிப்புக்கு கம்யூட்டர குடுக்க மாட்டேங்கறாங்க./

அதானே!!

 
On October 28, 2009 at 5:47 PM , க.பாலாசி said...

//மகளுக்கு படிப்பின் மீது கொஞ்சம் (நிறைய) ஆர்வம் அதிகம். //

எங்க போனாலும் இப்டித்தானா? ஒரே போட்டியாத்தான் இருக்கு..

கம்யூட்டரயாவது விட்டுக்கொடுங்க....

நைஸ் போஸ்ட்...

 
On October 28, 2009 at 8:46 PM , சுந்தரா said...

ஆளாளுக்கு இவ்வளவு நேரம்னு

அட்டவணை போட்டாப்போச்சு.

 
On October 29, 2009 at 3:05 PM , ஜெயந்தி said...

நன்றி சந்தன முல்லை
மகளுக்கு மடிக்கணினி வாங்கிக் கொடுத்தாச்சுங்க. (வேற வழி)

நன்றி க.பாலாசி
ஹி... ஹி...


நன்றி சுந்தரா
நல்ல யோசனைதான். அதுலயு எனக்குத்தான் அதிக நேரம்னு சண்டை வரும்.

 
On October 29, 2009 at 9:49 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

வீட்டுக்கு வீடு வாசப்படிங்கறது சரியாத்தான் இருக்கு :)
உங்களூக்கு அதிக நேரம் கணினி கிடைக்க வாழ்த்துகிறேன்.

 
On October 30, 2009 at 6:00 PM , ஜெயந்தி said...

நன்றி முத்துலெட்சுமி!
புதியவளானாலும் என்னையும் படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி!